• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /டிசம்பரில் திருப்பதி போறீங்களா? ரயில் சேவை 27 நாட்களுக்கு ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

டிசம்பரில் திருப்பதி போறீங்களா? ரயில் சேவை 27 நாட்களுக்கு ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

Chennai Tirupati Train: சென்னை - திருப்பதி ரயில் சேவை டிசம்பர் 1 முதல் டிசம்பர் 27ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, பயணிகள் இதற்கு ஏற்ப தங்கள் பயணங்களை பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

Written ByUmabarkavi K
Published: Oct 07, 2026, 10:07 AM IST|Updated: Oct 07, 2026, 10:11 AM IST
joinshare
டிசம்பரில் திருப்பதி போறீங்களா? ரயில் சேவை 27 நாட்களுக்கு ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரெப்போ விகிதத்தை அதிகரித்த RBI: லோன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி! வீடு, வாகன வட்டி விகிதம் உயர வாய்ப்பு!

ரெப்போ விகிதத்தை அதிகரித்த RBI: லோன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி! வீடு, வாகன வட்டி விகிதம் உயர வாய்ப்பு!

2

அரசியலில் களமிறங்கும் தனுஷ்..உள்ளாட்சி தேர்தலில் போட்டியா? புதுக்கதையா இருக்கே..

3

டிசம்பரில் திருப்பதி போறீங்களா? ரயில் சேவை 27 நாட்களுக்கு ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

4

50,000 ஓய்வூதியதாரர்கள், ஆஷா பணியாளர்களுக்கு குட் நியூஸ் தந்த டெல்லி அரசு: மாஸ் அறிவிப்புகள்!!

5

திருவண்ணாமலையில் சனி, ஞாயிறு அனுமதி கிடையாது? புதிய கட்டுப்பாடுகள்.. அறநிலையத்துறை விளக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai Tirupati Train: ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். சென்னையில் இருந்து ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் இருந்து திருப்பதி புறப்படும் ரயில், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த நிலையில் தான், சென்னை திருப்பதி ரயில் சேவையில் 27 நாட்களுக்கு ரத்து  செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை - திருப்பதி ரயில்கள் ரத்து

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலைய யார்டில் 48 நாட்களுக்கு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், சென்னை - திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு தினமும் மாலை 4.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயிலும், திருப்பதிக்கு இருந்து சென்ட்ரலுக்கு காலை 6.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயிலும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 27ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

4 முக்கிய மெமு ரயில்கள் திருச்சானூருடன் நிறுத்தம்

அரக்கோணம் மற்றும் சென்னை சென்ட்ரலில்  இருந்து திருப்பதி செல்லும் முன்பதிவில்லா MEMU ரயில்களின் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மாற்றம் அக்டோபர் 7ஆம் தேதியான இன்று முதல் நவம்பர் 9ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 4 ரயில்கள் திருப்பதி ரயில் நிலையத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, திருச்சானூர் (Tiruchanur) ரயில் நிலையத்துடனேயே நிறுத்தப்படும் மற்றும் அங்கிருந்தே புறப்படும்.  

  • அரக்கோணம் – திருப்பதி மெமு (66043): அரக்கோணத்தில் காலை 09:15 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், திருப்பதிக்குச் செல்வதற்குப் பதிலாக காலை 11:45 மணிக்குத் திருச்சானூர் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
  • மூர் மார்க்கெட் (MMC) – திருப்பதி மெமு (66069): சென்னையிலிருந்து காலை 09:50 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், திருப்பதிக்குச் செல்வதற்குப் பதிலாக மதியம் 13:45 மணிக்குத் திருச்சானூர் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
  • திருப்பதி – மூர் மார்க்கெட் (MMC) மெமு (66070): திருப்பதியில் இருந்து மதியம் 13:25 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக, இந்த ரயில் திருச்சானூரில் இருந்து மதியம் 13:30 மணிக்குப் புறப்படும்.  
  • திருப்பதி – அரக்கோணம் மெமு (66044): திருப்பதியில் இருந்து மதியம் 15:40 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக, இந்த ரயில் திருச்சானூரில் இருந்து மதியம் 15:50 மணிக்குப் புறப்படும்.  

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சென்னை மற்றும் அரக்கோணத்தில் இருந்து சாமி தரிசனத்திற்காகத் திருப்பதிக்கு மெமு ரயில்களில் செல்லும் பக்தர்கள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். திருச்சானூர் (அலமேலுமங்காபுரம்) நிலையத்தில் இருந்து இறங்கி, அங்கிருந்து பேருந்து அல்லது ஆட்டோ மூலம் திருப்பதிக்கு சென்றடையலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai