சென்னை: கல்வி கற்கும் மாணவர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல வித நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றின் மூலம் அவர்களுக்கு தடையின்றி கல்வி பயில நிதி உதவியும், பிற சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. கல்வி உதவித்தொகை, இலவச லேப்டாப்கள், இலவச பேருந்து பயணம், இலவச நோட்டு புத்தகங்கள் என ஏராளமான உதவிகள் அளிக்கப்படுகின்றன.
மாணவர்களுக்கான நலத்திட்டங்களில் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றுதான் PM-YASASVI எனப்படும் பிரதம மந்திரி இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs), பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர் (EBCs) மற்றும் அறிவிக்கப்படாத, நாடோடி மற்றும் செமி-நாடோடி பழங்குடியினர் (DNTs) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி உள்கட்டமைப்பு வசதிகளையும் நிதி உதவியையும் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
PM-YASASVI திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
2026-27ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு (PM-YASASVI Post matric Scholarship Scheme) https://umls.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன் தெவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட (மி.பி.வ) [ம] சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கு 2026-27ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டம் (PM-YASASVI Post matric Scholarship Scheme) கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறைமூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1.அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பி.வ/மி.பி.வ/சீ.மமாணவ/மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
II. பாலிடெக்னிக், இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை (ம) ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
2) விண்ணப்பிக்கும் முறை: 2026-27-ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள். University Management Information System (UMIS) (https://umis.tn.gov.in/) என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
3) தகுதியுள்ள மாணாக்கர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal Officer) அணுகி, https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 18.09.2026 முதல் 21.10.2026 வரை கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
4) சென்னை மாவட்டத்தில் கல்வி உதவித் தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடும் விகிதத்தைக் குறைத்தல், உயர்கல்வியைத் தொடர்வதை ஊக்குவித்தல் மற்றும் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு நிதியுதவி அளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி நிலைகளில் உயர்தரக் கல்விச் சலுகைகள், விடுதி வசதிகளை உருவாக்குதல் மற்றும் பள்ளிக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிலைகளுக்கான நிதியுதவிகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், சமூக-பொருளாதார இடைவெளிகளைக் குறைக்கவும் நாடு முழுவதும் சமமான கற்றல் வாய்ப்புகளை உறுதி செய்யவும் 'PM-YASASVI' திட்டம் முயல்கிறது.