SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஆடம்பர வீட்டை அவசரமாக விற்கும் அனுஷ்கா! காரணம் என்ன? விரைவில் திருமணமா..?

தென்னிந்திய திரையுலகில், முக்கிய நடிகையாக இருக்கும் நடிகை அனுஷ்கா, தன் வீட்டை விற்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 25, 2026, 12:33 IST | Updated: Nov 25, 2026, 12:43 IST
Image Credit: Anushka Shetty Jubliee Hills House Sale | Source : X Page
Join

தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முக்கிய நடிகையாக இருந்தவர், அனுஷ்கா. தன்னுடைய 20 வயதுகளில் பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர், தற்போது தன் வீட்டை விற்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

டாப் ஹிரோயினின் தற்போதைய நிலை..?

நடிகை அனுஷ்கா, தன் இளமை காலத்தில் தமிழில் நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த், மாதவன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்திருக்கிறார். தெலுங்கிலும் நாகார்ஜுனா, ரவி தேஜா, சிரஞ்சீவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனால், கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

கிளாம் ரோலாக இருந்தாலும், ஹோம்லி கேர்ள் ரோலாக இருந்தாலும் அனைத்தையும் கச்சிதமாக செய்து அசத்திய அவர், பாகுபலி படத்திற்கு பிறகு புதிய உச்சத்தை தொடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நினைத்தது எதுவும் நடக்கவில்லை.

இஞ்சி இடுப்பழகி படத்திற்கு பின் பிரேக்..!

நடிகை அனுஷ்கா, ஒரு ஹீரோயினாக ஜொலித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதே சமயத்தில், தன்னுடைய தனித்துவத்தையும் காட்ட விரும்பினார். பிரகாஷ் கோவெலமுடி இயக்கத்தில், 2015ஆம் ஆண்டு உருவான திரைப்படம்தான், ‘சைஸ் ஜீரோ’ இதனை தமிழில் ‘இஞ்சி இடுப்பழகி’ என அழைத்தனர். இந்த படம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவானது.

மேலும் படிக்க | திடீரென வைரலாகும் முத்தையா முரளிதரன் மனைவி! 46 வயதில் இப்படியா? வைரல் போட்டோஸ்..

உடல் பருமனுடன் இருக்கும்  ஒரு பெண், தன் வாழ்வில் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறாள் என்பதையும், தன்னை சுற்றி இருப்பவர்கள் என்ன கூறினாலும், தன் மன உறுதியால் அவர்களை எதிர்த்து போராடுவதையும் இப்படம் கதைக்களமாக கொண்டிருந்தது. இதில், அனுஷ்காவிற்கு ஜோடியாக ஆர்யா நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் வந்தனர்.

சைஸ் ஜீரோ படத்திற்காக, நடிகை அனுஷ்கா உடல் எடை கூடினார். ஆனால், தான் நினைத்தது போல, அந்த படத்திற்கு பின்னர் அவரால் ஒல்லி ஆக முடியவில்லை. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், அவருடைய பழைய உடம்பை அவரால் திரும்ப பெற முடியவில்லை. இதனால், அவருக்கு வரவேண்டிய பட வாய்ப்புகள் தள்ளிப்போனது. பாகுபலி 1 மற்றும் 2ல் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தாலும், அதில் அவருக்கு முதிர்ச்சியான தோற்றம் கொண்ட கதாப்பாத்திரம்தான் பெரும்பாலும் கொடுக்கப்பட்டிருந்தது. முதலில் வருடத்திற்கு 3 படங்களில் நடித்து வந்த இவர், தற்போது 3 வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வருகிறார்.

வீட்டை விற்கப்போகிறாரா..?

அனுஷ்காவிற்கு, ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்று இருக்கிறதாம். அந்த வீட்டை விற்கும் முடிவிற்கு அவர் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

அவர், தன் கஷ்டத்தால் அந்த வீட்டை விற்கிறாரா..? எனும் கேள்வி எழ, அதற்கு பதிலாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது, ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் வீட்டை விற்று விட்டு, வேறு ஒரு பகுதியில் அனுஷ்கா வீடு வாங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில், திருமணம் செய்து கொண்டு அவர் வெளிநாட்டில் குடியேறப்போவதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் அவர் அவசர அவசரமாக வீட்டை விற்க ஏற்பாடு செய்வதாகவும் நெட்டிசன்கள் சந்தேகிக்கின்றனர்.

திருமணம் எப்போ..?

அனுஷ்காவிற்கு தற்போது 45 வயது ஆகிறது. இவரும், பிரபலமான தெலுங்கு நடிகர் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதல் உறவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், இருவரும் அது பற்றி வெளியில் பேசாமல் இருப்பதோடு, திருமணமும் செய்து கொள்ளமல் இருக்கின்றனர். திருமணம் பற்றி கேள்வி கேட்கப்பட்டாலும் சிரித்தபடி அதை அப்படியே கடந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரஜினி பிறந்தநாளில் வெளியாகும் சூப்பர் ஹிட் திரைப்படம்..! எது தெரியுமா..?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES