• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /சென்னை மெட்ரோவில் இதையெல்லாம் செய்யாதீங்க.. ரூ.2500 அபராதம் - அலர்ட் பயணிகளே!

சென்னை மெட்ரோவில் இதையெல்லாம் செய்யாதீங்க.. ரூ.2500 அபராதம் - அலர்ட் பயணிகளே!

Chennai Metro Rail Rules: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் கட்டாயம் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் ரூ.2500 அபராதம் விதிக்கப்படும். எனவே, மெட்ரோ ரயில் விதிமுறைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்

Written ByUmabarkavi K
Published: Aug 07, 2026, 05:21 PM IST|Updated: Aug 07, 2026, 06:34 PM IST
joinshare
சென்னை மெட்ரோவில் இதையெல்லாம் செய்யாதீங்க.. ரூ.2500 அபராதம் - அலர்ட் பயணிகளே!
Image Credit: Image Source: CMRL Website

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

2

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

3

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

4

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

5

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai Metro Rail: சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. மெட்ரோ ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து  வருகின்றனர். மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, வார நாட்களில் பீக் ஹவரில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனால் ஒவ்வொரு 2 முதல் 3 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  இதற்கிடையில், மெட்ரோ ரயிலில் பயணிகள் சத்தமாக பேசப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து, அபராத தொகையை உயர்த்தியுள்ளது. 

ரூ.2500 அபராதம்

சென்னை மெட்ரோ இரயில் பயண ஒழுங்குமுறைகளின்படி, விதிகளை மீறி மற்றவர்களுக்குஇடையூறு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.  மெட்ரோ இரயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002 பிரிவு 59-ன் கீழ், சக பயணிகளுக்குத்தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோதண்டனைக்குரிய குற்றமாகும்.

இதற்கான அபராதத் தொகை பிரிவு 59-இன் கீழ், முன்பிருந்த ரூ.500-லிருந்து தற்போது அதிகபட்சமாக ரூ.2,500 வரைஉயர்த்தப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறும் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோவளாகத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோவில் என்னென்லாம் செய்யக் கூடாது?

Metro Passengers, Attention!

Playing music on speaker, watching videos aloud, or creating loud disturbances can attract a fine of up to ₹2,500.

🎧 Use headphones.
🤝 Respect fellow passengers.
🚇 Let's keep Chennai Metro comfortable for everyone.#ChennaiMetro #CMRL… pic.twitter.com/lPFFpjEgKz

— Chennai Metro Rail (@cmrlofficial) July 11, 2026

  • அலைபேசியில் உரத்த குரலில் உரையாடுதல்;

  • செவியில் பொருத்தி கொள்ளும் ஒலிபெருக்கி (Headphones) இன்றி இசை அல்லதுவீடியோக்களைப் பார்ப்பது

  • அலைபேசியில் மெட்ரோ இரயில்களிலும் வளாகங்களிலும் ஒலிபெருக்கி வசதியைப் பயன்படுத்துதல்(Speaker mode)

மேற்கண்ட செயல்கள் மூலம் அதிகப்படியான இரைச்சலை ஏற்படுத்தும் வகையில்அலைபேசிகளைப் பயன்படுத்துவதும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் தண்டனைக்குரியகுற்றமாகக் கருதப்படும்.

  • இறங்குபவர்களுக்கு முன்னுரிமை: இரயிலில் ஏறுவதற்கு முன், உள்ளே இருக்கும் பயணிகள் முதலில்கீழே இறங்க வழிவிடுங்கள்.

  • இரயில் கதவுகளை அடைக்காதீர்கள்: இரயில் கதவுகளுக்கு அருகில் நின்று கொண்டு, பயணிகள்வந்து செல்வதற்குத் தடையாக இருக்காதீர்கள்.

  • மஞ்சள் கோட்டைத் தாண்டாதீர்கள்: நடைமேடையில் இரயிலுக்காகக் காத்திருக்கும்போது, பாதுகாப்பு மஞ்சள் கோட்டைத் தாண்டி நிற்க வேண்டாம்.

  • நகரும் படிக்கட்டு விதிமுறை: நகரும் படிக்கட்டுகளை பயன்படுத்தும்போது, மற்றவர்களுக்கு வழிவிடும்வகையில் "இடப்பக்கம் நில்லுங்கள், வலப்பக்கம் நடங்கள்" (Stand Left, Walk Right) என்றமுறையைப் பின்பற்றுங்கள்.

செய்ய வேண்டியவை

சக பயணிகளின் பயணச் சூழலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் செவியில் பொருத்திகொள்ளும் ஒலிபெருக்கியை (Headphones) பயன்படுத்துமாறும், மெட்ரோ இரயில் மற்றும் அதன்வளாகத்திற்குள் உரத்த குரலில் உரையாடுதல் மற்றும் ஸ்பீக்கர் மோட் பயன்பாட்டைத் தவிர்க்குமாறும்சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

 

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai