• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /ரூ.45000 பணத்திற்காக..கூலி தொழிலாளியை குத்தி கொன்ற வடமாநில இளைஞர்! பகீர் சம்பவம்..

ரூ.45000 பணத்திற்காக..கூலி தொழிலாளியை குத்தி கொன்ற வடமாநில இளைஞர்! பகீர் சம்பவம்..

வேளச்சேரியில் தாய்க்கு அனுப்ப வேண்டிய பணத்தை வேறு வங்கி கணக்கிற்கு அனுப்பியதால் வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

Written ByYuvashree M
Published: Oct 06, 2026, 02:17 PM IST|Updated: Oct 06, 2026, 02:29 PM IST
joinshare
ரூ.45000 பணத்திற்காக..கூலி தொழிலாளியை குத்தி கொன்ற வடமாநில இளைஞர்! பகீர் சம்பவம்..
Image Credit: Velachery Crime News | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
பாஸ்போர்ட் அப்டேட்! பெயர் மாற்ற புதிய ரூல்ஸ் அறிமுகம் - முழு விவரம் Explained

பாஸ்போர்ட் அப்டேட்! பெயர் மாற்ற புதிய ரூல்ஸ் அறிமுகம் - முழு விவரம் Explained

2

ரூ.45000 பணத்திற்காக..கூலி தொழிலாளியை குத்தி கொன்ற வடமாநில இளைஞர்! பகீர் சம்பவம்..

3

தமிழகத்தில் நாளை மின்தடை: கோவை, திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மின் விநியோகம் தடை-முழு பட்டியல்

4

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு சூப்பர் செய்தி: அகவிலைப்படி 447% அதிரடி உயர்வு

5

நான் ரத்த வாந்தி மட்டும் தான் எடுக்கல.. மேடையில் உருக்கமாக பேசிய விஜய் சேதுபதி!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சென்னை வேளச்சேரி அயோத்தி காலனியில் புதிய வீடு கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு பீகார், ஓடிசா மாநிலங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து  வருகின்றனர். இங்குதான் அந்த நடுங்க வைக்கும் சம்பவம் நடந்திருக்கிறது.

கொத்தனார் குத்திக்கொலை!

நேற்று முன் தினம் காலை, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரஞ்சன் (35) என்ற கொத்தனார் முதல் மாடியில் கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதை பார்த்த சக ஊழியர்கள், வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே  சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ரஞ்சன் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த காசிம் (26), தபிர்(28), ஷரிப்புல்(30) ஆகியோர் முதல் மாடியில் தூங்கி கொண்டிருந்தனர். மேலும் ரஞ்சனை கொலை செய்து விட்டு செல்போன், ஆதார் அட்டை  ஆகியவற்றையும் எடுத்து கொண்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து தப்பிய 3 பேர் குறித்து எந்தவித தகவல்களும் கிடைக்காததால் செல்போனில் தொடர்பு கொண்ட போது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் செல்போன் இருக்கும் டவர் விவரங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் காசிம் செல்போனில் யாரிடமோ பேசி விட்டு அணைக்கப்பட்டு இருந்தது. உடனே தனிப்படை போலீசார் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சோதனை செய்தனர்.

மேலும் படிக்க | போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது : மு.க ஸ்டாலின் உள்பட தலைவர்கள் கண்டனம்!

வடமாநில இளைஞர் வாக்குமூலம்!

பிகார் செல்லும் ரெயிலுக்காக காத்திருந்த பீகார் மாநிலம் குர்ஹி பகுதியை சேர்ந்த காசிம், தாகாபீர், பீகார் சாதுவளியை சேர்ந்த சர்புல் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அப்போது காசிம் போலீசாரிடம் கூறுகையில்,  செல்போன் செயலி முலம் பணம் அனுப்புவது குறித்து எனக்கு தெரியாது. அப்போது ஒடிசாவை சேர்ந்த ரஞ்சன் கற்று தந்ததார். செயலியில் இருந்து, ரூ. 20 ஆயிரம் மற்றும் ரூ. 25 ஆயிரம் என ரூ.45 ஆயிரம் பணம் பீகாரில் உள்ள அம்மாவிற்காக அனுப்ப வைத்து இருந்தேன். ஆனால் பணம் வேறு ஒரு வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டு இருந்தது. இந்த பணத்தை ரஞ்சன் தான் கையாடல் செய்து உறவினர்களுக்கு அனுப்பிய இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக ரஞ்சனிடம் கேட்ட போது பதில் எதுவும் சொல்லாமல் தகராறு செய்து அங்கிருந்து செல்ல முயற்சித்தார்.

உடனே ரஞ்சனை கத்தியால் வயிற்றிலும் கட்டையால் தலையிலும் அடித்தேன். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தான். அப்போது ரஞ்சன் உயிர் பிரிந்து விட்டது. உடனே அங்கு இருந்த பீகாரை சேர்ந்த தாகாபீர், சர்புல் உதவியுடன்  ரஞ்சன் உடலை போட்டு விட்டு சொந்த ஊருக்கு சென்று வங்கியில் இருந்த பணம் யார் கணக்கிற்கு மாற்றப்பட்டு உள்ளது என்பதை அறிய இருந்தேன். செல்போன் அணைத்தால் போலீசார் கண்டுபிடிக்க முடியாது என்பதால் அணைத்து வைத்து இருந்தேன். ஆனால் பீகாரில் உள்ள தாயிடம் பேச செல்போனை ஆன் செய்து பேசி விட்டு வைத்தேன். ரெயிலில் ஏறும் போலீசார் கைது செய்து விட்டதாக கூறி உள்ளார்.

போலீஸ் அதிகாரிக்கு பாராட்டு!

இதையடுத்து வேளச்சேரி போலீசார் காசிம் மற்றும் அவரது நண்பர்கள் தாகாபீர், சர்புல் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்து 24 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு கொலையாளிகளை பிடித்த வேளச்சேரி தனிப்படை போலீசாரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.

மேலும் படிக்க | சென்னை டூ விழுப்புரம்.. ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. டைமிங் நோட் பண்ணுங்க

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime