• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /Explained: மீனம்பாக்கம் ஏர்போட்டில் என்ன பிரச்னை? Code F வகை விமானங்களின் அவசியம் என்ன.. அதுபற்றி தெரியுமா?

Explained: மீனம்பாக்கம் ஏர்போட்டில் என்ன பிரச்னை? Code F வகை விமானங்களின் அவசியம் என்ன.. அதுபற்றி தெரியுமா?

Meenambakkam Airport Explained: மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள பிரச்னை என்ன என்பதை விரிவாக பார்ப்போம். மேலும், Code F வகை விமானங்கள் சேவை ஏன் இங்கு இல்லை என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளுங்கள்.

Written ByUmabarkavi K
Published: Aug 28, 2026, 20:03 IST|Updated: Aug 28, 2026, 21:13 IST
joinshare
Explained: மீனம்பாக்கம் ஏர்போட்டில் என்ன பிரச்னை? Code F வகை விமானங்களின் அவசியம் என்ன.. அதுபற்றி தெரியுமா?
Image Credit: Image Source : Chatgpt AI

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

2

WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

3

வள்ளல் சி.கந்தசாமி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! கல்விக்காக சொத்தை எழுதி வைத்தவர்..

4

Explained | பெயர் மாறும் “மேற்கு வங்கம்” ஒரு மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்படுகிறது..?

5

WTC Final: கனவு நனவாகுமா? இந்தியாவுக்கு சாதகமாக அமைய வேண்டிய 5 முக்கிய டெஸ்ட் முடிவுகள்! Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Meenambakkam Airport Explained: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சென்னை விமான நிலைய பேச்சுக்கள் இருந்து வருகிறது. பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தவெக அரசு கைவிட்ட நிலையில், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்படும் என தவெக அரசு அறிவித்துள்ளது.

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடல்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த கிரீன்ஃபீல்ட் இரண்டாவது சர்வதேச விமான நிலையத் திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதையும், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் தவிர்க்கும் நோக்கில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.  

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் தற்போதைய கொள்ளளவான 3 கோடி பயணிகளைக் கையாள்வதையும் தாண்டி, எதிர்காலத் தேவைகளுக்கு புதிய விமான நிலையம் அவசியம் என்பதை ஒப்புக்கொண்ட அவர், விவசாய நிலங்களுக்கும் குடியிருப்புகளுக்கும் பாதிப்பு இல்லாத மாற்று இடத்தை அரசு தேர்வு செய்யும் என்றும் உறுதியளித்துள்ளார்.

மேலும், மீனம்பாக்கம் விமான நிலையத்தின் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதிய அணுகுசாலை மற்றும் வளைபாலத்துடன் (Flyover) கூடிய புதிய 5-வது முனையம் உருவாக்கப்படும் என்றார்.  தற்போது உள்ள முனையப் பணிகள் முடிந்தால் 3.5 கோடி பயணிகளைக் கையாளலாம். இந்த புதிய 5-வது முனையம் செயல்பாட்டுக்கு வந்தால் ஆண்டுக்கு 5.5 கோடி (55 மில்லியன்) பயணிகளைக் கையாளும் வகையில் விமான நிலையம் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் விஜய் உறுதியளித்தார்.  .

மீனம்பாக்கம் விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் தற்போது பயணிகள் சேவைக்காக முக்கியமாக Terminal 1, Terminal 2 மற்றும் Terminal 4 ஆகியவை இருக்கின்றன.  Terminal 1, காமராஜ் உள்நாட்டு முனையமாக செயல்படுகிறது. Terminal 2 புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையமாக உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு நேரடி விமானச் சேவைகள் உள்ளன. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் (துபாய், அபுதாபி), கத்தார் (தோஹா), சிங்கப்பூர், மலேசியா (கோலாலம்பூர், பினாங்கு), தாய்லாந்து (பாங்காக்), இலங்கை (கொழும்பு), இங்கிலாந்து (லண்டன்), ஜெர்மனி (பிராங்க்பர்ட்), ஹாங்காங், குவைத், ஓமன் (மஸ்கட்) உள்ளிட்ட பல சர்வதேச இடங்களுக்கு சென்னையிலிருந்து நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.

ஒருகாலத்தில் டெல்லி, மும்பைக்கு அடுத்தபடியாக நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் மூன்றாவது இடத்தில் இருந்த சென்னை, தற்போது பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களின் வளர்ச்சியால் ஐந்தாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. சர்வதேச அளவிலும் சென்னை விமான நிலையத்தின் நிலை பின்னடைவை சந்தித்து வருகிறது. தமிழ்நாடு நாட்டின் முக்கிய தொழில் மற்றும் ஏற்றுமதி மையமாக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதிகளவு பயணிகள் மற்றும் சரக்குகளை கையாளக்கூடிய சர்வதேச தரத்திலான விமான நிலையம் சென்னைக்கு அவசியமாகியுள்ளது.

மீனம்பாக்கம் விமான நிலைய பிரச்னை

ஏனென்றால், மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பரப்பளவு சுமார் 1,300 ஏக்கர். ஆனால், ஹைதராபாத் விமான நிலையம் சுமார் 5,500 ஏக்கர், பெங்களூரு விமான நிலையம் 4,000 ஏக்கர், நவி மும்பை விமான நிலையம் 2,866 ஏக்கர், டெல்லி விமான நிலையம் 5,100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன.

மேலும், சென்னை விமான நிலையத்தில் போதுமான டாக்ஸிவேக்கள் மற்றும் ஏர்பிரிட்ஜ்கள் இல்லாத காரணத்தால், பெரிய விமானங்களைக் கையாளும் திறன் கொண்ட Code F  விமான நிலையமாக சென்னை விமான நிலையம் (Code E வகை தற்போது) வகைப்படுத்தப்படவில்லை. இதனால் A380 போன்ற மிகப்பெரிய விமானங்கள் தரையிறங்க, சென்னை விமான நிலையம் ஏற்றதாக இல்லை. தென்னிந்தியாவில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் பெரிய விமானங்களை கையாளும் Code F விமான நிலையங்களாக உள்ளன. 

அமெரிக்காவுக்கு பெங்களூரு, மும்பை, டெல்லியில் இருந்து நேரடி விமானங்கள் இயக்கப்படுகிறது. இப்படியாக ஐரோப்பா நாடுகளுக்கு டெல்லி, மும்பை, ஹைதரபாத், பெங்களூருவில் இருந்து நேரடியாக செல்லக்கூடிய வகையில் விமான நிலையங்கள் உள்ளன. இதே போன்று, தற்போது மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யப்பட்டாலும் Code F வகை விமான நிலையங்களாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Code F வகை விமானங்கள் என்றால் என்ன?

Code F வகை விமானங்கள் என்பது விமானங்களின் அளவை அடிப்படையாக கொண்ட சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து விமானம் வகைப்படுத்துகிறது. விமானப் போக்குவரத்தில், சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) விமான நிலையங்களின் ஓடுபாதைகளை (Runways) அவற்றின் சிறகுகளின் அகலத்திற்கு (Wingspan) ஏற்ப வகைப்படுத்துகிறது. Airbus A380 போன்ற உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்கள் Code F வகையில் வருகின்றன. A380-ன் wingspan சுமார் 80 மீட்டருக்கு உள்ளது. அதனால் Code F விமானங்களை கையாளும் விமான நிலையத்தில்:

  • Code F என்பது மிக பிரம்மாண்டமான விமானங்களைக் குறிக்கும் குறியீடாகும்.
  • இந்த வகையின்கீழ் வரும் விமானங்கள் 65 மீட்டர் முதல் 80 மீட்டர் வரை சிறகுகளின் அகலத்தைக் கொண்டிருக்கும்.
  • ஓடுபாதை போதுமான அகலத்தில் இருக்க வேண்டும்
  • Taxiway போதுமான இடவசதியுடன் இருக்க வேண்டும்
  • மிகப்பெரிய விமானங்களை நிறுத்தும் வசதி வேண்டும்
  • Terminal மற்றும் Ground Handling வசதிகளும் பொருத்தமாக இருக்க வேண்டும்.

மீனம்பாக்கத்தில் Code F வகை விமானங்கள் வந்து போக முடியுமா?

அதிகாரப்பூர்வபடி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் Code E விமானம் வரை தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில சிறப்பு ஏற்பாடுகள் மூலம் Code F வகை விமானங்கள் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து செல்ல முடியும். பிரச்னையை பொறுத்தவரை, Code F வகை விமானங்கள் வந்து செல்ல முடியுமா என்பது கிடையாது. 

எத்தனை விமானங்களை மீனம்பாக்கத்தில் நிறுத்த இடம் இருக்கிறது என்பது தான். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 5க்கும் மேற்பட்ட விமானங்களை நிறுத்த இடம் இப்போது வரை கிடையாது. இதில், மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுப்படுத்தினாலும், இதுபோன்ற பெரிய விமானங்கள் ஒரே நேரத்தில் நிறுத்த முடியுமா என்பது கேள்விக் குறியாக இருக்கிறது. இதற்காக தான்,  இரண்டாவது விமான நிலையம் என்பது அவசியமாக இருக்கிறது.

மீனம்பாக்கத்திற்கு Code F ஏன் முக்கியம்?

சென்னையில் உள்ள பல தொழிற்சாலைகள் ஐரோப்பா நாடுகளை நம்பி உள்ளன. உற்பத்தி, ஐடி செக்டார் என்றாலும் இந்த நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி-ஏற்றுமதி, வாடிக்கையாளர் வருகை, வணிகப் பயணம் என தொடர்ந்து இருக்கிறது. சென்னையில் இருந்து இருந்து பெர்லின், பாரிஸ், லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களுக்கு இப்போது அதிக விமானங்கள் இயக்கப்படுவதில்லை.  

இதற்கு பிரதான காரணம், தொலைதூரம் பயணம் என்பதால் அதற்கான விமானங்கள் பெரும்பாலும் பெரிய விமானங்களாக தான் இருக்கும். ஒரே நாளில் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் வந்து போக வேண்டும் என்றால்,  வெளிநாட்டு விமான பைலட்   மற்றும் பணியாளர்கள் குறைந்தபட்சம் 8 மணி நேர ஓய்வு எடுக்கும் வரை அவை நிறுத்தி வைக்கவும் பராமரிக்கவும் ஏர்போர்ட்டில் இடம் வேண்டும். 

ஒரே நேரத்தில் 6 அல்லது 7 விமானங்கள் நிறுத்தி வைக்க வேண்டி வரும். அத்தனை விமானங்களை நிறுத்த மீனம்பாக்கத்தில் இடம் இல்லை. இதனால், மீனம்பாக்கம் விமான நிலையம் Code F விமானங்களுக்கு ஏற்ப விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே தீர்வு.

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai