சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்: புக் பண்ண 4 மணி நேரத்தில் சிலிண்டர் வந்துரும்! எப்படி?
இன்னும் சில நாட்களில் சிலிண்டர் புக் செய்த வெறும் 4 மணி நேரத்தில் உங்கள் வீட்டில் தேடி சிலிண்டரை டெலிவரி செய்து விடுவர் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா?
வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை பெறுவதில் மக்கள் எண்ணில் அடங்கா சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். சிலிண்டர் புக் செய்வதில் ஆரம்பித்து அதன் டெலிவரிக்காக காத்திருப்பது வரை தொடர்ந்து 3-4 நாட்கள் வரை இந்த ப்ராசஸ் தொடர்கிறது. இதற்கிடையே சமீபத்தில் இஸ்ரேல்-ஈரான் போர் சூழல் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஆகும் நிலை ஏற்பட்டது. இதனால் ஹோட்டல்களில் உணவு விலை அதிகரிப்பது, சமையல் கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி செய்வதில் தாமதம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டது.
இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு:
சிலிண்டரை புக் செய்த நான்கு மணி நேரத்திற்குள் வீடு தேடி சிலிண்டரை டெலிவரி செய்யும் புதிய திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விற்பனையை பொருத்தவரை இந்திய அளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது இந்தியன் ஆயில் நிறுவனம். இந்த நிறுவனமானது இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதாவது ஜூலை மாதத்தில் Indane XTRALITE எனும் புதிய வகை சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியது. இந்த சிறுவர்கள் ஸ்மார்ட் பத்து கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
மேலும் படிக்க | திருப்பதி திருக்குடை ஊர்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்.. எந்தெந்த ரூட்ல?
வழக்கமான உலோக சிலிண்டர்களுக்கு மாற்றாக, இந்த சிலிண்டர்கள் உருவாக்கப்பட்டது. ஒளி ஊடுருவக்கூடும் சிறப்பு வகை பிளாஸ்டிக் மற்றும் பைபர் பொருட்களால் எந்த சிலிண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து சிலிண்டரில் இன்னும் எவ்வளவு எரிவாய் மீதம் இருக்கிறது என்பதை வெளிப்புறமாக தெரிந்து கொள்ள முடியும். Indane சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கும் வாடிக்கையாளர்கள் இதே இணைப்பின் கீழ் மானியம் அற்ற பிரிவில் 10 கிலோ XTRALITE சிலிண்டரை பெற முடியும்.
எப்படி?
இந்த சிலிண்டரை பெறுவதற்கு ரூ.3000 வரை பாதுகாப்பு அமைப்புத்தொகை செலுத்தி இருக்க வேண்டும். ஏற்கனவே பாதுகாப்புத் தொகையானது செலுத்தப்பட்டிருந்தால் மீது இருக்கும் தொகை மட்டும் செலுத்தி இந்த XTRALITE சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம்.
திட்டம் விரிவாக்கம்:
இந்த திட்டம் முதலில், கோயம்புத்தூர் உள்பட சில முக்கிய நகரங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் இப்போது சென்னை, செங்கல்பட்டு, திருப்பூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கும், புதுச்சேரிக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக சென்னை உள்ளிட்ட சில பகுதிகளை சேர்ந்தவர்கள், இந்த Indane XTRALITE சிலிண்டரை புக் செய்த, வெறும் 4 மணி நேரத்திற்குள்ளாக பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
எப்போது முதல் அமல்?
இந்த திட்டமனது, வரும் அக்டோபர் மாதத்தின் இறுத்திக்குள், நாட்டின் மேலும் பகுதிகளுக்கு விரிவுப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
சிறப்பம்சங்கள் என்ன?
- எடை குறைவு: இந்த சிலிண்டர், பாரம்பரிய உலோக சிலிண்டர்களை விட இலகுவானதாக இருக்கிறது. இதனால் இதை கையாளுவது, எளிதும் கூட.
- துருப்பிடிக்காது: இந்த சிலிண்டர்கள், ஃபைபர் பிளாஸ்டிக் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இது துருப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
- எரிவாயு அளவை அறியலாம்: சிலிண்டருக்குள் இருக்கும் எரிவாயு, எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை வெளிப்படையாக பார்க்கும் வகையில் Translucent அமைப்பை கொண்டுள்ளது.
- விரைவான விநியோகம்: வாடிக்கையாளர்களின் வசதிக்காக, இந்த சிலிண்டரை 4 மணி நேரத்திற்குள் வீடு தேடி டெலிவரி செய்யும் சேவையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மேலும் படிக்க | சென்னையில் நாளை மின்தடை.. 5 மணி நேரம் பவர்கட் எங்கு? மின்வாரியம் அறிவிப்பு