• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /ரிலீஸிற்கு முன்பே சர்ச்சைகளை சந்திக்கும் ‘ராமாயணா’ படம்! ரஹ்மான் இசைக்கு எதிர்ப்பு..

ரிலீஸிற்கு முன்பே சர்ச்சைகளை சந்திக்கும் ‘ராமாயணா’ படம்! ரஹ்மான் இசைக்கு எதிர்ப்பு..

இந்திய திரையுலகில் ராமாயணத்தை வைத்து, பல்வேறு கதைகள் உருவாகி விட்டன. தற்போது புதிய பரிமானத்தில் ரன்பீர் கபூர்-சாய் பல்லவியை வைத்து இன்னொரு படமும் உருவாக இருக்கிறது.

Written ByYuvashree M
Published: Oct 28, 2026, 12:53 PM IST|Updated: Oct 28, 2026, 01:02 PM IST
joinshare
ரிலீஸிற்கு முன்பே சர்ச்சைகளை சந்திக்கும் ‘ராமாயணா’ படம்! ரஹ்மான் இசைக்கு எதிர்ப்பு..
Image Credit: Ramayana | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ஆறுகளில் நுரை பொங்க..ஷாம்பு, சோப்புதான் காரணம்! தவெக அமைச்சர் சர்ச்சை பேச்சு

ஆறுகளில் நுரை பொங்க..ஷாம்பு, சோப்புதான் காரணம்! தவெக அமைச்சர் சர்ச்சை பேச்சு

2

நீர் பாதுகாப்பை வலுப்படுத்த சென்னை நகரில் அக்டோபர் 27, 28 ஆம் தேதி இந்திய கடல்நீர் உப்புநீக்கத் திட்டங்கள் மாநாடு 2026

3

நெருங்கும் தீபாவளி! சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது? குஷியில் தென் மாவட்ட பயணிகள்

4

ரிலீஸிற்கு முன்பே சர்ச்சைகளை சந்திக்கும் ‘ராமாயணா’ படம்! ரஹ்மான் இசைக்கு எதிர்ப்பு..

5

இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் யாதவ் மரணம்.. பாரா விளையாட்டு உலகை உலுக்கிய சோகம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்திய திரையுலகை பொருத்தவரை, இதுவரை எத்தனையோ படங்கள், ராமாயணத்தை வைத்து எடுக்கப்பட்டு விட்டன. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் வெவ்வேறு இயக்குநர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் ராமாயணம் படங்களை எடுத்துள்ளனர். தற்போது அந்த லிஸ்டில் இயக்குநர் நிதேஷ் திவரியும் இணைந்திருக்கிறார்.

‘ராமாயணா’ திரைப்படம்!

நிதேஷ் திவாரி இயக்கும் ‘ராமாயணா’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக சீதை கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு நிறைய இருக்கிறது. இருப்பினும், ஒவ்வொரு அப்டேட் வரும் போதும், அது குறித்த சர்ச்சைகளும் வெளிவருகின்றன.

சீதையாக சாய் பல்லவி..

நடிகை சாய் பல்லவியை தென்னிந்தியாவில் அனைவருக்கும் பிடிக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால் வட இந்தியாவில் அவரை ஏற்றுக்கொள்ள அந்த பகுதியில் இருக்கும் ரசிகர்களுக்கு கடினமாக உள்ளது போலும். அதிலும், சாய் பல்லவி இந்த ராமாயணா படத்தில் சீதையாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான போதே, வட இந்திய ஊடகங்கள் ‘இவர் எப்படி சீதை கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார்?’ என்று கேள்வி கேட்டன.

மேலும் படிக்க | நடிகை அசின் மகளின் அபார திறமை..9 வயதில் 12 மொழிகள் பேசுவாராம்..!

சீதையாக சாய் பல்லவிக்கு பதில், அவருக்கு பின்னால் இருக்கும் பெண்ணை நடிக்க வைக்கலாம், அவர் இந்தி பேசும் விதம் சரியில்லை என்றெல்லாம் கூறி நெட்டிசன்கள் வரைமுறை இல்லாமல் கமெண்ட் செய்தனர். சாய் பல்லவியின் சுருள் முடி, அவரது தோற்றம் சீதைக்கு ஏற்றது போல இல்லை என இஷ்டத்திற்கு குறை கூறினர். அது மட்டுமன்றி, சாய் பல்லவி தன்னுடைய கருத்தியல் குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருந்தது இந்த சமயத்தில் வைரலானது. இதுவும், இந்த எதிர்ப்பிற்கு ஒரு காரணமாக அமைந்தது.

பாடலால் கிளம்பிய சர்ச்சை..!

ராமாயணா திரைப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இவரது இசையில் ‘மங்கல் ரங்’ எனும் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடல், ராமர்-சீதை திருமணத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட பாடலகும். இதனை அர்ஜித் சிங், ஸ்ரேயா கோஷல் உள்ளிட்டோர் பாடியிருக்கின்றனர்.

இப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே இது இணையத்தில் விவாதிக்கப்படும் ஹாட் டாப்பிக்காக மாறி விட்டது.

புராண கதையான ராமாயணத்தில், சீதை-ராமர் கல்யாணத்தை சித்தரிக்கும் பாடலுக்கு, கவ்வாலி மற்றும் சூஃபி இசையின் சாயல் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இது, எந்த விதத்தில் பொருத்தமாக இருக்கும் என்றும், ஏ.ஆர்.ரஹ்மானின் ‘குன் ஃபயா குன்’ பாடலின் அமைப்பை இது நினைவுகூர்வதாகவும் பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.
ரஹ்மான், தன்னுடைய பழைய ட்யூனை அப்படியே மறுபயன்பாடு செய்திருப்பதாகவும், ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, அஜித்தின் நடிப்பில், 2000ஆம் ஆண்டில் வெளியான ‘என்ன சொல்லப்போகிறாய்’ பாடலின் கோரஸ் மற்றும் இசை அமைப்பையே மங்கல் ரங் பாடலிலும் ரஹ்மான் பயன்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

சூஃபி இசை என்றால் என்ன?

சூஃபி இசை, இஸ்லாமிய மதத்தில் அன்பையும், கடவுளுடன் நெருக்கமாக இருப்பதையும் விவரிக்கும் இசையாக பார்க்கப்படுகிறது. தபாலா, சித்தார், ஃப்ரேம் ட்ரம் உள்ளிட்ட சில வாத்தியங்களை கொண்டு இந்த இசை இசைக்கப்படுகிறது. இதனை இந்து மதத்தில் கடவுளாக கருதப்படும் ராமரை வைத்து எடுக்கப்படும் படத்தில் பயன்படுத்துவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க | அஜித்துடன் ‘டேர்டெவில்’ படத்தில் நடிக்கும் 4 முக்கிய பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema