SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்! பெயர் சேர்க்க முக்கிய வாய்ப்பு..

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், முதன்முறை வாக்காளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன.

Written By Yuvashree M
Published: Oct 02, 2026, 01:09 PM IST | Updated: Oct 02, 2026, 01:17 PM IST
Join

SIR (சிறப்புத் தீவிர திருத்தப்பணி) நடைமுறையின் கீழ், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத, விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் முதன்முறை வாக்காளர்கள், பதிவு செய்ய சிறப்பு முகாம்களை மேற்கொள்ள வேண்டுமென, தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்திக்குரிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து அனைத்து மாவட்ட அதிகாரிகளுடனும், காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதன் முடிவில், தமிழ்நாட்டில்  இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும், விடுபட்டவர்கள் மற்றும் தகுதி வாய்ந்த இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதாக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை மாநகராட்சி ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டிருந்தது. அதில், இந்திய தேர்தல் ஆணையம், கடந்த 29.09.2026ல் தெரிவித்த கடிதத்தின் வாயிலாக சிறப்பு தீரிவ திருத்தப்பணி, ஏற்கனவே நிறைவடைந்திருக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதன்படி, தொடர் திருத்த நடைமுறையின் கீழ் விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் இளம்/முதன்முறையாக தகுதி பெறும் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாமினை தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும், படிவம் 6 உடன் இணைக்கப்பட்டிருக்கும் ’Declaration Form’, சிறப்பு தீவிர திருத்த காலக்கட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும். சிறப்பு தீவிர திருத்தம் இல்லாத காலக்கட்டங்களில், வாக்காளர் பதிவு விதிகள் 1960வின் படி, பொருந்தக்கூடிய படிவங்கள் பயன்படுத்தப்படும்.

மேலும் படிக்க | PM Yasasvi மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: எப்படி விண்ணப்பிப்பது? சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சிறப்பு முகாம்கள்

மாநகராட்சி ஆணையாளர், டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இது குறித்து தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட மற்றும் தகுதி வாய்ந்த இளைஞர்கள்/முதன்முறை வாக்காளர்களின் பெயர்களை, பதிவு செய்வதற்கு சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்ப்பது எப்படி?

வாக்காளர் பட்டியலில் சேர்க்க முதலில் நீங்கள் இந்திய குடிமகனாகவும், 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

உங்கள் பெயரை வாக்காளர் அடையாள அட்டையில் சேர்க்க, உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்ட், பிறப்பு சான்றிதழ், பான் கார்ட், ஓட்டுநர் உரிமம், 10-12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படும்.

முகவரிக்கு, ஆதார் கார்ட், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், கேஸ் பில், மின்கட்டண பில் உள்ளிட்டவை தேவைப்படும்.

வாக்காளர் பெயர் சேர்ப்பிற்காக நடத்தப்படும் சிறப்பு முகாமில், இதற்கான Form 6 படிவத்தை வாங்கி, அதில் உங்கள் புகைப்படம், பெயர், விவரம் உள்ளிட்ட விவரங்களை எழுதி சமர்ப்பிக்கலாம்.

மேலும் படிக்க | சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: ஒரே மாதத்தில் இரட்டிப்பான தொற்று எண்ணிக்கை

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES