SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இதெல்லாம் அடுக்குமா? மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வேலை! ஒரே நேரத்தில்..இரண்டு இடத்திலா?

சின்னத்திரை பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடைய மனைவி ஸ்ருதி ரங்கராஜுடன் இருக்கிறாரா? அல்லது இரண்டாவது மனைவியுடன் இருக்கிறாரா? எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 02, 2026, 06:44 PM IST | Updated: Nov 02, 2026, 07:59 PM IST
Join

ஒரு வருடத்திற்கு முன்னர், “ஜாய் கிரிஸில்டாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தான்தான் அப்பா என்று தெரிந்தால் கண்டிப்பாக அந்த குழந்தைக்கு ஆகும் செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறிய மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது அதே குழந்தைக்கு மொட்டையடித்து, காது குத்தி, தற்பாேது முதல் வருட பிறந்தநாளையும் கொண்டாடி இருக்கிறார். அதே சமயத்தில் அவர் தன்னுடைய முதல் மனைவியுடன் வேறு ஒரு விழாவில் கலந்து கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜாய் கிரிஸில்டா-மாதம்பட்டி ரங்கராஜ் பிரச்சனை!

பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாகவும், வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ்தான் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். காரணம், ரங்கராஜ் ஏற்கனவே திருமணம் ஆனவர். அதோடு அவருக்கு  இரு ஆண் பிள்ளைகளும் உள்ளனர். இந்த சமயத்தில்தான் அவருடன் தனக்கு திருமணம் ஆகி விட்டதாக ஜாய் கிரிஸில்டா கூறியதும், தற்போது தன்னிடம் பேச விடாமல் அவருடைய குடும்பத்தினர் தடுப்பதாகவும் பேசியது திரையுலகை பரபரப்பாக்கியது.

சில நாட்களில் இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றது. அங்கு மாதம்பட்டி ரங்கராஜ், இது தன் குழந்தைதானா என்று டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சொன்னதாகவும் அதில் இது தன் குழந்தைதான் என்று உறுதியானால் அதற்கான அத்தனை செலவுகளையும் தானே ஏற்பதாகவும் சொன்னதாக ஜாய் கிரிஸில்டா தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே ஜாய் கிரிஸில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ரஹா என்று பெயர் வைத்த பின்பு, டிஎன்ஏ டெஸ்டும் எடுக்கப்பட்டது. அதில் குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ்தான் என்பது தெரிந்தது. இதற்கிடையே இருவரும் மீண்டும் ஒன்றினைந்தனர்.

மேலும் படிக்க | ’டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷனுக்கு பெண் குழந்தை பிறந்தது! வைரலாகும் போட்டோ..

இன்னும் முதல் மனைவியுடன் இருக்கிறாரா?

மாதம்பட்டி-ஸ்ருதியின் திருமணம் 2013ஆம் ஆண்டில் முடிந்தது. இவர்களிடையே பிரிவு ஏற்பட்டதாகவும் இருவரும் ஒன்றாக இல்லை என்று தன்னிடம் கூறி தன்னை திருமணம் செய்ததாக ஜாய் கிரிஸில்டா தன்னை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் சுற்றிக்கொண்டிருந்த போது கூறியிருந்தார். ஆனால், இந்த சமயத்தில்தான் ஸ்ருதி, தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் துபாய் சென்ற புகைப்படத்தையும், குடும்ப விசேஷங்களில் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டருந்தார். இதனால், அவர் மீண்டும் தன் முதல் மனைவியுடன் சேர்ந்ததாக கூறப்பட்டது. ஜாய் கிரிஸில்டா விஷயத்தில் கோர்டில் ஆஜரான போது கூட அவர் தன் மனைவி ஸ்ருதியுடன்தான் கைக்காேர்த்து வந்திருந்தார்.

முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்..

பிரச்சனைகள் தீர்ந்ததாக ஜாய் கிரிஸில்டா தெரிவித்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தன் குழந்தை ரஹாவிற்கு மொட்டை அடித்து காது குத்தும் நிகழ்ச்சி நடத்தினர் ஜாயும், ரங்கராஜும். இது பலருக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதற்கடுத்த சில நாட்களில், ரஹாவின் முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. இதனை முன் நின்று ரங்கராஜ்தான் நடத்தி இருக்கிறார்.

சரி, ஜாயுடன்தான் சேர்ந்து வாழ்கிறார் என்று நினைத்தால் தன் முதல் மனைவியுடன் தயாரிப்பாளர் கண்ணா ரவி திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். இந்த புகைப்படத்தை சமீபத்தில் ஸ்ருதி ரங்கராஜ் தன்னுடைய இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலர், “இவர் யாருடன்தான் வாழ்கிறார்?” என்கிற கேள்வியை கேட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | ரூ. 1000 கோடியை அடிக்குமா ஜெயிலர் 2? இதுவரை அடித்த வசூல் எவ்வளவு?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES