• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /பெண்கள்தான் தாலி கட்டிக்கணுமா? கணவர் என்ன செய்கிறார்? நமீதாவின் நறுக் கேள்விகள்!

பெண்கள்தான் தாலி கட்டிக்கணுமா? கணவர் என்ன செய்கிறார்? நமீதாவின் நறுக் கேள்விகள்!

முன்னாள் கவர்ச்சி நடிகையாக நடித்து வந்த நமிதா, சமீபத்தில் தாலி குறித்து பேசியிருப்பது பேசுபொருளாகி வருகிறது.

Written ByYuvashree M
Published: Sep 08, 2026, 13:33 IST|Updated: Sep 08, 2026, 13:57 IST
joinshare
பெண்கள்தான் தாலி கட்டிக்கணுமா? கணவர் என்ன செய்கிறார்? நமீதாவின் நறுக் கேள்விகள்!
Image Credit: Namitha | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களாக இருந்த சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் நடித்திருந்தவர், நமீதா. இவர் தாலி கட்டிக்கொள்வது குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.

நமீதா பேசியது:

நடிகை நமீதா, சமீபத்தில் ஒரு பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தர். அப்போது, அவர் பேசிய விஷயங்கள் தற்போது இணையத்தில் புயலை கிளப்பியிருக்கிறது. இந்த பேட்டியில், திருமணமான பெண்கள் மீது இந்த சமூகம் திணிக்கும் சம்பிரதாயங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து நமீதா பேசியிருந்தார். இதுதான் தற்போது விவாத பொருளாக மாறியிருக்கிறது.

திருமணமானதற்கு பிரகு, ஒரு பெண் மட்டுமே அனைத்து விதிகளையும் சுமக்க வேண்டியிருப்பதாகவும், திருமணமானதுமே ஒரு பெண் கண்டிப்பாக தாலி அணிந்து கொண்டிருக்க வேண்டும், நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும், சம்பிரதாயங்கள் எல்லாம் பெண்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறதா என்று சரமாரி கேள்வி கேட்டார். மேலும், ஆண்களுக்கு ஏன் இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் இல்லை? என்றும் கேட்டிருக்கிறார்.

வரலட்சுமி நோன்பு குறித்து பேசிய நமீதா, கணவனின் ஆயுளுக்காகவும், நலனுக்காகவும் மனைவி நோன்பு இருக்க வேண்டும் என்று கூறுவதாக குறிப்பிட்ட அவர், இதில் கணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது குறித்தும் பேசினார். “மனைவியாக நான் வருடத்திற்கு ஒரு நாள், கணவருக்காக விரதம் இருந்து நோன்பு இருக்கிறேன். ஆனால், கணவராக இருக்கும் அண், வருடத்தின் இன்னொரு நாள் தன் மனைவிக்காக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று விதிமுறை இந்த சமூகத்தில் இருக்கிறதா? ஏன் அப்படி ஒரு விதியை உருவாக்கவில்லை? ஏன் எல்லா விதிகளும் பெண்களை நோக்கியே எழுதப்பட்டுள்ளது?” என்று கேட்டார்.

மேலும் படிக்க | இந்த வாரம் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? உங்கள் சாய்ஸுக்கான புதிய ரிலீஸ் படங்கள்

பகவத் கீதை குறித்து பேச்சு:

தொடர்ந்து பேசிய நமீதா, பெண்க்ள்தான் தாலி அணிய வேண்டும், என புனித நூலாக கருதப்படும் பகவத் கீதையில் எழுதப்பட்டுள்ளதா? இந்த விதிமுறைகள் ஏதேனும் வேதங்கள் அல்லது புராணங்க்ளில் சொல்லப்பட்டுள்ளதா? எதுவும் கிடையாது. இந்த சமூகம்தான், பெண்களுக்கு பல கட்டுப்பாடு விதிமுறைகளை உருவாக்கி வலுக்கட்டாயமாக அவர்கள் மீது திணித்துக்கொண்டே இருக்கிறது” என பேசியிருந்தார்.

அரசியல் கொள்கை..

நடிகை நமிதா, சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார். இவர், 2016ல் ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுக கட்சியில் இணைந்தார். அதன் பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி, 2019ஆம் ஆண்டில் பாஜக கட்சியில் இணைந்தார். 2020ஆம் ஆண்டில், தமிழக பாஜக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் பாஜக கட்சியை முன்நிறுத்தி பல இடங்களில் பேசி வந்த நமீதா, இப்போது கொஞ்ச நாளாக சைலண்டாக இருக்கிறார்.

பாஜக, பார்ப்பனிய மற்றும் இந்துத்துவ கொள்கைகளை ஆதரிக்கும் ஒரு கட்சியாகவே இருக்கிறது. இதில், இந்துத்துவ கொள்கைகளை பேசுபவர்களுக்கே முன்னுரிமை என்பதும் யாருக்கும் சொல்லித்தெரிய வேண்டியது இல்லை. நமீதாவும், மிகுந்த ஆன்மீக நம்பிக்கை உடையவர். பல செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு பேசியும் இருக்கிறார். அப்படி பாஜக கட்சியின் ஆதரவாளராகவும் உறுப்பினராகவும் இருக்கும் பட்சத்தில் இவர் இப்படி வரலட்சுமி நோன்பிற்கு எதிராகவும், பெண்கள் தாலி அணிந்து கொள்வதற்கு எதிராகவும் பேசியிருப்பது அவருடைய அரசியல் நிலைபாடு குறித்த கேள்விகளை எழுப்பி இருப்பது. பெண்கள் பலர் அவருடைய கருத்துக்கு ஆதரவு தெரிவிக்க, இன்னும் சிலர் அவரை தனிப்பட்ட முறையில் அட்டாக் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | கெனிஷா-ரவி மோகன் திரும்ப சேர்ந்துட்டாங்க..! வெளியான போஸ்ட்..அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema