• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /இனி எழும்பூரில் ரயில்கள் புறப்படாது! செப்டம்பர் 1 முதல் அமல்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

இனி எழும்பூரில் ரயில்கள் புறப்படாது! செப்டம்பர் 1 முதல் அமல்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

Chennai Egmore Railway Station Update: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளுக்காக செப்டம்பர் 1ம் தேதி முதல் விரைவு ரயில்களின் சேவையில் சில மாற்றங்களை தெற்கு ரயில்வே செய்துள்ளது. இதன் மூலம், எழும்பூரில் ரயில்கள் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Aug 19, 2026, 12:56 PM IST|Updated: Aug 19, 2026, 01:19 PM IST
joinshare
இனி எழும்பூரில் ரயில்கள் புறப்படாது! செப்டம்பர் 1 முதல் அமல்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
Image Credit: Image Source: Chatgpt AI

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

2

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

3

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

4

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

5

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai Egmore Railway Station Update: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. பல மாதங்களாக எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பிலான  பணிகள் நடந்து வருகிறது. உலகத்தர வசதிகளுடன் இந்த பணிகள் நடந்து வருகிறது. 

எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள்

பல தளங்களுடன் கூடிய கார் பார்க்கிங், நவீன நடைமேடைகள், நடைமேம்பாலங்கள், பயணிகள காத்திருப்பு அறைகள், கழிவறைகள் வசதி, நவீன பார்சல் அலுவலகம் உள்ளிட்டவையை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் காரணமாக, சில நடைமேடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 

இதனால், சில விரைவு ரயில்கள் தாம்பரம், மாம்பலம், சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த நிலையில், எழும்பூர் ரயில் பராமரிப்பு பணிகளுக்காக செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  அவை என்னென்ன ரயில்கள் என்பது குறித்து பார்ப்போம்.

Changes in Train Services 🚆

Due to redevelopment works at Chennai Egmore Railway Station, train services will undergo temporary changes from 01 September to 15 October 2026.

Passengers are requested to check train details before travel and plan their journey accordingly.

— Southern Railway (@GMSRailway) August 18, 2026

 

1) மன்னார்குடி - எழும்பூர் விரைவு ரயில்

செப்டம்பர் 4ஆம் தேதி முதல் அக்டோபர் 13ஆம் தேதி வரை மன்னார்குடி - எழும்பூர் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மன்னார்குடியில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், செப்டம்பர் 4 முதல் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மறுமார்க்கத்தில் செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு,  மன்னார்குடி சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.

2) திருச்சி, சேலம், மும்பை விரைவு ரயில்கள்

திருச்சி - சென்னை எழும்பூர் ராக்ஃபோர்ட் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 15ஆம் தேதியும், செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை திருச்சியில் இருந்து இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு, மாம்பலம் வரை மட்டுமே சென்றடையும். எழும்பூருக்கு திருச்சி - சென்னை விரைவு ரயில் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை சி.எஸ்.டி–சென்னை எழும்பூர் அதிவேக  ரயில் செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை எழும்பூருக்கு செல்லாமல், கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில், சேலம் - எழும்பூர் அதிவேக ரயில் (22154) மாம்பலம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர்–சேலம் அதிவேக விரைவு ரயில், செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 16 வரை எழும்பூருக்குப் பதிலாக சென்னை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்.  சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3) உழவன் விரைவு ரயில்

சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் விரையு ரயில் சேவை செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 19ஆம் தேதி  வரை தாமதமாக இயக்கப்படும்.

செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அக்டோபர் 15 வரை 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாம்பலம் - கோடம்பாக்கம் வழித்தடத்தில் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai