• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போக முடியாது.. அதிரடி அறிவிப்பு

சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போக முடியாது.. அதிரடி அறிவிப்பு

Chennai Traffic Diversion: சென்னையில் இன்று (செப்டம்பர் 13) சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி திருக்குடை பாதயாத்திரையை முன்னிட்டு, முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Written ByUmabarkavi K
Published: Sep 13, 2026, 09:30 IST|Updated: Sep 13, 2026, 09:43 IST
joinshare
சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போக முடியாது.. அதிரடி அறிவிப்பு

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

2

WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

3

வள்ளல் சி.கந்தசாமி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! கல்விக்காக சொத்தை எழுதி வைத்தவர்..

4

Explained | பெயர் மாறும் “மேற்கு வங்கம்” ஒரு மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்படுகிறது..?

5

WTC Final: கனவு நனவாகுமா? இந்தியாவுக்கு சாதகமாக அமைய வேண்டிய 5 முக்கிய டெஸ்ட் முடிவுகள்! Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai Traffic Diversion: இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் செப்டம்பர் 13ஆம் தேதியான இன்று (ஞாயிறு) அன்று திருப்பதி திருக்குடை பாதயாத்திரை ஊர்வலத்தை நடத்த உள்ளனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, கீழ்க்கண்ட இடங்களில், ஊர்வலம் செல்லும் நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, காலை 08.00 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் ஈ.வெ.ரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையைப் பயன்படுத்தலாம்.

மாலை 03.00 மணி முதல் ஊர்வலம் யானைகவுனி பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது இராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். மேலும், ஈ.வெ.ரா சாலை, முத்துசாமி சாலை மற்றும் இராஜாஜி சாலைகளை பயன்படுத்தலாம்.

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் யானைகவுனி பாலத்தை கடக்க வரும்போது சூளை ரவுண்டானாவிலிருந்து டெமலாஸ் சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாகச் செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது, மசூதி பாயிண்டிலிருந்து சூளை ரவுண்டானா நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம்.

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாராயணகுரு சாலை / வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் அவதான பாப்பையா சாலை (AP Road) வரும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை.

எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது, டவ்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் நாராயண குரு சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும் போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம்.

திருப்பதி திருக்குடை ஊர்வலம் கொன்னூர் ஒன் பாயிண்ட் பகுதிக்கு வரும்போது, ஓட்டேரி பாலம், மேடவாக்கம் டேங்க் ரோடு மற்றும் ICF சந்திப்பு ஆகிய இடங்களிலிருந்து கொன்னூர் ஒன் பாயிண்ட் நோக்கி வரும் வாகனங்கள் கீழ்கண்டவாறு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும். ஓட்டேரி பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் குக்ஸ் ரோடு வழியாக மாற்றி விடப்படும். ICF சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் நியூ ஆவடி ரோடு வழியாக மாற்றி விடப்படும். மேடவாக்கம் டேங்க் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் M.T சாலை மற்றும் V.P.காலனி சந்திப்பில் இருந்து V.P காலனி (தெற்கு) நோக்கி மாற்றி விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai