• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Chennai Madurai Special Trains: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே, பயணிகள் இதற்கு ஏற்பத தங்கள் பயணங்களை திட்டமிட்டுக கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Sep 13, 2026, 08:36 AM IST|Updated: Sep 13, 2026, 08:50 AM IST
joinshare
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Image Credit: சென்னை - மதுரை சிறப்பு ரயில்கள்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai Madurai Special Trains: தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று  மீனாட்சியம்மன் சதே சுந்தரேஸ்வரர் கோயில்.  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப்டம்பர் 17ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிசூஷக விழாவை காண பக்தர்கள் திட்டமிட்டு வருகின்றனர். இந்த நிலையில், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் முன்பதிவு இல்லாத மெமு ரயில்களை அறிவித்துள்ளது.

சென்ட்ரல் - மதுரை சிறப்பு ரயில்கள்

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, ரயில் எண் 06153/06154 சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் - மதுரை சிறப்பு ரயில் செப்டம்பர் 16ஆம் தேதி மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, மாலை அதிகாலை 4.30 மணிக்கு  மதுரைக்கு சென்றடைகிறது. 

மறுமார்க்கத்தில், செப்டம்பர் 17ஆம் தேதி மதுரையில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னைக்கு வந்தடைகிறது.  இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

இந்த ரயிலில், 2 இரண்டாம் வகுப்பு ஏசி வகுப்புகள், 5 ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டிகள், 11 ஸ்லீப்பர் வகுப்புகள், 4 பொது பெட்டிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.4

🚆 Special Trains for Kumbhabhishekam! 🙏

To clear the extra rush of passengers for the Kumbhabhishekam at Madurai Meenakshi Amman Temple, special trains will be operated on 16 & 17 September.

Plan your journey & travel comfortably! 🚉#SouthernRailway #Madurai #IndianRailways pic.twitter.com/c8MpnabHLG

— DRM MADURAI (@drmmadurai) September 11, 2026

தாம்பரம் - மதுரை சிறப்பு ரயில்கள்

ரயில் எண் 06157/06158 தாம்பரம் - மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. செப்டம்பர் 16ஆம் இரவு 8.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.00 மணிக்குசென்றடைகிறது.  மறுமார்க்கத்தில், செப்டம்பர் 17ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.  

இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த ரயிலில் 2 ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 4 எசி மூன்றாம் வகுப்பு பெட்டிகள், 13 ஸ்லீப்பர் பெட்டிகள், 1 ஏசி முதல் வகுப்பு பெட்டிகள் இருக்கும்.

கடற்கரை - மானாமதுரை மெமு ரயில்

ரயில் எண் 06161/06162 கடற்கரை - மானாமதுரை இடையே முன்பதிவு இல்லாத மெமு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து செப்டம்பர் 16ஆம் தேதி  காலை 10.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு மானாமதுரை சென்றடைகிறது.  மறுமார்க்கத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி மதியம் 12 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்பட்டு, கடற்கரைக்கு 11.45 மணிக்கு சென்றடைகிறது.

இந்த ரயிலில் 12 முன்பதிவில்லாத பெட்டிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் கடற்கரை, எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர்,  சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, மானாமதுரை ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai