• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை.. ஊருக்கு போறீங்களா? 5,706 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை.. ஊருக்கு போறீங்களா? 5,706 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

TNSTC Special Buses: காந்தி ஜெயந்தி, வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஊருக்கு செல்வோர் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Written ByUmabarkavi K
Published: Sep 29, 2026, 09:56 AM IST|Updated: Sep 29, 2026, 10:03 AM IST
joinshare
காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை.. ஊருக்கு போறீங்களா? 5,706 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

2

நியூசிலாந்துக்கு பறக்கிறார் முகமது ஷமி - இந்திய அணிக்கு வர அதிக வாய்ப்பு - ஏன்?

3

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

4

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

5

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TNSTC Special Buses: தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்கள் காலாண்டு விடுமுறையில் இருக்கின்றனர். காலாண்டு விடுமுறை முடிந்து,  அக்டோபர் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையில், அக்டோபர் 2ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காந்தி ஜெயந்திக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளிக்கிழமை, வார இறுதி நாட்கள் என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையை அடுத்து, பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்படுபவார்கள். இதனை கருத்தில் கொண்டு, தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

அக்டோபர் 1ஆம் தேதி (வியாழக்கிழமை), அக்டோபர் 2ஆம் தேதி (வெள்ளிக்கிழமை - காந்தி ஜெயந்தி) அக்டோபர் 3ஆம் தேதி (சனிக்கிழமை) மற்றும் அக்டோபர் 4ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று 1580 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

மேலும் படிக்க: சென்னையில் நாளை (செப்.29) பவர்கட்.. 5 மணி நேரம் மின்தடை எங்கெல்லாம்?

அக்டோபர் 2ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 745 பேருந்துகளும், அக்டோபர் 3ஆம தேதி (சனிக்கிழமை) அன்று 895 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு அக்டோபர்  ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று 220 பேருந்துகளும், அக்டோபர் 2ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று 115 பேருந்துகளும், 03/10/2026 சனிக்கிழமை அன்று 115 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.‘

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து அக்டோபர் 1ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று 185 பேருந்துகளும், அக்டோபர் 2,3ஆம் தேதிகளில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 90 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எந்தெந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள்?

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் அக்டோபர் 4ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று 1471 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 28,402 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 5497 பயணிகளும் சனிக்கிழமை அன்று 6744 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 24,123 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க: சென்னை : தூய்மை பணியாளர்களுக்கு குட்நியூஸ்! நாள்தோறும் உணவுப்படி ரூ.50

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai