Chennai Traffic Diversion: சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக, பீக் ஹவரில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். அதுவும் தற்போது, சாலை விரிவாக்கம், மேம்பாலம் அமைக்கும் பணிகள், மெட்ரோ பணிகள் என நடந்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கிறது.
இதற்கிடையில், அவ்வப்போது போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், அவ்வப்போது சென்னை போக்குவரத்து காவல்துறை அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்து வருகிறது. போக்குவரத்தை எளிதாக்க அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதாவது, ராஜீவ் காந்தி சாலையில் இன்று (செப்டம்பர் 23) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🚦 Traffic Changes | OMR & Thuraipakkam
📍 To ease traffic congestion and regulate vehicular movement, the following traffic changes will be implemented from 23.09.2026 in the Rajiv Gandhi Salai (OMR) and Thuraipakkam areas.
🙏 Motorists are requested to cooperate and follow… pic.twitter.com/crIO5kMibi— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) September 22, 2026
இதுகுறித்து பெருநகர சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னை ராஜீவ் காந்தி சாலை (ஓ.எம்.ஆர்) துரைப்பாக்கம் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகனப் போக்குவரத்தை முறைப்படுத்தவும் 23.09.2026 முதல் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
மேட்டுக்குப்பம் மற்றும் பிள்ளையார் கோவில் தெருவிலிருந்து சோழிங்கநல்லூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் கீதம் உணவகம் அருகே U Turn செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாகனங்கள் பெருங்குடி சுங்கச்சாவடி வரை சென்று, அங்கு U Turn செய்து சோழிங்கநல்லூர் நோக்கிச் செல்ல வேண்டும்
அதே போல், 200 அடி ரேடியல் சாலையிலிருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வாகனங்கள் ஸ்ரீவரம் அருகே U Turn செய்ய அனுமதி இல்லை. அந்த வானங்கள் பெருங்குடி சுங்கச்சாவடி சென்று U Turn செய்து சோழிங்கநல்லூர் செல்ல வேண்டும்.
கந்தன்சாவடியிலிருந்து எஸ்.ஆர்.பி டூல்ஸ் (SRP Tools) நோக்கி செல்லும் வாகனங்கள், உலக வர்த்தக மையம் (World Trade Centre) அருகே U Turn செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாகனங்கள் பெருங்குடி சுங்கச்சாவடி வரை சென்று U Turn செய்து எஸ்.ஆர்.பி டூல்ஸ் (SRP Tools) நோக்கி செல்ல வேண்டும்.
பெருங்குடி மற்றும் ஸ்ரீவரம் பகுதியிலிருந்து 200 அடி ரேடியல் சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், வழக்கம் போல் கீதம் உணவகம் அருகே U Turn செய்து 200 அடி ரேடியல் சாலைக்கு செல்ல வேண்டும். ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்