82 வயது மூதாட்டியுடன் 28 வயது நடிகர் ஜேடன் ஸ்மித்திற்கு காதலா? உண்மை என்ன?
கடந்த சில தினங்களாக, 28 வயதாகும் நடிகர் ஜேடன் ஸ்மித், 82 வயது ஃபேஷன் டிசைனர் ஒருவருடன் கைக்கோர்த்து செல்வது போன்ற சில போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது உண்மையா இல்லையா என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
பிரபல ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித்தின் மகன்தான் ஜேடன் ஸ்மித். இவரைப்பற்றிய சில போட்டோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
யார் இந்த ஜேடன் ஸ்மித்?
வாரிசு நடிகர்களுள் ஒருவரான ஜேடன் ஸ்மித், தன்னுடைய தந்தை மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார். இவருடைய தாயாரான ஜாடா ஸ்மித் அமெரிக்க நடிகை ஆவார். ஜேடன் ஸ்மித்தை நாம் முதன் முதலாக ‘தி கராத்தே கிட்’ திரைப்படத்தில் ஜாக்கி சானுடன் பார்த்திருப்போம். ஆனால், இது அவர் நடித்த முதல் படமல்ல. இவர் முதன் முதலில் நடித்தது, The pursuit of happyness எனும் திரைப்படத்தில்தான்.
இந்த படத்தில அவர் தன்னுடைய தந்தையான வில் ஸ்மித்துடன் சேர்ந்து நடித்திருப்பார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஜாக்கி சானுடன் 2008ல் தி டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில் எனும் திரைப்படத்தில் நடித்தார். பின்னர் After Earth எனும் படத்திலும் தன் தந்தையுடன் நடித்திருந்தார். இப்படி தன்னுடைய டீன் ஏஜ் வயதில் திரையுலகில் பயங்கர ஆக்டிவாக இருந்த ஜேடன், சமீப காலங்களாக தன்னுடைய ஃபேஷன் அறிவிற்காகவும் அறியப்படுகிறார்.
வைரலாகும் ஜேடன் ஸ்மித் போட்டோக்கள்..!
ஜேடன் ஸ்மித்திற்கு தற்போது 28 வயது ஆகிறது. இவர், 82 வயதான பிரபல பிரெஞ்சு ஃபேஷன் டிசைனரான மிச்செல் லேமி என்பவருடன் கைக்கோர்த்து வலம் வருவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலர், இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூற, இன்னும் சிலர் இவர்கள் நிச்சயதார்த்தமே (Engagement) செய்து கொண்டதாக கூறி வருகின்றனர்.
பிரெஞ்சு ஃபேஷன் டிசைனரான மிச்செல், தன்னுடைய ரியல் எஸ்டேட் சொத்தில், 80 சதவீதத்தை ஜேடன் ஸ்மித்திற்கு தருகிறேன் என கூறியதாகவும் ABC 10 News செய்தியை வெளியிட்டிருக்கிறது.
வைரலாகும் போட்டோக்களில், ஜேடன் ஸ்மித்தும், மிச்செல்லும் கைக்கோர்த்திருப்பது போலவும் முத்தம் கொடுத்துக்கொள்வது போலவும், இருவரும் செல்ஃபி எடுத்துக்கொள்வது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதை பார்க்கும் போது நம் அனைவர் மனதிலும் தோன்றும் ஒரே கேள்வி, இது உண்மையா அல்லது சித்தரிக்கப்பட்டத? என்பதுதான்.
மேலும் படிக்க | சாம் விஷால் - ஸ்ரீநிஷா நிச்சயதார்த்தம்..! சீக்ரெட்டா காதலை வளர்த்துருக்காங்களே..
52 வயது வித்தியாசம்:
28 வயதாகும் ஜேடன் ஸ்மித்திற்கும் 82 வயதாகும் மிச்செல்லிற்கும் கிட்டத்தட்ட 52 வயது வித்தியாசம் இருக்கிறது. சொல்லப்போனால், மிச்செல் ஜேடன் ஸ்மித்திற்கு பாட்டியாகும் வயது உடையவராக இருக்கிறார். இந்த நிலையில், எப்படி இவர்கள் இருவருக்குள்ளும் காதல் வந்தது? என்று அனைவரும் கேட்க, இதை உண்மை என்று இரு தரப்பிலும் கூறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இவை அனைத்தையும் AI வைத்து ஏதோ சில கயவர்கள் உருவாக்கியுள்ளனர் என்பது, அதை இவர்களே இணையத்தில் பரவவிட்டு ஒரு பொய்க்கதையை புனைந்துள்ளனர் என்பதும் தெரிகிறது.
ஏற்கனவே திருமணம் ஆனவர்..!
ஜேடன் ஸ்மித்துடன் இணைத்து பேசப்படும் மிச்செல், ஏற்கனவே சக ஃபேஷன் டிசைனரான ரிக் ஓவன்ஸ் என்பவரை திருமணம் செய்தவராக இருக்கிறார். அது மட்டுமன்றி, மிச்செல், ஃபேஷன் டிசைனிங் துறையில் தொழிலதிபராகவும், மேடைகளில் தன் கலையை காண்பிப்பவராகவும் இருக்கிறார்.
இவர், தன்னுடைய கணவருடன் இணைந்து Owenscorp எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஆடை வடிவமைஉ மட்டுமன்றி, பல்வேறு கலைத்துவ வேலைகளும் செய்து தரப்படுகின்றன. இவர் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், ஃபேஷன் உலகில் வாழ்நாள் சாதனையாளர் விருதை ஃபேஷன் ட்ரஸ்ட் US அவார்ட்ஸிடமிருந்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கமல்ஹாசனுக்கும் எனக்கும் காதலா? சேச்சே...அப்படி பேசாதீங்க! பிரபல நடிகை பேட்டி..