• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /3 நாளாக ரத்தப்போக்கு.. 6 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. சென்னையில் ஷாக்

3 நாளாக ரத்தப்போக்கு.. 6 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. சென்னையில் ஷாக்

Chennai Child Harassment: சென்னை திருவொற்றியூரில் 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Written ByUmabarkavi K
Published: Oct 07, 2026, 02:22 PM IST|Updated: Oct 07, 2026, 03:04 PM IST
joinshare
3 நாளாக ரத்தப்போக்கு.. 6 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. சென்னையில் ஷாக்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
‘அன்பில் அவன்’ வெற்றி விழா : அசோக் செல்வன் எமோஷனல் பேச்சு..என்ன சொன்னார்?

‘அன்பில் அவன்’ வெற்றி விழா : அசோக் செல்வன் எமோஷனல் பேச்சு..என்ன சொன்னார்?

2

Explained : 2 விஷ ஊசி போட்டும் சாகாத பெண்..இப்போது உடல்நிலை எப்படி இருக்கு?

3

3 நாளாக ரத்தப்போக்கு.. 6 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. சென்னையில் ஷாக்

4

ஆவின் பால் தட்டுப்பாடு உண்மையா? விசிட் அடித்த CM விஜய் - அமைச்சர் சொன்ன விளக்கம்

5

Nandini Milk: பால் விலை லிட்டருக்கு ரூ.8 உயர்வு.. வெளியான அதிர்ச்சி தகவல்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai Child Harassment: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் சென்னை திருவொற்றியூர் பகுதியில் தங்கி பானி பூரி விற்று பிழைத்து வந்தனர். இவர்களுக்கு 6 வயதில் சிறுமியும் உள்ளார். இந்நிலையில், நேற்று விளையாடிக்கொண்டிருந்த சிறுமி திடீரென அழுதுக்கொண்டே வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மொழிப் பிரச்சினையால் மருத்துவர்கள் கூறிய தகவலை பெற்றோரால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

6 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை 

அப்போது, உறவினருக்கு சிகிச்சை அளிக்க அதே மருத்துவமனைக்கு வந்த தாஜ் மற்றும் அவரது குடும்பத்தினர், சிறுமியின் நிலையை அறிந்து பெற்றோருக்கு உதவியதாக கூறப்படுகிறது. சிறுமியிடம் பேசியபோது, தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல், சித்தரஞ்சன், மனோஜ் ஆகிய மூவரை அடையாளம் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ராகுல் மற்றும் சித்தரஞ்சன் ஆகிய இருவரையும் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், காயமடைந்த இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தப்பியோடிய மனோஜை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வடமாநிலத்தைச் சேர்ந்த அந்த தம்பதியினர் கீழ்தளத்தில் வசித்து வருவதும், அவர்கள் மாலை நேரத்தில் பானி பூரி விற்பனைக்காக வெளியே சென்ற நேரத்தில், மேல் தளத்தில் வசித்து வந்த மூன்று பேர் சிறுமியை அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற வீட்டில் சுமார் 3 பேர் தங்கி இருந்ததாகவும், அவர்களில் ஒருவரிடம் அடையாள ஆவணங்கள் இல்லாததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆறு வயது சிறுமிக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் மூவர் மட்டுமே குற்றத்தில் ஈடுபட்டார்களா அல்லது மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வீட்டின் உரிமையாளர் வீட்டில் தங்கியிருந்த வடமாநிலத்தவர்களின் அடையாள ஆவணங்களை முறையாகப் பெற்றுப் பாதுகாக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மூன்று நாட்களாக ரத்தப்போக்குடன் சிறுமி வேதனையை அனுபவித்ததாக கூறப்படும் நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் தீவிரமாக விசாரித்து, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து சிறுமிக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலுக்கும் கண்டனம்

இந்த சம்பவம் குறித்து திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "கடந்த 5 மாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் குறித்தும், பொறுப்பற்ற தவெக ஆட்சியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களை எண்ணியும் மனம் வருந்துகிறது.வீண் விளம்பரத்திற்காக ஒரு சினிமாத்தனமான சிறப்புப் படையை உருவாக்கியதைத் தவிர, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய மருத்துவ மற்றும் சட்ட உதவிகளை வழங்குவதோடு, அவருக்கு நீதி கிடைப்பதையும், குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்" என தெரிவித்தார். மேலும், பாம தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், சென்னை திருவொற்றியூரில்  6 வயது வடமாநில சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு அரசு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்” என கூறினார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai