SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

உதயநிதியை பார்த்ததும் கடுப்பான தேவயானி..? ”தள்ளுங்க..” கூட்டத்தை முறைத்து வெளியேறிய வீடியோ..

சமீபத்தில், தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினரூமான பிரமலதா விஜயகாந்தின் சகோதரர், எல்.கே.சுதீஷின் மகளுக்கு திருமணம் நடந்தது. இதில் நடந்த விஷயம் ஒன்று இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Written By Yuvashree M
Published: Nov 22, 2026, 12:46 IST | Updated: Nov 22, 2026, 13:13 IST
Image Credit: தேவயானி | X Page
Join

ஊரே பரபரப்பாக அனிருத்-காவ்யா திருமணம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில், இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ந்த அதே நாளில், கேப்டன் இல்லத்திருமணமும் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகை தேவயானிக்கு மரியாதைக்குறைவு நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

கேப்டன் வீட்டு திருமணம்!

மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மனைவியி பிரேமலதாவின், சகோதரர்தான் எல்.கே.சுதீஷ். இவருக்கும், இவர் மனைவி பூர்ண ஜோதி சுதீஷுக்கும் மூத்த மகள் ஜானு ஸ்ரீக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ் ஓசூரை சேர்ந்த தொழிலதிபர் துட்டுகுறி ரவிகுமார்-ராதா ரவிகுமார் தம்பதியின் மகன் அகில் ரவிகுமாருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்தது.

சென்னை நீலாங்கரையில் இருக்கும், ஆர்.கே.கன்வென்ஷன் செண்டரில், சனிக்கிழமையன்று வரவேற்பு நடந்தது. இதையடுத்து திருமண முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை நடந்தது. நேற்றைய திருமண வரவேற்பில், முதல்வர் விஜய் அனிருத்-காவ்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இதில் கலந்து கொண்டார். முதல்வர் உள்பட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவம் குறித்த தகவல்தான் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | தொட்டு பேசிய மிஷ்கின்..Uncomfortable ஆன கீர்த்தி சுரேஷ்? அவரே கொடுத்த பதில்..!

கோபமான தேவயானி!

தேவயானி, நேற்றைய திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர் மட்டும் தனியாக வரவில்லை, அவருடன் அவருடைய இரு மகள்களான பிரியங்கா மற்றும் இனியா இருவரும் கலந்து கொண்டனர். இவர்கள் உள்பட, பல்வேறு விஐபிக்கள் இதில் கலந்து கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஆனதோடு, திருமண வரவேற்பு நடைப்பெற்ற இடத்திலும் கூட்ட நெரிசல் அலைமோதியது.

தேவயானி, பல ஆண்கள் மத்தியில் கூட்ட நெரிசலில் தன் மகள்கள் இருவருடன் சிக்கிக்கொண்டார். மணமக்களை சந்தித்து, வாழ்த்து தெரிவித்துவிட்டு கீழே இறங்கிய தேவயானியை, கூட்டம் மொத்தமாக சூழ்ந்து கொண்டதால் அவர் அங்கிருந்து வெளியேற முடியாமல் போனதாக கூறப்படுகிறது. 

தேவயானி விலகி செல்ல முயன்ற போது, உதயநிதி மேடையை நோக்கி வந்து விட்டார். அப்போது அவரை பாதுகாப்பாக அழைத்து செல்ல கூட்டம், தேவயானியையும் அவரது மகள்களையும் கூட்ட நெரிசலில் தள்ளி விட்டது. தன்னை சுற்றி இருந்தவர்களிட, விலகி செல்லுமாறு பலமுறை கூறியும், அந்த கூட்டம் கலையாமல் அப்படியே நின்றது. உதயநிதி செல்வதை பார்த்த தேவையானி, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்து, தன்னை சுற்றியிருந்த கூட்டத்தை கோபத்துடன் பார்த்து, “தள்ளுங்க..தள்ளுங்க..” என்று கோபமாக கூற்றி, கூட்டத்தினரை விலக சொல்லிவிட்டு முன்னே நகர்ந்தார். அப்போது, அவர் அருகில் இருந்த இரு மகள்களும் தேவயானியிடம் ஏதோ சொல்ல முயல, அவர் கோபத்தில் அதையும் கேட்காமல் முன்னே சென்றார். அவரைத்தொடர்ந்து, முகத்தை மூடியபடி அவருடைய இரு மகள்களும் அவர் பின்னாலேயே வேகமாக சென்றனர்.

வைரலான வீடியோ..

தேவயானி, இப்படி கோபமாக சென்ன வீடியோ இணையத்தில் வைரலானது பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதை பார்த்த பலர், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொள்ளும் இத்தகைய பெரிய நிகழ்ச்சிகளில், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டாமா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டாமா..? எனும் கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. தேவயானியோ அல்லது அவருடைய மகள்களோ, இது குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பிக்பாஸ் 10: எதிர்பாராத டபுள் எவிக்ஷன்! ரசிகர்கள் அதிர்ச்சி..யார் யார் தெரியுமா?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES