கோவை ரயில் நிலைய யார்டில் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு நாட்களிலும் மெமு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதுடன் அக்டோபர் 4ஆம் தேதி 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் கோவை சந்திப்பில் நிற்காது என சேலம் கோட்ட தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அக்டோபர் 3 ஆம் தேதி மேட்டுப்பாளையம் - போத்தனூர் இடையே இயக்கப்படும் 66615 மேட்டுப்பாளையம் - போத்தனூர் மெமு ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்படும். ஆனால், அன்றைய தினம் இந்த ரயில் கோவை வடக்கு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
அதாவது, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வடக்கு வரை மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும். கோவை வடக்கு முதல் போத்தனூர் சந்திப்பு வரையிலான சேவை அன்றைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், 66616 போத்தனூர் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் போத்தனூர் சந்திப்பில் இருந்துமதியம் 3.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, கோவை வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 3.52 மணிக்கு புறப்படும். இதனால் போத்தனூர் முதல் கோவை வடக்கு வரையிலான சேவை இருக்காது. கோவை வடக்கில் இருந்து மேட்டுப்பாளையம் வரை வழக்கம்போல் ரயில் இயக்கப்படும்.
அக்டோபர் 4 ஆம் தேதி கோவை ரயில் நிலையத்தில் நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழித்தடம் மாற்றி இயக்கப்பட உள்ளன. இதனால் இந்த ரயில்கள் கோவை சந்திப்பில் நிற்காது. அதற்கு பதிலாக போத்தனூர் சந்திப்பில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் போத்தனூர் - இருகூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். கோவை சந்திப்பில் நிற்காது. போத்தனூர் சந்திப்பில் மதியம் 12.15 மணிக்கு வந்து, 12.20 மணிக்கு புறப்படும்.
இந்த ரயிலும் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும். கோவை சந்திப்பில் நிற்காமல், போத்தனூர் சந்திப்பில் மதியம் 12.47 மணிக்கு வந்து 12.50 மணிக்கு புறப்படும்.
வழக்கமான வழித்தடத்துக்கு பதிலாக இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும். கோவை சந்திப்பில் நிற்காது. போத்தனூரில் காலை 10.32 மணிக்கு வந்து 10.35 மணிக்கு புறப்படும்.
இந்த ரயிலும் இருகூர் - போத்தனூர் வழியாக மாற்றுப்பாதையில் செல்லும் கோவை சந்திப்பில் நிறுத்தம் கிடையாது. போத்தனூர் சந்திப்பில் காலை 10.47 மணிக்கு வந்து 10.50 மணிக்கு புறப்படும்.
இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும் இந்த ரயில் கோவை சந்திப்பில் நிற்காது. அதற்கு பதிலாக போத்தனூரில் காலை 11.30 மணிக்கு வந்து 11.35 மணிக்கு புறப்படும்.
இந்த ரயிலும் இருகூர் - போத்தனூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். கோவை சந்திப்பில் நிறுத்தம் இல்லாத நிலையில், போத்தனூர் சந்திப்பில் மதியம் 12.30 மணிக்கு வந்து 12.35 மணிக்கு புறப்படும்.
கோவை சந்திப்பில் இறங்கவோ, ஏற்வோ திட்டமிட்டுள்ள பயணிகள் அக்டோபர் 4 ஆம் தேதி தங்களது ரயில் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை முன்கூட்டியே கவனிக்க வேண்டும். குறிப்பாக மாற்றுப்பாதையில் செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கும் போத்தனூர் சந்திப்பில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளதால், பயண திட்டத்தை அதற்கேற்ப மாற்றிக் கொள்வது அவசியம்.