Ex மனைவியை..வேறு ஒருவருக்கு மனம் முடித்து வைத்த ‘ஸ்பைடர் மேன்’ ஹீரோ! நெட்டிசன்கள் ஷாக்..
ஸ்பைடர் மேன் ஹீரோ Tobey Maguire, தன்னுடைய முன்னாள் மனைவியை அவர் காதலித்த நபருக்கே திருமணம் செய்து வைத்திருக்கும் தகவல் இணையத்தில் வட்டமடிக்க தாெடங்கி இருக்கிறது. இது குறித்த முழு தகவல், இதோ.
பெரியவர் முதல், சிறியவர் வரை ‘ஸ்பைடர்-மேன்’ என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வரும் ஒரே முகம், Tobey Maguireயுடையதுதான். இவர்தான், தன்னுடைய முன்னாள் மனைவியை அவருடைய காதலருக்கே திருமணம் செய்து வைத்து தற்போது செய்தியில் இடம் பிடித்திருக்கிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
ஸ்பைடர் மேன் ஹீரோ Tobey Maguire:
2000ஆம் ஆண்டுகளில் வெளியான ஸ்பைடர் மேன் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தவர்தான், Tobey Maguire. இவர், ஸ்பைடர் மேன் ஆக இதுவரை 4 படங்களில் நடித்திருக்கிறார். நடிகராகவே இருந்தாலும், பெரும்பாலான சமயங்களில் கேமராவை தவிர்ப்பதையே தன் குறிக்கோளாக வைத்திருக்கிறார் டோபி. அவரை பொறுத்தவரை, தன் பர்சனல் வாழ்க்கை, திரை வெளிச்சத்திற்கு வந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அதை மீறி யாரேனும் போட்டோ அல்லது வீடியோவை அவருடைய அனுமதியின்றி எடுத்தால், கோபப்படவும் அஞ்ச மாட்டார். அப்படி இருக்கும் நபர் குறித்துதான் இன்று உலகமே பேசி வருகிறது.
முன்னாள் மனைவியின் திருமணம்:
டோபிக்கு தற்போது 51 வயது ஆகிறது. இவருக்கும், ஜெனிஃபர் மேயர் என்பவருக்கும் 2007ஆம் ஆண்டில் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. இவர்களுக்கு ரூபி, ஓடிஸ் எனும் இரு பிள்ளைகளும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும், கடந்த 2016ஆம் ஆண்டே திருமண வழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். டோபியின் முன்னாள் மனைவி ஜெனிஃபர், 2020ஆம் ஆண்டில் திருமண விவாகரத்திற்காக விண்ணப்பித்தார். இவர்களுடைய சட்டப்போராட்டத்தில், இறுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதிதான் இவர்களுக்கு விவாகரத்தே ஆனது. அன்று முதல் இருவரும் சட்டப்பூர்வமாக கணவன் - மனைவி இல்லை என்று உத்தரவிடப்பட்டது.
விவாகரத்து முடிந்த சில நாட்களிலேயே, ஜெனிஃபர் தன்னுடைய காதலரான Geoffrey Ogunlesi என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். Geoffrey Ogunlesi, உலக பணக்கார பில்லியனர்களில் ஒருவராக இருக்கிறார். இவர்களின் திருமணம் ஹவாயில் உள்ள ஒரு பிரம்மாண்ட ரெசார்ட்டில் நடைப்பெற்றிருக்கிறது.
இதில், பலரை ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம் இருக்கிறது. நடிகர் டோபி, தன்னுடைய முன்னாள் மனைவியின் திருமணத்தை முன்நின்று நடத்தி வைத்தார். இந்த திருமணத்தில் லியானார்டோ டி காப்ரியோ, ஜெஃப் பேசோஸ், கர்ட்னி காக்ஸ், ரேச்சல் சோ உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் மற்றும் உலக பணக்காரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் 2024ல் நிச்சயம் செய்து கொண்டனர். இதையடுத்து, இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் சமீபத்தில் பிறந்துள்ளது. இந்த சமயத்தில்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் எனும் செய்தியும், அதை ஸ்பைடர் மேனே நடத்தினார் எனும் தகவலும் வெளியாகி இருக்கிறது.
பிரிந்தது ஏன்?
டோபியும் ஜெனிஃபரும் 2003ஆம் ஆண்டு Seabiscuit எனும் திரைப்படத்தில் நடித்த போது சந்தித்தனர். 3 வருடத்திற்கு பிறகு 2006ஆம் ஆண்டு நிச்சயம் செய்து கொண்டனர். 9 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு 2016ஆம் ஆண்டில் திருமண வாழ்க்கையில் இருந்து விலகினர். இவர்கள் இருவரும் பிரிந்ததற்கு வெவ்வேறு வாழ்க்கை தேடல்கள் காரணம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக எந்த காரணமும் சொல்லப்படவில்லை.