சமீபத்தில், பாலிவுட்டின் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சியாக கருதப்படும் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சி நடந்தது. இதில், ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் கலந்து கொண்டனர். அப்போது, இந்நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா பேசிய சில விஷயங்கள் இணையத்தில் விவாதத்தை கிளப்பியது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் புதுமண தம்பதிகளான விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் கலந்து கொண்டு தங்களின் திருமணம் குறித்து பேசினர். அப்போது ராஷ்மிகா, தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி விஜய்யிடம் ஒரு வருடம் முழுவதும் கேட்டதாகவும், அதன் பிறகுதான் அவர் சம்மதித்து திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதற்கு காரணமாக விஜய் தேவரகொண்டா, தங்களின் காதல் வாழ்வின் அனைத்து சூழலையும் தாங்குகிறதா, அனைத்து சண்டைகளையும் எதிர்கொள்கிறதா, என்பதை சோதிக்கவே இத்தனை நாட்கள் காத்திருந்து திருமணம் செய்ததாக கூறினார். இவர்கள் என்னதான் கூறினாலும், இவர்கள் பேசிய க்ளிப்பிங் வைரலாகி மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
ராஷ்மிகா, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில், பல பேர், தான் எத்தனை முறை திருமணம் செய்து கொள்ள சொல்லி கேட்டேன் என்பதை வைத்து விவாதித்து வருவதாகவும், அதை பற்றி தெளிவுப்படுத்த விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.
இருவருக்குமே இருவரையும் நன்கு புரிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் நேரமும் காலமும் தேவைப்பட்டதால் திருமணத்திற்கான தகுந்த நேரம் வரும் வரை காத்திருந்ததாகவும், கடைசியில் நாங்கள் எங்கள் இருவரையும் தேந்தெடுத்தோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, “எனக்கு என்ன வேண்டுமென்பது எனக்கு தெரியும், அதே போல, அவருக்கும் என்ன வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க காலம் தேவைப்பட்டது. இதனால் எங்கள் காதலுக்கு எந்த களங்கமும் வரவில்லை.
எங்களை பொருத்தவரை, திருமணம் என்பது ப்ரப்போசலை பற்றியது மட்டும் இல்லை. அது ஒரு வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் இருவரும் சேர்ந்து கட்டமைப்பது. அதை நாங்கள் அழகாக செய்து வருகிறோம்.
எனக்கு என் கணவரை ரொம்ப பிடிக்கு, அது என்ன தவறான விஷயமா? எனக்கு பிடித்த ஒருவரை எனக்கு பிடிக்கவில்லை என்றால் அவரை திருமணம் செய்து என்ன பலன்? அவர்தான் என் வாழ்வை என்னுடன் வாழப்போகிறவர். என்னுடைய எல்லா நாட்களும் அவருடன்தான், என் குழந்தைகளின் தந்தையாக அவர்தான் இருக்கப்போகிறார்.
நாங்கள் இருவரும் எங்களுக்கு பிடித்தது போல எங்கள் வாழ்க்கையை கட்டமைத்துள்ளோம். நாங்கள் அறிவுள்ளவர்கள், நாங்கள் வயது வந்தவர்கள், எங்களுக்கு வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க எங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் சுதந்திரம் இருக்கிறது. நாங்கள் எங்களை தேர்ந்தெடுத்தோம், இனிமேலும் அப்படியெ செய்வோம்.
எனக்கு கால் உடைந்த போதும், மாதா மாதம் எனக்கு வயிறு வலி வரும் போதும், நீங்கள் யாரும் என்னுடன் இல்லை. விஜய்தான் என்னுடன் இருக்கிறார், இருப்பார்.
அவர் என் வெற்றிகள் அனைத்தையும் கொண்டாடுவார், என்னை பார்த்துக்கொள்வார், இந்த காதல்தான் எனக்கு வேண்டும், இதுதான் எனக்கு கிடைத்துள்ளது. அதனால் என்னையும் அவரையும் பற்றி கவலைப்படாதீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
ராஷ்மிகாவின் பதிவை தொடர்ந்து, அவருடைய கணவரும் நடிகருமான விஜய் தேவரகொண்டாவும் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
அதில், என் மனைவிதான், என்னுடைய நெருங்கிய தோழி. கவலைப்படும் அனைவருக்கும் ஒன்று சொல்கிறேன், நாங்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறோம். உலகத்திற்கு எதிராக நாங்கள் இருவரும்தான் இருக்கிறோம் என்றால், அப்படியே இருந்து கொள்கிறோம்” என தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.