• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /5 படங்கள் எடுத்து..கோடீஸ்வரராக திகழும் அட்லீ! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?

5 படங்கள் எடுத்து..கோடீஸ்வரராக திகழும் அட்லீ! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?

தமிழ் இயக்குநர் அட்லீயின் பிறந்தநாள் இன்று, இதையடுத்து அவர் குறித்த தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 21, 2026, 11:10 IST|Updated: Sep 21, 2026, 11:16 IST
joinshare
5 படங்கள் எடுத்து..கோடீஸ்வரராக திகழும் அட்லீ! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
Image Credit: Atlee | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழில் இருக்கும் ஒரு சில இயக்குநர்கள், ஓரிரு படங்கள் இயக்கிய உடனேயே மளமளவென வளர்ந்து, எட்டமுடியாத உச்சத்திற்கு சென்று விடுகின்றனர். அப்படி, உச்சத்தை தொட்ட இயக்குநர்களுள் ஒருவர்தான், அட்லீ. உதவி இயக்குநராக இருந்த இவர், தற்போது பான் இந்திய இயக்குநராக மாறி இருக்கிறார். இவருக்கு, செப்டம்பர் 21ஆம் தேதியான இன்று பிறந்தநாள் ஆகும். இந்த நாளில் அவர் பற்றிய சில விஷயங்களை அலசி ஆராய்வோம்.

இயக்குநர் அட்லீயின் வளர்ச்சி!

ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ, ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவரை நண்பன் படத்தின் ஷூட்டிங்கின் போது சந்தித்த விஜய், “வாப்பா, நாம ஒண்ணா படம் பண்லாம்” என்று அழைக்க, முதல் படம் வெற்றி பெற்றதன் கையோடு உடனே விஜய்யை வைத்து ‘தெறி’ படத்தை எடுத்தார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மெர்சல், பிகில் என எடுத்த படம் எல்லாம் விஜய்யை வைத்துதான். இதனால்தான், எங்கு சென்றாலும் “எல்லாத்துக்கும் என் அண்ணாதான் காரணம், நான் இங்கு இருப்பதே என் அண்ணாவால்தான்” என்று விஜய்யை பாராட்டி பேசுவார்.

அட்லீக்கு அடுத்த அருமையான வாய்ப்பு வந்ததே, ‘ஜவான்’ படம் மூலமாகத்தான். ஷாருக்கானை வைத்து அந்த படத்தை இயக்கிய அவர், அதனை பான் இந்திய அளவில் ரிலீஸ் செயது ரூ.1000 கோடி வசூலிக்க செய்தார். அது மட்டுமா? அடுத்ததாக தற்போது அல்லு அர்ஜுனை வைத்து ‘ராக்கா’ எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இது கொஞ்சம் பெரிய ப்ராஜெக்ட் என்பதால் ரிலீஸாக இன்னும் 2 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

5 படங்கள் மட்டுமே இயக்கி, அந்த ஐந்தையும் ஹிட் ஆக்கி, இப்போது இந்திய அளவில் அதிகம தேடப்படும் இயக்குநர்கள் ஒருவராக மாறியுள்ள அட்லீக்கு பிரியா என்கிற காதல் மனைவியும், அவர்களின் காதலுக்கு பரிசாக இரு பிள்ளைகளும் உள்ளனர். இவர்கள் தற்போது மும்பையில் செட்டில் ஆனதாக கூறப்படுகிறது. அம்பானி வீட்டு விசேஷத்தில் இருந்து, அங்கிருக்கும் முக்கிய பிரமுகர்களின் வீட்டு விசேஷங்கள் எதற்கு அழைத்தாலும் அட்லீ கண்டிப்பாக தன் குடும்பத்துடன் சென்று வருவதையும் பார்க்க முடிகிறது.

மேலும் படிக்க | வடிவுக்கரசிக்கு என்ன ஆச்சு? உடல்நிலை குறித்து பரவிய வதந்தி..அவரே கொடுத்த விளக்கம்

சொத்து மதிப்பு!

இயக்குநர் அட்லீ, எடுத்தவுடன் இயக்குநர் ஆகிவிடவில்லை. சினிமா ஷூட்டிங்கில் பல வேலைகளை பார்த்த பின்னர்தான் இயக்குநர் ஆனார். இவர், ஷங்கரிடம் உதவி இயக்குநரக இருந்த போது, இவருக்குர் நாள் ஒன்றுக்கு ரூ.300 பேட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாதம், ரூ.10,000 வரை வந்திருக்கலாம். இயக்குநர் ஆன பின்பு அட்லீ இயக்கிய முதல் படம், ராஜா ராணி. இந்த படத்திற்கு அவர் ரூ.5-10 லட்சம் சம்பளமாக வாங்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. அவர் ஒவ்வொரு படமாக ஹிட் கொடுக்க, அவருடைய சம்பளமும் உயர்ந்து கொண்டே வந்தது. கடைசியாக ஜவான் படத்திற்காக அவர், ரூ.30-40 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கலாம் என்று தெரிகிறது. இனி வரும் படங்களில் Profit Sharing அடிப்படையில் அவர் ஊதியத்தை பெறலாம் என கூறப்படுகிறது.

அட்லீ, தற்போது மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஒரு பீச் வியூ அப்பார்ட்மண்டை வாங்கியிருக்கிறாரம். இதன் விலை ரூ.38 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதே போல அவர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்து நடத்தி வருகிறார். இதை வைத்துதான், அந்தாகாரம், பேபி ஜான் உள்ளிட்ட படங்களை தயாரித்தார். இதுமட்டுமன்றி, அட்லீ சில தொழில்களையும் மேற்கொண்டு வருகிறார். இதனை அவருடைய மனைவி பிரியா பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஆளே மாறிப்போன லட்சுமி மேனன்! ரொம்ப வித்தியாசமா இருக்காங்களே-போட்டோஸ்

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema