• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /வார இறுதி நாட்கள்.. ஊருக்கு செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னையில் ஸ்பெஷல் பஸ்

வார இறுதி நாட்கள்.. ஊருக்கு செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னையில் ஸ்பெஷல் பஸ்

Chennai Special Buses: முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Written ByUmabarkavi K
Published: Aug 28, 2026, 10:46 IST|Updated: Aug 28, 2026, 11:00 IST
joinshare
வார இறுதி நாட்கள்.. ஊருக்கு செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னையில் ஸ்பெஷல் பஸ்
Image Credit: Image Source: Chatgpt AI

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

2

WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

3

வள்ளல் சி.கந்தசாமி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! கல்விக்காக சொத்தை எழுதி வைத்தவர்..

4

Explained | பெயர் மாறும் “மேற்கு வங்கம்” ஒரு மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்படுகிறது..?

5

WTC Final: கனவு நனவாகுமா? இந்தியாவுக்கு சாதகமாக அமைய வேண்டிய 5 முக்கிய டெஸ்ட் முடிவுகள்! Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai Special Buses: தமிழகத்தில்  பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. விடுமுறை நாட்கள், விசேஷ தினங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், பயணிகள் கூட்ட நெரிசலின்றி தங்கள் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வாரந்தோறும் கூட சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. 

அந்த வகையில், முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில்  இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்

தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆகஸ்ட் 27ஆம் தேதியான நேற்று (வியாழக்கிழமை பௌர்ணமி) ஆகஸ்ட் 28ஆம் தேதி (சனிக்கிழமை) ஆகஸ்ட் 29ஆம் தேதி (சனிக்கிழமை) மற்றும் ஆகஸ்ட் 30 (ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம்) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு ஆகஸ்ட் 27ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று 380 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 1140  பேருந்துகளும், ஆகஸ்ட் 29ம் தேதி  (சனிக்கிழமை) 1020 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

3,870 சிறப்பு பேருந்துகள் இயக்கம்@CMOTamilnadu @TVKVijayHQ @rajmohan @TamilanParthib1 @arasubus 

— TN DIPR (@TNDIPRNEWS) August 27, 2026

 

எந்தெந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள்?

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 27 முதல் ஆகிய ஒவ்வொரு நாட்களிலும் 130 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 29ஆம் தேதிகளில் நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 90 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் ஆகஸ்ட் 30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று 690 சிறப்பு பேருந்துகள் இயக்கிட  திட்டமிடப்பட்டுள்ளது.

டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 5230 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 12078 பயணிகளும், சனிக்கிழமை 8256 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 13567 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai