பிரபல பாடகர்களான ஸ்ரீநிஷாவும் சாம் விஷாலும் திருமண பந்தத்தில் இணைய இருக்கின்றனர். இதையடுத்து, இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள்தான் ஸ்ரீநிஷாவும் சாம் விஷாலும். இவர்கள் இருவரும் காதலித்து தற்போது நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1/5
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி
தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது, சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்காகவும் பெரியவர்களுக்காகவும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்ட பலர் இப்போது தமிழ் திரையுலகில் பாடகர்களாக இருக்கின்றனர்.
2/5
சாம் விஷால்
இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்தான் ஸ்ரீநிஷாவும் சாம் விஷாலும் ஒன்றாக கலந்து கொண்டனர். பின்னர் இவர்கள் இணைந்து பல்வேறு பாடல்களையும் பாடினர். குறிப்பாக ஸ்ரீநிஷா தன்னுடைய 7 வயதில் பாடல் பயணத்தை ஆரம்பித்து இப்போது யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்களின் நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார்.
3/5
ஸ்ரீநிஷா
ஸ்ரீநிஷா தொடர்ந்து ஒரு பக்கம் ஏ.ஆர்.ரஹ்மான், ஹிப் ஹாப் ஆதி உள்ளிட்டோர் நிகழ்ச்சிகளில் எல்லாம் பாடி வர இன்னொரு பக்கம் சாம் விஷாலும் பல்வேறு பாடல்களை பாடி வருகிறார். இந்த சமயத்தில்தான் இருவரும் ஒருவருடன் இன்னொருவர் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘பார்ட்னர்’ என்று குறிப்பிட்டு வந்தனர். இருப்பினும் இவர்கள் நெடுநாள் நண்பர்கள் என்பதால் இவர்கள் இருவரும் சகஜமாக இந்த கமெண்ட்களை வெளியிடுகின்றனர் போல என அனைவரும் நினைத்தனர்.
4/5
நிச்சயதார்த்த புகைப்படங்கள்
சமீபத்தில் சாம் விஷாலும் ஸ்ரீநிஷாவும் தங்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதில், தனது உயிர் நண்பனை/தோழியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக இருவரும் பதிவிட்டுள்ளனர்.
5/5
வாழ்த்துகள் தெரிவிக்கும் ரசிகர்கள்
சாம் விஷால், ஸ்ரீநிஷாவுக்கு பலரும் திருமண நிச்சயதார்த்த வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.