• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /சென்னை டூர் - 2: பெருமாள் கோவில்களுக்கு ஸ்பெஷல் சுற்றுலா - எவ்வளவு கட்டணம்?

சென்னை டூர் - 2: பெருமாள் கோவில்களுக்கு ஸ்பெஷல் சுற்றுலா - எவ்வளவு கட்டணம்?

Chennai TTDC Vishnu Temples Tour: விஷ்ணு கோவில்களுக்கு இரண்டு ஆன்மீகச் சுற்றுலாவை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் மட்டும் 2 சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2வது சுற்றுலா திட்டத்தை இங்கு விரிவாக காணலாம்.

Written BySudharsan G
Published: Aug 09, 2026, 08:29 PM IST|Updated: Aug 09, 2026, 08:41 PM IST
joinshare
சென்னை டூர் - 2: பெருமாள் கோவில்களுக்கு ஸ்பெஷல் சுற்றுலா - எவ்வளவு கட்டணம்?

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

2

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

3

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

4

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

5

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai TTDC Vishnu Temples Tour - 2: தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இன்பச் சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா என தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கான சுற்றுலா திட்டங்களை வகுத்து, அதில் பயணிகளை அழைத்துச் செல்கிறது.

அந்த வகையில், ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலாவிற்கு அழைத்து செல்கிறது. அதாவது, சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது அதை போல், விஷ்ணு கோவில்களுக்கும் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TTDC விஷ்ணு கோவில் சுற்றுலா

விஷ்ணு கோவில் சுற்றுலாக்களும் சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்த தேதிகளில் சுற்றுலா என தெரிவிக்கப்படவில்லை. சென்னை விஷ்ணு கோவில் சுற்றுலாவில் இரண்டு திட்டங்களை TTDC திட்டமிட்டுள்ளது. அதில் 2வது திட்டத்தை இங்கு விரிவாக காணலாம்.

சென்னை விஷ்ணு கோவில்கள் சுற்றுலா - 2

  • காலை 8.30 மணிக்கு சென்னை  திருவல்லிக்கேணி வாலஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாகத்தில் இருந்து பேருந்து புறப்படும்.
  • காலை 9 மணிக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு செல்லலாம்.
  • காலை 10.30 மணிக்கு திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொள்ளலாம்.
  • மதியம் 12 மணிக்கு திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலுக்கு செல்லலாம்.
  • மதியம் 1 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவள்ளூர் வைத்தியவீரராகவ பெருமாள் கோவில் அன்னதானத்தில் மதிய உணவை சாப்பிடலாம்.
  • மாலை 4 மணிக்கு வைத்தியவீரரராகவ பெருமாள் கோவிலில் தரிசனம் மேற்கொள்ளலாம்.
  • மாலை 5.30 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவ பெருமாள் கோவிலில் தரிசனம் செய்யலாம்.
  • மதியம் 6.30 மணிக்கு பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் தரிசனம் மேற்கொள்ளலாம்.
  • இரவு 7.30 மணிக்கு திருவல்லிக்கேணி சுற்றுலா வளாகம் திரும்பலாம்.

சென்னையில் இரண்டு சுற்றுலா திட்டங்கள்

சென்னை விஷ்ணு கோவிலின் முதல் சுற்றுலா திட்டத்தை போலவே, இரண்டாவது சுற்றுலா திட்டத்திலும் 6 விஷ்ணு கோவில்களுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இரண்டு சுற்றுலா திட்டத்திலும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மற்றும் திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் கோவில் பொதுவானவை.

சென்னையின் முதல் விஷ்ணு கோவில் சுற்றுலா திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகரில் அஷ்டலஷ்மி கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்மர் கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில் ஆகிய திருத்தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

கட்டணம் எவ்வளவு?

பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்படும். 1800-4253-1111 என்ற தொலைப்பேசி எண்ணிலும்; support@ttdconline.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொண்டு உங்களின் சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை கேட்டறியலாம். சென்னை விஷ்ணு கோவிலின் முதல் சுற்றுலா திட்டத்தை போலவே இதற்கும் ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படும்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tour Travel