Chennai Power Cut September 9: சென்னையில் நாளை (செப்டம்பர் 9) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
Chennai Power Cut September 9: எந்தெந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
1/5
மின்தடை
தமிழகத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகளுக்காக பல்வேறு மாவட்டங்களில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் மின்வாரியம் மின்தடை செய்து வருகிறது. இதற்கான அறிவிப்புகளை முன்கூட்டியே மின்வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நாளை சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
2/5
சென்ன மின்தடை
அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி ஐந்து மணி நேரத்திற்கு பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. மதியம் 2 மணிக்கு பிறகு, வழக்கம் போல் மின்விநியோகம் இருக்கும் என மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, எந்தெந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம்.
3/5
போரூர்
போரூர் - போரூர் பகுதியில் மூகாம்பிகை நகர், குன்றத்தூர் பிரதான சாலை, ராம் நகர், குமரன் நகர், பெரிய பனிச்சேரி, தண்டலம் பிரதான சாலை, பாபு கார்டன், இரண்டாம் கட்டளை, சிக்கராயபுரம், கொள்ளசேரி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4/5
ராமாபுரம்
ராமாபுரம் - முகலிவாக்கம், சபரிநகர், ஸ்ரீராம் நகர், சுபஸ்ரீ நகர், கமலா நகர், காமாட்சி நகர், சக்தி நகர், எம்கேஎம் பள்ளி சாலை, மாரியம்மன் கோயில் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலை, தேஸ்மா கார்டன், கேதார் மருத்துவமனை சாலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
5/5
மின்தடை
சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் நாளை மின்தடை செய்யப்படுகிறது. கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.