Diwali, Ayudha Puja Special Trains: தமிழகத்தில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கு பெரும்பாலானோர் ரயில்களில் பயணிக்கின்றனர். குறைவான கட்டணம், படுக்கை வசதி, கழீவறை வசதி போன்றவை இருப்பதால் ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்னர். குறிப்பாக, தலைநகர் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்கள் செல்லும் ரயில்கள் சென்ட்ரலில் இருந்தும், தென்மாவட்டங்கள், வட மாவட்டங்கள், டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில், அக்டோபர் 19ஆம் தேதி திங்கள்கிழமை, ஆயுத பூஜையும், அக்டோபர் 20ஆம் தே தசரா/விஜயதசமி கொண்டாடப்படுகிறது. தொர்ந்து தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால், சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட தயாராகி இருக்கின்றனர். இந்த நிலையில் தான், தெற்கு ரயில்வே ஆயுத பூஜை, தீபாவளிக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில், வழக்கமாக இயக்கப்படும் ரயில்களுடன் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மும்பை CSMT - சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அக்டோபர் 14,21,28, நவம்பர் 4,11,18 ஆகிய நாட்களில் புதன்கிழமைகளில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. மும்பை CSMT-ல் அதிகாலை 12.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அதே நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை கடற்கரைக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் ரயில் எண் 01016 ரயில் அக்டோபர் 15,22,29, நவம்பர் 5,12,19 ஆகிய நாட்களில் வியாழன்கிழமைகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து அதிகாரி 4 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.05 மணிக்கு மும்பை சிஎஸ்எம்டி ரயில் நிலையத்திற்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையம் தானோ, தாதர், கல்யாண், புனே, குர்துவாதி, சேலாப்பூர், வாடி, ராய்ச்சூர், அடோனி, கூட்டி, ரேணிகுண்டா, அரக்கோணம் திருவள்ளூர், கடற்கரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
விசாகப்பட்டினம் - SMVT பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ரயில் எண் 08583 அக்டோபர் 6, 13, 20, 27, நவம்பர் 3,10,17,24ஆம் தேதிகளில் செவ்வாய்கிழமைகளில் இயக்கப்படும். விசாகப்பட்டினத்தில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12.45 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் பெங்களூரு - விசாகப்பட்டினம் இடையே ரயில் எண் 08584 அக்டோபர் 7,14,21,28, நவம்பர் 4,11,18,25 ஆகிய புதன்கிழமைகளில் இயக்கப்படும் என தெரவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் இருந்து இந்த ரயில் பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1.30 மணிக்கு விசாகப்பட்டினத்தை சென்றடைகிறது. இந்த ரயில் பெங்களூரு, கிருண்ராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூர், கூடூர், விஜயவாடா, சமல்கோட், துவ்வாடா, விசாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
மும்பை லோக்மான்ய திலக் டெர்மினால் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மும்பை லோக்மான்ய திலக் முனையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு அக்டோபர் 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் , நவம்பர் 5, 12 மற்றும் 19 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ரயில் எண் 01464 திருவனந்தபுரத்திலிருந்து லோக்மான்ய திலக் முனையத்திற்கு அக்டோபர் 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளிலும் , நவம்பர் 7, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும், ஆனால், இநத் ரயில் தமிழகம் வழியாக இயக்கப்படுவதில்லை. எனவே, சென்னை மும்பை uரயில் காட்பாட்டி, ஜோலார்பேட்டை வழியாக செல்லும். விசாகப்பட்டினம் - பெங்களூரு சிறப்பு ரயில் அரக்கோணம், திருவள்ளூர் வழியாக செல்லும். எனவே, தேதியை நோட் செய்து கொண்டு உங்கள் டிக்கெட்டுகளை உடனே முன்பதிவு செய்யுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.