• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /சென்னையில் பரவும் வைரஸ் காய்ச்சல்! அறிகுறிகள் என்னென்ன? உஷாரா இருங்க மக்களே..

சென்னையில் பரவும் வைரஸ் காய்ச்சல்! அறிகுறிகள் என்னென்ன? உஷாரா இருங்க மக்களே..

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி? காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 15, 2026, 01:15 PM IST|Updated: Sep 15, 2026, 01:25 PM IST
joinshare
சென்னையில் பரவும் வைரஸ் காய்ச்சல்! அறிகுறிகள் என்னென்ன? உஷாரா இருங்க மக்களே..
Image Credit: Viral Infection | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

2

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

3

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

4

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

5

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த நிலையில் மக்கள் அலட்சியம் காட்டாமல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சுகாதார ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கெள்வோம்.

சென்னையில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், கடந்த சில வாரங்களாகவே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் மருத்துவர்கள் பலர் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

கடந்த 10-12 நாட்களில், கிட்டத்தட்ட 2,000க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக கூறியிருர்க்கின்றனர். இதில், மொத்தம் 140க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொசுவினால் உருவாகும் இந்த தொற்று, மக்களை துன்புறுத்தும் ஆபத்தான நோயாக பார்க்கப்படுகிறது. இதில், 4,500க்கும் மேற்பட்ட தொற்றுகள் ஆகஸ்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 160 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | விநாயகர் சுதுர்த்தி விடுமுறை.. ஊர் திரும்புவோருக்கு சிறப்பு ஏற்பாடு.. தமிழக அரசு அதிரடி!

சென்னையில் எந்தெந்த பகுதிகளில் பரவுகிறது?

சென்னையை பொருத்தவரை, அடையார், அண்ணா நகர் மற்றும் வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகள், அதிக காய்ச்சல் பரவும் பகுதிகளாக பார்க்கப்படுகிறது. மருத்துவ அதிகாரிகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இந்த பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அது மட்டுமன்றி யாரெல்லாம் காய்ச்சல், உடல் வலி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வருகிறார்களோ, அவர்களும் கவனிக்கப்படுகிறார்கள்.

மருத்துவர்கள் கூறுவது என்ன?

பரவும் நோய் குறித்து பேசும் மருத்துவர்கள், மூச்சுத்திணரல், இன்ஃப்ளூயன்ஸா ஏ, ரைனோவைரஸ் மற்றும் பொதுவாக ஆர்.எஸ்.வி (RSV) என அறியப்படும் பல சுவாச வைரஸ்கள் நகரில் பரவி வருவதாக தெரிவிக்கின்றனர். கூட்டமாக இருக்கும் பகுதிக்ள், குடும்பத்தில் யாருக்கேனும் இந்த வைரஸ் தொர்று வருவது போன்ற காரணங்களால் இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவுவதாக தெரிவிக்கின்றனர்.

காரணம் என்ன?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அறிகுறிகள் என்ன?

ஒரு வாரத்திற்கும் மேல் நீடிக்கும் காய்ச்சல், கடுமையான தலைவலி, மூட்டுவலி, தொண்டை வலி மற்றும் வறட்டு இருமல் உள்ளிட்டவை அந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

தடுப்பது எப்படி?

மக்கள் நிறைந்திருக்கும் பகுதிகளில், முகக்கவசம் அணிவது, அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுதல் உள்ளிட்டவை தடுப்பு முறைகளாக பார்க்கப்படுகின்றன.

டெங்கு நோயில் இருந்து தப்பிக்க, உங்கள் வீடு மற்றும் சுற்றியிருக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் கொசுவுக்கான வலை வைத்து, கொசு கடிக்காத வண்ணம் ஆடைகளை உடுத்த வேண்டும்.

என்ன சாப்பிட வேண்டும்?

தினமும் இரண்டு முறை, இறைச்சி, மீன், நட்ஸ், பயறு, கடலை, சோயா, பன்னீர் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

மருத்துவ ஆலோசனை:

காய்ச்சல், தொடர் உடல்வலி, தொண்டை வலி, சளி, இருமல் அதிகரிப்பது போன்ற பிரச்சனைகள் இருந்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி, சிகிச்சை பெற்று தகுந்த ஓய்வை எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க | சென்னையில் நாளை 5 மணி நேரம் மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா?

Add Zee News as a Preferred Source
TAGS:
Health Tips