• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /சூர்யாவை பழிவாங்கிய சிவகார்த்திகேயன்! 4 வருடம் வெயிட் பண்ணி அடிச்சிருக்காரே..

சூர்யாவை பழிவாங்கிய சிவகார்த்திகேயன்! 4 வருடம் வெயிட் பண்ணி அடிச்சிருக்காரே..

நடிகர் சிவகார்த்திகேயன், சூர்யாவை பழிவாங்கி விட்டதாக ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 11, 2026, 01:05 PM IST|Updated: Sep 11, 2026, 01:15 PM IST
joinshare
சூர்யாவை பழிவாங்கிய சிவகார்த்திகேயன்! 4 வருடம் வெயிட் பண்ணி அடிச்சிருக்காரே..
Image Credit: Suriya SK | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சமீபத்தில், சூரி நடித்த மண்டாடி திரைப்படமும், கார்த்தி நடித்த சர்தார் 2 திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, இணையத்தில் ஒரு போஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்தி-சூரி:

நடிகர் கார்த்தி, திரையுலகிற்கு வந்த போதே, ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற ஆசையோடுத்தான் வந்தார். அவர் நினைத்தது போலவே அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகளும் ஹீரோவிற்கானதாகத்தான் இருந்தன. இடையில் அவருக்கு சில படங்கள் சறுக்கினாலும், அதிலிருந்து கற்றுக்கொண்டு தன்னுடைய படங்களை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்று வருகிறார்.

ஆனால், சூரி அப்படியல்ல. அவர் தன்னுடைய பல்வேறு நேர்காணல்களில், தான் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்னாடி பட்ட சிரமங்களையும் பல நேர்காணல்களில் பேசியிருக்கிறார். லைட் மேனாக இருந்து, பின்னர் துணை நடிகராக மாறி, காமெடியன் ஆனார். அப்போதும் இவரை ரசிகர்கள் ‘காமெடி சூரி’யாக மட்டுமே பார்த்து வந்தனர். ஆனால், இப்போது சூரி, தமிழ் திரையுலகில் ஒரு பெரிய இடத்திற்கு செல்லும் ஹீரோவாக வளர்ந்து வருகிறார்.

கார்த்தியும் சூரியும் கூட சில படங்களில் ஒன்று சேர்ந்து நடித்திருக்கின்றனர். குறிப்பாக ’நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் போட்டோ எடுக்க வேண்டிய காட்சி ஒன்று வரும். அதில், சூரியை தன் அருகி நிற்க சொல்லிவிட்டு “நீ என் பக்கத்தில் நின்றால் நான் கொஞ்சம் இன்னும் கலரா தெரியுவேன்” என்று கார்த்தி சூரியை கலர் ஷேமிங் செய்திருப்பார்.

மேலும் படிக்க | சர்தார் 2 படம் எப்படி? முதல் பாகம் அளவிற்கு இருக்கா? ரசிகர்களின் X விமர்சனம்!

சர்தார் 2-வை மிஞ்சிய மண்டாடி?

சர்தார் 2 திரைப்படத்தில், நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கிறார். அதே போல, மண்டாடி படத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த இரு படங்களும் ஒரே நாளில் வெளியானதை அடுத்து, சர்தார் 2 படத்தை விட மண்டாடி படத்திற்கு நிறைய நல்ல விமர்சனங்கள் கிடைத்திருக்கிறது. இதையடுத்து பல பேர், கார்த்தி தன்னை ஒரு நாள் கலர் ஷேமிங் செய்ததற்கு இப்போது சூரி பழிவாங்கி விட்டதாக கூறி வருகின்றனர்.

சூர்யா vs சிவகார்த்திகேயன்:

சூர்யாவும் கார்த்தியும் எப்படி உடன் பிறந்த அண்ணன் தம்பிகளோ, அதே போல சிவகார்த்திகேயனும் சூரியும் உடன்பிறவா அண்ணன் தம்பிகளாக இருக்கின்றனர். கார்த்தி படங்கள் நடிக்கும் போது  2022ஆம் ஆண்டில், சூர்யா அவருக்காக சில பதிவுகளை போடுவார், கார்த்தியும் அதையே செய்வார். அதே போல, சிவகார்த்திகேயன் படங்கள் வெளியாகும் போது சூரி பதிவிடுவார், சூரி படங்களுக்கு சிவகார்த்திகேயன் பதிவுகளை வெளியிடுவார்.

Suriya wished Sivakarthikeyan for #Prince.
Now SK has wished Karthi for #Sardar2 👀

But fans have noticed an interesting pattern…

2022: Suriya congratulated Karthi on #Sardar.
2026: SK congratulates his friend Soori on #Mandadi.

And this time, he also mentioned: “Good content… pic.twitter.com/5WGxIk5FQJ

— Pan India Review (@PanIndiaReview) September 11, 2026

அந்த வகையில், 2022ஆம் ஆண்டு கார்த்தியின் சர்தார் படமும், சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் படமும் ஒரே நாளில் வெளியானது. அப்போது சூர்யா, “ப்ரின்ஸ்” படக்குழுவிற்கு வாழ்த்துகள் என பதிவிட்டிருந்தார். அப்போது ப்ரின்ஸ் படம் விமர்சனம்-வசூல் என இரண்டிலும் தோல்வியுற்றது. அதே போல, இப்போது சர்தார் 2 படமும் மண்டாடி படமும் வெளியாகியுள்ளது. இந்த நாளில், சிவகார்த்திகேயனும் அப்போது சூர்யா பதிவிட்டது போல வாழ்த்து பதிவை வெளியிட்டார். கடைசியில் சர்தார் 2 படமும், அப்போது வெளியான ப்ரின்ஸ் படம் போல், சுமாரான விமர்சனங்களை பெற்று வருவதால் அவர் இதை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | சர்தார் 2 Vs மண்டாடி: இரண்டில் எந்த படம் நல்லாயிருக்கு? எந்த படத்திற்கு வசூல் அதிகம்?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema