• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /சர்தார் 2 Vs மண்டாடி: இரண்டில் எந்த படம் நல்லாயிருக்கு? எந்த படத்திற்கு வசூல் அதிகம்?

சர்தார் 2 Vs மண்டாடி: இரண்டில் எந்த படம் நல்லாயிருக்கு? எந்த படத்திற்கு வசூல் அதிகம்?

கார்த்தி நடிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான படம், சர்தார் 2. அதே போல, கூடவே ரிலீஸான இன்னொரு திரைப்படம் மண்டாடி. இதில் சூரி நடித்திருந்தார். இந்த இரண்டில் எந்த படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளது தெரியுமா?

Written ByYuvashree M
Published: Sep 11, 2026, 11:48 AM IST|Updated: Sep 11, 2026, 11:55 AM IST
joinshare
சர்தார் 2 Vs மண்டாடி: இரண்டில் எந்த படம் நல்லாயிருக்கு? எந்த படத்திற்கு வசூல் அதிகம்?
Image Credit: Sardar 2 vs Mandaadi | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி, சர்தார் 2, மண்டாடி உள்ளிட்ட சில முக்கிய திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றனர். இதில், கார்த்தி ஹீரோவாக நடித்த சர்தார் 2 அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாகும். காரணம், இந்த படத்தின் முதல் பாகம் அதிக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அதன் மீதான எதிர்பார்ப்பும் பெரிதாக இருந்தது. அதே போல, சூரி ஹீரோவாக நடித்திருக்கும் மண்டாடி படத்தின் ட்ரெயிலரும் பயங்கர ஹைப் கொடுத்ததை அடுத்து, இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் எகிறியது.

சர்தார் 2:

சர்தார் 2 படத்தை பொறுத்தவரை, கதைப்படி RAW ஏஜென்ட் விஜய பிரகாஷ் (கார்த்தி) 'வால்ரஸ்'எனும் ஏஜென்ட்டை தேடிப் போகிறார். ஆனால் அந்த ஏஜென்ட் உயிரிழக்கும் முன்பு ஒரு கத்தி வடிவ சாவியை கார்த்தியிடம் கொடுக்கிறார்.

இந்த சாவிக்கு பின்னால் இருக்கும் ரகசியத்த தேடும்போதுதான், 'Bio Apocalypse' உருவாக்கக் கூடிய 3 சாவிகளில் இது ஒன்று என்று தெரிய வருகிறது. இந்த சாவிய வைத்து பாதி உலகை அழிக்க வில்லன் எஸ்.ஜே. சூர்யா பிளான் போடுகிறார்.

இந்த பேரழிவுக்கு பின்னால 1981-ல நடந்த ஒரு பெரிய பிளாஷ்பேக்கும், கார்த்தியின் தந்தை 'சர்தார்' செய்த மிகப்பெரிய தியாகமும் இருக்கிறது. அந்த 'Bio Weapon' ஆபத்தில் இருந்து கார்த்தியும் சர்தாரும் சேர்ந்து நாட்டை காப்பாற்றுகிறார்களா இல்லையா என்பது 'சர்தார் 2' கதைகளம்!

மண்டாடி:

மண்டாடி படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் கதையை பொறுத்தவரை, சூரி சென்னையில் ஒரு தீம் பார்க்கில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார். இவருடைய சொந்த ஊரான ராமநாதபுரத்தில் படகு போட்டி சண்டையால் நடிகர் சுஹாஸ் மகனை, மாரி எனும் ஆள் கொல்ல பார்க்கிறார். உயிருக்கு பயந்து மாரி சூரியுடன் தஞ்சம் அடைகிறார்.
மாரி, தன் முன்னாள் காதலியின் பையன் என தெரிந்ததும், சூரி ஊருக்கு போயி பஞ்சாயத்து பேசுகிறார். அப்போது சாட்டைபுலி ஒரு சவால் விடுகிறார். 'நம்ம ரெண்டு குடும்பமும் படகு போட்டியில மோதுவோம்... தோத்தவங்க இனிமே போட்டியிலயே இறங்கக் கூடாது!'
இந்த சவாலில் சூரி, மாரியை ஜெயிக்க வைக்கிறாரா? சூரிக்கும் சாட்டைபுலிக்கும் என்ன பழைய பகை? இதுதான் 'மண்டாடி' படத்தின் மீதி கதை.

மேலும் படிக்க | சூரியின் ‘மண்டாடி’ திரைப்படம் எப்படி-கண்டிப்பா பார்க்கணும்! X Review

இரண்டில் எது பெஸ்ட்? ஆடியன்ஸ் சொல்வது..

மண்டாடி-சர்தார் 2 என இரு படங்களை பார்க்கும் போது, இவை இரண்டிற்குமே ஓரளவிற்கு நல்ல விமர்சனம்தான் வந்திருக்கிறது. இரண்டு படங்களிலும் சில பிரச்சனைகள் இருந்தாலும் இரண்டுமே Decent Watchதான் என்று கூறி வருகின்றனர்.

#Sardar2 = Blockbuster 💥💥💥💥💥
#Mandaadi = Blockbuster 💥💥💥💥

Humble request 🙏: don't spread -ve review as all technicans put their hardwork 

.Don't destroy ❌ their hardwork of the technicians in the name of "review "
🙏🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/Qt3qHcGRXC

— SarvamMaya (@SarvamMaya23) September 11, 2026

வசூலில் யார் கெத்து?

சர்தார் 2 திரைப்படம், உலகளவில் ரூ.6.80 கோடி வரை வசூலித்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.4.50 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படம், தமிழ் மற்றும் தெலுங்கு திரை ரசிகர்களால் இந்த வசூலை எட்டியிருக்கிறது.

சூரியின் மண்டாடி திரைப்படம், உலகளவில் சுஅமர் ரூ.6.55 கோடி வரை முதல் நாளில் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதில், இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 4 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

இனி வரும் தினங்களும் விடுமுறை தினம்தான் என்பதால், இந்த நிலை இன்னும் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | சர்தார் 2 படம் எப்படி? முதல் பாகம் அளவிற்கு இருக்கா? ரசிகர்களின் X விமர்சனம்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema