ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் முக்கிய நடிகைகளாக இருந்தவர்கள்தான், அம்பிகாவும் ராதாவும். இவர்கள் இருவரும் சகோதரிகள் ஆவர். தற்போது இவர்கள் குடும்பத்துக்குள் எழுந்த சொத்து பிரச்சனை பற்றி ஊரே பேசி வருகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
அம்பிகா-ராதா சகோதரிகளை தெரியாத ஆளே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்த இரண்டு ஹீரோயினகளைத்தான் 80களில் வெளியான படங்களில் லீட் நடிகைகளாக நடிக்க வைப்பார்கள். கேரளாவை சேர்ந்த இவர்கள் இருவரும் தமிழ் மட்டுமன்றி சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளனர்.
இவர்கள், பல்வேறு குடும்ப நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது, குடும்பத்தினராக ஒற்றுமையாக இருப்பதை பல்வேறு இடங்களில் பார்த்திருப்போம். ஆனால், தற்போது இவர்களுக்குள்தான் சண்டையே வந்துள்ளது. இருவரும், தற்போது ஒரு சொத்து பிரச்சனையால் காவல் நிலையம் வரை செல்ல வேண்டியதாக போயிற்று.
நடிகை ராதா, தன் பழைய காசோலைகளை திருடி, பல கோடி ரூபாயை அம்பிகா மோசடி செய்ய முயன்றதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ள விவரம், பின்வருமாறு ;
நடிகை ராதா, சென்னை போரூரில் உள்ள RR Gardens எனும் பெயரில் தொழில் நடத்தி வந்து கொண்டிருக்கிறார். இவர், தொழில் காரணங்களுக்காக வெளியூர் செல்கையில், அவசர அலுவலக தேவைகளுக்காக, சில காசோலைகளை தன் அறையில் கையெழுத்திட்டு வைத்திருக்கிறார். கடந்த 2025அம் ஆண்டு, இவரது வங்கியிலிருந்து புதிய செக் புக் வழங்கப்பட்டுள்ளது, இதனால் பழைய செக் புக் பயன்பாட்டில் இல்லாமல் போயுள்ளது.
கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியன்று, அந்த வங்கியிலிருந்து ராதாவிற்கு மின்னஞ்சல் ஒன்று வந்திருக்கிறது. அதில், பயன்பாட்டில் இல்லாத அவருடைய 5 காசோலைகள், சகோதரி அம்பிகாவின் பெயரில் பணமாக்கப்படுவதற்காக வங்கியில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி, வங்கியில் தாக்கல் செய்யப்பட்ட 5 செக்குகளின் மொத்த தொகையானது, ரூ.43.62 கோடியாக இருந்திருக்கிறது. உடனே, அவர் வங்கிக்கு தகவல் தெரிவித்ததோடு அந்த செக் பண பரிவர்த்தனைகளை நிறுத்தி வைக்க சொல்லி கூறியுள்ளார்.
வங்கியில் இது குறித்து விசாரித்த போது, அந்த பழைய காசோலைகளில், தொகையையும் பெயரையும் நிரப்பியது, ராதாவின் சகோதரரான மல்லிகார்ஜுனா குஞ்சன் என்பதை கையெழுத்தை வைத்து கண்டுபிடித்துள்ளனர். இவர் மீது ஏற்கனவே, FEMA சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் உள்ளதாம்.
வளசரவாக்கத்தில் இருக்கும் வீட்டில், க்ரவுண்ட் ஃப்ளோரில் அம்பிகா தந்தியிருந்துள்ளார். ராதா இல்லாத நேரமாக பார்த்து, அவருடைய அறைக்குள் சென்று, கையெழுத்திட்ட பழைய காசோலைகளை திருடி, அதனை சட்ட விரோதமாக பணமாக்க முயன்றதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், தன்னுடைய அறையில் வைக்கப்பட்டிருந்த, தங்க, வைர நகைகள் சொத்து மற்றும் வங்கி ஆவணங்கள், பரிசுகள் உள்ளிட்டவற்றை தான் சரிபார்க்க விடாமல் அம்பிகாவும் சகோதரர் அர்ஜுனும் தடுத்து வருவதாகவும் ராதா தன்னுடைய புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய அனுமதியின்றி சொத்ஹ்துகளை திருடி, காசோலையையும் போலியாக நிரப்பி ஏமாற்ற முயன்ற அக்கா அம்பிகா மற்றும் சகோதரர் அர்ஜுன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் சென்னை காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சொந்த உடன்பிறப்புகளுக்குள்ளேயே இப்படி ஒரு சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது, திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.