Chennai Suburban Train Changes: சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில் சேவை. தினந்தோறும் மின்சார ரயில்களில் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். குறைவான கட்டணம், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விரைவாக செல்லவாதல் பயணிகள் மின்சார ரயில்களில் பயணித்து வருகின்றனர்.
ரயில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளையும் தெற்கு ரயில்வே செய்து வருகிறது. சென்னையில் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டும் வழித்தடத்திலும், சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் - திருவள்ளூர், கடற்கரை - வேளச்சேரி இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படடு வருகிறது.
அவ்வப்போது மின்சார ரயில் சேவையில் தெற்கு ரயில்வே சில மாற்றங்களை செய்து வருகிறது. இதுதெடர்பாக முன்கூட்டியே அறிவிப்புகளையும் தெற்கு ரயில்வே வெளியடுகிறது. அந்த வகையில், சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் நடக்க உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளது தெற்கு ரயில்வே. ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த நாட்களில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி சில ராயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் இரவு 10.20, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் கடற்கரை - தாம்பரம் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், ஐந்து மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, இரவு 8 மணிக்கு இயக்கப்படும் திருமால்பூர் - கடற்கரை ரயில், இரவு 10.15, 11.20 மணிக்கு இயக்கப்படும் கூடுவாஞ்சேரி - கடற்கரை ரயில்கள், இரவு 10.20, 11.00 மணிக்கு இயக்கப்படும் செங்கல்பட்டு - கடற்கரை ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரயில்கள் கடற்கரைக்கு பதிலாக தாம்பரத்திலேயே நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🚆 Revised Block Period | Chennai Egmore
🚧 Due to ongoing redevelopment works at Chennai Egmore Railway Station, the Line Block/Power Block at #ChennaiEgmore Yard for launching Foot Over Bridge (FOB) girders has been rescheduled to 25th August – 06th September 2026, instead of… pic.twitter.com/BILnjgub4m— drm_chennai (@DrmChennai) August 20, 2026
அதேபோல, சில ரயில்கள் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் கடற்கரை - கூடுவாஞ்சேரி ரயில் இரவு 9.50 மணிக்கு இயக்கப்படும் என்றும் இரவு 10.20 மணிக்கு மணிக்கு இயக்கப்படும் கடற்கரை - செங்கல்பட்டு ரயில் இரவு 10.15 மணிக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை வார நாட்களில் அதிகாலையில் 3.50 மணிக்கு இயக்கப்பட உள்ள கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில், கடற்கரை - தாம்பரம் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
மேலும், ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை சில ரயிகள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, இரவு 10.00, 11.20, 11.40, 11.59 மணிக்கு இயக்கப்படும் கடற்கரை - தாம்பரம் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இரவு 8 மணிக்கு இயக்கப்படும் திருமால்பூர் - கடற்கரை ரயில் ரத்து செய்யப்படுகிறது. இரவு 11.00, 11.40 மணிக்கு இயக்கப்படும் தாம்பரம் - கடற்கரை ரயில்கள் என 7 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், ஆகஸ்ட் 30ஆம் தேதி செப்டம்பர் 6ஆம் தேதி வரை செங்கல்பட்டு - கடற்கரை வழித்தடத்தில் காலை 3.50, இரவு 10.20,11.00 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், மூன்று மின்சார ரயில் சேவையின் நேரம் மாற்றப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.