• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /மீண்டும் காயத்தில் சிக்கிய CSK வீரர்... 3-4 வாரங்கள் விளையாட முடியாது - என்னாச்சு?

மீண்டும் காயத்தில் சிக்கிய CSK வீரர்... 3-4 வாரங்கள் விளையாட முடியாது - என்னாச்சு?

சாய் சுதர்சனை தொடர்ந்து, இளம் நட்சத்திர பேட்டர் ஆயுஷ் மாத்ரே ரஞ்சி கோப்பை தொடரில் காயத்தில் சிக்கியிருக்கிறார். சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக விளையாடும் அவர் கடந்த இரண்டு நாளாக களம் இறங்கவே இல்லை.

Written BySudharsan G
Published: Oct 13, 2026, 04:55 PM IST|Updated: Oct 13, 2026, 05:07 PM IST
joinshare
மீண்டும் காயத்தில் சிக்கிய CSK வீரர்... 3-4 வாரங்கள் விளையாட முடியாது - என்னாச்சு?
Image Credit: Ayush Mhatre Chennai Super Kings | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு: கை நிறைய சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி?

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு: கை நிறைய சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி?

2

மின்சார கொள்முதல் சர்ச்சை: நீக்கப்பட்ட ஒரு பதிவு... தமிழக அரசியலில் வெடித்த புதிய விவாதம்

3

மீண்டும் காயத்தில் சிக்கிய CSK வீரர்... 3-4 வாரங்கள் விளையாட முடியாது - என்னாச்சு?

4

புதுச்சேரி குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.700 தீபாவளி பரிசுத் தொகுப்பு அறிவிப்பு

5

EPF ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்: எந்தெந்த ஊழியர்களுக்கு EPS ஓய்வூதியப் பாதுகாப்பு கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Ayush Mhatre Injury: ரஞ்சி கோப்பை 2026 சீசன் தொடங்கிவிட்டது. Plate மற்றும் Elite பிரிவில் 18 இடங்களில் முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பிரதான Elite பிரிவில் 32 அணிகள் மோதி வருகின்றன.

42 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி இந்த முறை சித்தேஷ் லாட் தலைமையில் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுகிறது. துணை கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டார்.

மேலும் படிக்க | 2027 சீசனில் தோனி விளையாடுவாரா? சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் சொல்ல பதில்

ஆட்ட நாயகன் துஷார் தேஷ்பாண்டே

மும்பை அணி முதல் போட்டியில் சண்டிகர் அணியை எதிர்கொண்டது. முதல் இன்னிங்ஸில் 429 ரன்களை மும்பை அணி அடித்தது. கேப்டன் சித்தேஷ் லாட் அதிகபட்சமாக 86 ரன்களை அடித்திருந்தார். அதேபோல், சண்டிகர் அணி 78 & 196 ரன்களை மட்டுமே இரண்டு இன்னிங்ஸிலும் அடித்தது.

இதனால், மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 155 ரன்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியில் வெற்றிபெற்றது. பேட்டிங்கில் 44 ரன்களை அடித்தது மட்டுமின்றி பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளை எடுத்த துஷார் தேஷ்பாண்டே ஆட்ட நாயகன் விருதை வென்றார். மூன்றாவது நாளான இன்றே ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆயுஷ் மாத்ரேவுக்கு காயம்

இந்தச் சூழலில், மும்பை அணியின் துணை கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் பேட்டருமான ஆயுஷ் மாத்ரேவுக்கு தொடை எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இப்போட்டியில் அவர் முதல் நாளுக்கு பின்னர் களத்திற்கே வரவில்லை. அவர் பேட்டிங்கில் 48 ரன்களை எடுத்திருந்தார்.

ஆயுஷ் மாத்ரேவுக்கு நேற்று (அக். 12) ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முன்னெச்சரிக்கை காரணமாக ஆயுஷ் மாத்ரேவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதில் சுவேத் பார்கர் மாற்று வீரராக களமிறக்கப்பட்டார்.

🚨 CSK'S PLAYER AYUSH MHATRE INJURED 🚨 - Ayush Mhatre is likely to be ruled out from cricket for 4-6 weeks due to a right hamstring injury. https://t.co/ZQOIA3H1QN

— Cricket Central (@CricketCentrl) October 13, 2026

மேலும் படிக்க | கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் விலகல்? CSK-வின் அடுத்த தலைமை யார்...?

4-6 வாரங்களுக்கு விளையாட இயலாது

ஆயுஷ் மாத்ரேவின் வலது தொடை பின்பகுதியில் Grade 4 வகையில் கிழிவு ஏற்பட்டது. இதனால், ஆயுஷ் மாத்ரே குறைந்தது 4-6 வாரங்களுக்கு விளையாட மாட்டார் என தெரியவந்துள்ளது. இதன்மூலம் அவர் ரஞ்சி கோப்பை தொடரின் முதல் கட்ட போட்டிகள் முழுவதையும் தவறவிட வாய்ப்புள்ளது.

சிஎஸ்கேவில் ஆயுஷ் மாத்ரே

கடந்த 2026 ஐபிஎல் சீசனிலேயே ஆயுஷ் மாத்ரே தொடை எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அத்தொடரில் இருந்து பாதியில் விலகினார். அவர் பிசிசிஐ சிறப்பு மையத்தில் தொடர்ந்து பயிற்சியில் இருந்து வந்தார். ஆயுஷ் மாத்ரேவை 2025 சீசனில் காயத்தால் விலகிய ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக சிஎஸ்கே அணி ரூ.30 லட்சத்திற்கு எடுத்தது. தொடர்ந்து 2026 சீசனுக்கும் அவரை தக்கவைத்தது.

சிறப்பாக தயாராகி வந்த ஆயுஷ் மாத்ரே

ரஞ்சி கோப்பைக்கு முன், மும்பை அணி கர்நாடாகவிலும், புதுச்சேரியிலும் விளையாடிய தொடரில் ஆயுஷ் மாத்ரே விளையாடவில்லை. கங்கா லீக் 2026 தொடரில் விளையாடினார். அதில் இருந்து ரஞ்சி கோப்பை தொடருக்கே விளையாட வந்தார்.

ரஞ்சி கோப்பை தொடருக்கு முன், செய்தியாளர்களை சந்தித்த அவர், அவருக்கு வழங்கப்பட்ட துணை கேப்டன் பொறுப்பு குறித்தும், காயத்தில் இருந்து மீண்டு வந்தது குறித்தும் பேசியிருந்தார். அதில் அவர், "நான் பிசிசிஐ சிறப்பு மையத்தில் மூன்று மாதக் காலம் இருந்தேன். எனவே, பயிற்சி  சிறப்பாகவே அமைந்தது" என்றார்.

மேலும், CCI, BLC மைதானங்களில் நடந்த சில பயிற்சி ஆட்டங்களில் தான் விளையாடியதாகவும், மைதானத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு நல்ல உணர்வை தந்தது என தெரிவித்தார். ரஞ்சி கோப்பை தொடருக்கு முழுமையாக தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

முதல் தர கிரிக்கெட்டில் ஆயுஷ் மாத்ரே

முதல் தர போட்டிகளில் ஆயுஷ் மாத்ரே 13 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 2 சதம், 2 அரைசதம் உள்பட 660 ரன்களை அடித்துள்ளார். ஆயுஷ் மாத்ரே அடுத்த போட்டியில் மீண்டும் களம் காண்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். வரும் அக். 18ஆம் தேதி ஹிமாச்சல் பிரதேசம் அணியை மும்பை அணி பிலாஸ்பூர் நகரில் விளையாட இருக்கிறது.

மேலும் படிக்க | Explainer: சிஎஸ்கேவை மீண்டும் சாம்பியனாக்க ஜாகீர் கான் செய்ய வேண்டிய 3 முக்கிய மாற்றங்கள்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Cricket Team