மலையாள நடிகராக இருந்தாலும் தமிழில் எக்கச்சக்க ரசிகர்களை வைத்திருப்பவர், ஸ்ரீநாத் பாசி. இவர், தன் மனைவியை 2 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
தென்னிந்திய திரையுலகில், முக்கிய நடிகராக இருப்பவர் ஸ்ரீநாத் பாசி. இவர், மலையாளத்தில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார் ஸ்ரீநாத் பாசி. இவர், தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
Sreenath Bhasi
மலையாள நடிகராக இருப்பவர், ஸ்ரீநாத் பாஸி. இவர் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, ’ஹோம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் இவர். குறிப்பாக ‘சுபாஷே..’ என இவரை மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் இவர் குழுக்குள் விழுந்த பின், இவரை இவருடைய நண்பர்கள் அழைத்தது பல ரசிகர்களிடம் எதிரொலித்தது.
2/5
Sreenath Bhasi Reethu Mathew Divorce
ஸ்ரீநாத்திற்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த ரீத்து மேத்யூ என்பவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. சினிமாத்துறைக்குள் நுழைந்த போது ஸ்ரீநாத் ரீத்துவை சந்தித்திருக்கிறார். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இவர்கள் பின்பு காதலர்களாக மாறி 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டுள்ளனர்.
3/5
Sreenath Bhasi Reethu Mathew Divorce
சமீபத்தில் ஸ்ரீநாத் தான் நடித்த ஒரு படத்திற்கான ப்ரமோஷனில் கலந்து கொண்டுள்ளார். அதில் அவர் தான் இப்போது தன்னுடைய பெற்றோருடன் தங்கியிருப்பதாகவும் 2024ஆம் ஆண்டே, தன்னுடைய மனைவியை பிரிந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இது யாருக்கும் தெரியாது என்று கூறிய அவர், இப்போதுதான் இது குறித்து முதன்முதலாக பேசுவதாக தெரிவித்துள்ளார்.
4/5
Sreenath Bhasi Divorce Reason
இவர்களுக்குள் ஏன் திருமண விவாகரத்து நடந்தது என்பதை ஸ்ரீநாத் பாசி கூறவில்லை. இருப்பினும் இவருக்கு ஆறுதலாக சிலர் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
5/5
Sreenath Boycotted in Cinema
ஸ்ரீநாத் பாசி, இதற்கு முன்னர் கேரள சினிமா உலகால் Boycott செய்யப்பட்டிருக்கிறார். இவருக்கு மதுப்பழக்கமும் அதிக அளவில் உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன.