• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /96 திரைப்படம் ரீ-ரிலீஸ்! நாளை முதல் திரையரங்குகளில் கண்டுகளிக்கலாம்..

96 திரைப்படம் ரீ-ரிலீஸ்! நாளை முதல் திரையரங்குகளில் கண்டுகளிக்கலாம்..

‘96’ திரைப்படம் அக்டோபர் 9 முதல் மறுவெளியீடு! விஜய் சேதுபதி – திரிஷாவின் ‘ராம் – ஜானு’ காதல் மீண்டும் திரையரங்குகளில்

Written ByYuvashree M
Published: Oct 08, 2026, 01:59 PM IST|Updated: Oct 08, 2026, 02:04 PM IST
joinshare
96 திரைப்படம் ரீ-ரிலீஸ்! நாளை முதல் திரையரங்குகளில் கண்டுகளிக்கலாம்..
Image Credit: 96 Movie | X page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தமிழகத்தில் அக். 14 வரை கனமழைக்கு வாய்ப்பு.. சென்னையில் மழை பெய்யுமா? வானிலை அப்டேட்

தமிழகத்தில் அக். 14 வரை கனமழைக்கு வாய்ப்பு.. சென்னையில் மழை பெய்யுமா? வானிலை அப்டேட்

2

Explained: "வாக்குகளை காப்போம்" -அக்டோபர் 10 தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வெடிக்கும் மக்கள் போராட்டம்!

3

UPI MDR கட்டணம்: அமலாக்கம் ஒத்திவைப்பா? பண்டிகை காலத்தில் NCPI நிவாரணம்

4

96 திரைப்படம் ரீ-ரிலீஸ்! நாளை முதல் திரையரங்குகளில் கண்டுகளிக்கலாம்..

5

கேப்டன் பதவியில் இருந்து சுப்மன் கில் நீக்கம்? கம்பீர் அதிரடி.. பிசிசிஐ கைகாட்டும் வீரர்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்த ‘96’ திரைப்படம், வரும் அக்டோபர் 9, 2026 அன்று மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படத்தை இயக்குநர் சி. பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார். பள்ளிப் பருவத்தில் உருவான காதல், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் இருவரின் நினைவுகள் மற்றும் அந்த சந்திப்பின்போது வெளிப்படும் உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதி – ராம் கதாபாத்திரத்திலும், திரிஷா – ஜானு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி. கிஷன், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இயக்குநர் சி. பிரேம்குமார் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை கவனித்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜு மற்றும் என். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளனர். ஆர். கோவிந்தராஜ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

‘காதலே காதலே’, ‘தி லைஃப் ஆஃப் ராம்’, ‘அந்தாதி’, ‘இரவிங்கு தீவாய்’ உள்ளிட்ட பாடல்கள் படத்தின் உணர்வுகளோடு இணைந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

Madras Enterprises நிறுவனத்தின் சார்பில் எஸ். நந்தகோபால் தயாரித்துள்ள இப்படம், வெளியான காலகட்டத்திலேயே இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பு ரசிகர்கள் வரை பெரும் வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவின் நடிப்பில் உருவான ராம் – ஜானு கதாபாத்திரங்கள் ரசிகர்களின் நினைவில் நீங்காத இடத்தைப் பிடித்தன. காதல், பிரிவு, நட்பு, பள்ளிப் பருவ நினைவுகள் மற்றும் நிறைவேறாத காதலின் உணர்வுகளை இயல்பான திரைக்கதை மூலம் பதிவு செய்த ‘96’, தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க காதல் திரைப்படங்களில் ஒன்றாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில், ‘96’ திரைப்படம் வரும் அக்டோபர் 9, 2026 அன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதன் மூலம் ஏற்கனவே படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் மீண்டும் ‘96’ படத்தின் அனுபவத்தை பெரிய திரையில் கொண்டாடும் வாய்ப்பையும், திரையரங்கில் இப்படத்தைப் பார்க்கத் தவறிய புதிய தலைமுறை ரசிகர்கள் முதன்முறையாக பெரிய திரையில் ‘96’ திரைப்படத்தை ரசிக்கும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema