• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /‘பைசன்’ வெற்றியை அடுத்து..துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்! அறிவிப்பு வந்துருச்சு..யார் இயக்குநர்?

‘பைசன்’ வெற்றியை அடுத்து..துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்! அறிவிப்பு வந்துருச்சு..யார் இயக்குநர்?

துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘பைசன்’ இந்த திரைப்படத்திற்கு பிறகு தற்போது ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 14, 2026, 03:40 PM IST|Updated: Sep 14, 2026, 03:48 PM IST
joinshare
‘பைசன்’ வெற்றியை அடுத்து..துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்! அறிவிப்பு வந்துருச்சு..யார் இயக்குநர்?
Image Credit: Dhruv Vikram | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆன திரைப்படம், ‘பைசன் காளமாடன்’. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில், துருவ் விக்ரம்-அனுபமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தற்போது அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் துருவ் விக்ரம் தன்னுடைய அடுத்த படத்தில் கமிட் ஆகி இருக்கிறார்.

புதிய திரைப்படம்..!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழ் சினிமாவில் தனது நான்காவது படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் அழுத்தமான நடிப்பிலும் கவனம் ஈர்த்து வரும் துருவ் விக்ரம், முதல் முறையாக ரசிகர்களை அதிக அளவில் கவரும் வகையிலான கமர்ஷியல் கதைக்களத்தில் நடிக்கவுள்ளார்.

படத்தின் தலைப்புடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் துருவ் விக்ரம் இதுவரை இல்லாத வகையில் ஸ்டைலிஷான மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். நேரடி ஆக்‌ஷன் காட்சிகளின் தன்மையுடன் காமிக் புக் பாணியிலான காட்சியமைப்பும் இணைந்திருக்கும் இந்த போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

புதிய போஸ்டரில் பிரவுன் நிற உடையில், வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் துருவ் விக்ரம் தோன்றுகிறார். அவரது தீவிரமான பார்வையும் ஆக்ரோஷமான உடல்மொழியும் கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக முன்னோக்கி நீட்டியிருக்கும் அவரது கை, போஸ்டருக்கு அதிரடியான தோற்றத்தை கொடுக்கிறது. ‘No Retakes Allowed’ என்ற டேக்லைனும் படத்தின் ஆக்‌ஷன் பின்னணியை உணர்த்துகிறது.

மேலும் படிக்க | காதல் மனைவியை சீக்ரெட்டாக விவாகரத்து செய்த பிரபல நடிகர்! 10 வருட திருமண வாழ்க்கை முறிவு..

படக்குழுவினர் யார்?

ஃபர்ஸ்ட் லுக் ‘ஜாக்கி’ திரைப்படம் ஸ்டைலிஷான ஆக்‌ஷன் கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருவதையும், துருவ் விக்ரமின் புதிய திரைமுகத்தையும் அறிமுகப்படுத்துகிறது.

இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விக்கி ஒளிப்பதிவு செய்ய, ஜெயசூர்யா எஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜி.எம். சேகர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர் விக்ரம் மோர் வடிவமைக்கிறார்.

இணையத்தில் வலம் வந்த சர்ச்சைகள்..!

துருவ் விக்ரம் குறித்து, கடந்த சில வாரங்களாக இணையத்தில் பல்வேறு சர்ச்சைகள் வலம் வர ஆரம்பித்தன. நடிகை அனுபமா, சில நாட்களுக்கு முன்னதாக ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது, தான் ஒரு abusive உறவில் இருந்ததாகவும், அந்த உறவில் தனக்கு இருந்த காதலர் தான் பேசும் வார்த்தைகளில் இருந்து, தான் உடுத்திய ஆடைகள் வரை அனைத்தையும் கட்டுப்படுத்தியதாக கூறினார். இவரும் துருவ் விக்ரமும் காதல் உறவில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அனுபமா சொல்லும் அந்த ஆள், துருவ் தானோ என்கிற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. இருப்பினும் அனுபமா அந்த நேர்காணலில் யார் பெயரையும் கூறவில்லை என்பதால் எதுவும் வெளிப்படையானதாக தெரிவிக்கப்படவில்லை என்பது தெரிந்தது. அதே சமயத்தில், இருமுறை செய்தியாளர்களை சந்திப்பதாக தெரிவித்து விட்டு, இரு முறையும் அதனை ரத்து செய்தார். இதனால், இந்த சர்ச்சைகளுக்கான தெளிவான பதில் இருவரிடம் இருந்து கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மூக்குத்தி அம்மன் 2 டீசர் வெளியீடு! சூர்யாவின் ‘சீன்’ படத்துடன் மோதும் நயன்தாரா..

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema