Kelambakkam Honour Killing: கேளம்பாக்கம் அடுத்த தையூரில் மகளின் காதலனை தந்தையே கூலிப்படையை ஏவி கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம். சென்னை கேளம்பாக்கம் அடுத்த தையூர் சின்னமா நகரை சேர்ந்த இளைஞர் பிரவீன்குமார்(22) டிப்ளோமா படித்துவிட்டு எலெக்ட்ரிசியனாக பணி செய்தார்.
இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் அவரை வெட்டிவிட்டு சென்றனர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பிரவீன்குமார் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இது சம்மந்தமாக கேளம்பாக்கம் போலீசில் பிரவின்குமார் தாய் பார்வதி(48) என்பவர் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரவீன்குமார் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக தெரிகிறது.
இதனால் கேளம்பாக்கம் போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி
பிரேதப்பரிசோதனை செய்து உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். வாகனத்தில் உடலை வீட்டிற்கு கொண்டுவரும் வழியில் கேளம்பாக்கம் தையூர் பைபாஸ் சாலை ரவுண்டனா பகுதியில் உறவுனர்கள் நண்பர்கள் வாகனத்தை நிறுத்தி பிரவீன்குமார் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அதே தையூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்த நிலையில் அவரின் தந்தை தவெக நிர்வாகி எழுமலை, அவரது மகன் கவுதம் ஆகியோர் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக மறியலில் ஈடுபட்டவகள் தெரிவித்து அவர்களை கைது செய்ய வேண்டும் என கூறினர்.
இதனையடுத்து கேளம்பாக்கம் போலீசார் உறவினகளிடம் சமாதனம் பேசி கலைய செய்த நிலையில் தையூரை சேர்ந்த தவெக நிர்வாகி ஏழுமலை அவரது மகன் கவுதம், கைது செய்து விசாரணை செய்தபோது, ஒட்டியம்பாக்கம் அடுத்த காரணையை சேர்ந்த சதீஷ் என்பவன் மூலம் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிய வந்தது.
மேலும் அதே தையூரில் வசிக்குன் கூலிப்படையை சேர்ந்த நிதிஷ், மணிகண்டன் ஆகியோரை கைது செய்த நிலையில் முக்கிய குற்றவாளி சதிஷை போலீசார் தேடி வருகின்றனர்.
3 ஆண்டுகளாக அப்பெண்ணை காதலித்து வந்த பிரவீன்குமாரை தவெக நிர்வாகி ஏழுமலை ஏற்கனவே பிடித்து செல்போனை பிடுங்கி அடித்து மிரட்டி அனுப்பியதாகவும், ஆனாலும் தொடர்ந்து அவர்கள் காதல் செய்ததாகவும் இதனால் கூலிப்படையை ஏவியதாக போலீசாரிடம் ஏழுமலை, கவுதம் ஆகியோர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 4 பேர் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர், முக்கிய குற்றவாளி சதிஷை கேளம்பாக்கம் போலீசார் தேடிவருகிறார்கள்
பிரவீன் குமார் ஆணவக்கொலைக்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, "செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் அருகே தையூர் சின்னம்மா நகர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் பிரவீன்குமார், கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவு வீட்டின் அருகே நின்றிருந்தபோது காரில் வந்த கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை தொடர்பாக பெண்ணின் சகோதரர் கவுதம், தவெக பிரமுகர் ஏழுமலை உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொலைக்கும் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் சதீஷை காவல்துறை தீவிரமாகத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள சதீஷை உடனடியாக கைது செய்வதுடன், இந்தக் கொலைக்குப் பின்னால் உள்ள முழுமையான சதித்திட்டத்தையும் காவல்துறை விசாரிக்க வேண்டும். வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் உரிமையை குடும்பத்தின் பொருளாதார அந்தஸ்து அல்லது சமூக மதிப்பின் பெயரில் மறுப்பதும்,அதற்காக ஒரு உயிரைப் பறிப்பதும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆணவக்கொலைகள் வெவ்வேறு சாதிகளுக்கு இடையிலும், ஒரே சாதிக்குள்ளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இதை உணர்ந்துதான் ஆணவக்கொலைகளைத் தடுக்கவும்,குற்றவாளிகளைத் தண்டிக்கவும் தனிச்சட்டம் தேவை என்ற கோரிக்கை எழுகிறது.
இனியும் தாமதிக்காமல் ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டத்தை முதல்வர் விஜய் அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.