வடிவுக்கரசிக்கு என்ன ஆச்சு? உடல்நிலை குறித்து பரவிய வதந்தி..அவரே கொடுத்த விளக்கம்
தமிழ் திரையுலகின் கலையுலக அரசிகளில் ஒருவராக திகழ்பவர், வடிவுக்கரசி. இவருடைய உடல்நிலை குறித்து சமீபத்தில் பல்வேறு வதந்திகள் பரவியதை அடுத்து அவரே ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
68 வயதாகும் நடிகை வடிவுக்கரசி, தற்போது தன் உடல் நிலை குறித்து விளக்கம் தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இவர் குறித்த வீண் வதந்திகளை பரப்பியது யார்? இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
வடிவுக்கரசியின் திரை வாழ்க்கை:
நடிகை வடிவுக்கரசி, 80களில் தமிழ் திரையுலகில் கோலோச்சிய நடிகைகளுள் ஒருவர். இவரை பொருத்தவரையில், ஹீரோயின் வாய்ப்பு மட்டுமே நடிப்பார் என்கிற கட்டாயம் இல்லை. வயதான ஒருவருக்கு மனைவியாக வேடமிட சொன்னாலும், ஊர் கிழவியாக நடிக்க சொன்னாலும், வில்லியாக நடிக்க சொன்னாலும் அசராமல் அந்த கேரக்டருக்கு தகுந்தார் போல 5 நிமிடத்தில் ரெடியாகி விடுவார். பெயருக்கு ஏற்றார் போல, அவர் கலைத்திறனும் அத்தனை அருமையானது என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா தொடங்கி, பல இயக்குநர்கள் பாராட்டி இருக்கின்றனர்.
வடிவுக்கரசி கமல் நடித்த சிகப்பு ரோஜாக்கள் திரைப்படம் மூலமாகத்தான் அறிமுகமானார். அந்த சமயத்தில் அவர் ஒரு ஆசிரியராக பணியில் இருந்தார். அப்போதுதான் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வடிவுக்கரசியின் முகத்தை பலர் மனதில் பதிய வைத்தது, முதல் மரியாதை திரைப்படம்தான். அந்த படத்தில் அவர் தன் கணவரான சிவாஜி கணேசனை வசை பாடி, மக்கள் மனங்களில் நிரந்தர வில்லியாக நின்றார். அவர் கதாப்பாத்திரம் பலருக்கு பிடிக்காமல் போனதற்கு காரணமே அவருடைய திறமையான நடிப்புதான்.
அது மட்டும் கிடையாது, ரஜினியின் அருணாச்சலம் படத்தில் அவர் நடித்திருந்த கதாப்பாத்திரத்தை வேறு யாராலும் சரிவர செய்திருக்க முடியாது.
வாய்ப்பு கிடைக்கவில்லை என்று புலம்பல்..
நடிகை வடிவுக்கரசி ஒரு கட்டம் வரை சினிமாவில் முக்கிய கதாப்பாத்திரங்களின் நடித்து வந்தார். பிறகு சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். கார்த்திகை தீபம், சுந்தரி, திருமதி செல்வம் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்திருர்க்கிறார். சமீப காலமாக சில திரைப்படங்களிலும் தலைகாட்டி வருகின்றார்.
சமீப காலமாக, தான் கலந்து கொள்ளும் பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறி வருகிறார். அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ படம் வெளியானது. அதில், வடிவுக்கரசி நடித்திருந்தார். அந்த படத்தின் விழாவில், தன்னை ‘நல்ல நடிகை நல்ல நடிகை’ என்று பலரும் பாராட்டுவதாகவும், தனக்கு பாராட்டு தேவையில்லை என்றும், படங்களில் நடிக்க வாய்ப்பு தேவை என்றும் கூறியிருந்தார். தனக்கு பாராட்டுகளை விட இப்போது வாய்ப்புகளை தேவை என்பதை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். மேலும், இயக்குநர்கள் தங்களை போன்ற மூத்த நடிகர்களை படங்களில் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என்பதையும் கூறியிருந்தார்.
மேலும் படிக்க | சூர்யா சாென்ன ஒரே வார்த்தை..உடனே காதலுக்கு ஓகே சொன்ன சிவகுமார்! Flashback
சமூக வலைதளங்களில் பரவிய செய்தி!
நடிகை வடிவுக்கரசி, காலமாகி விட்டதாக சமூக வலைதளங்களில் பல பேர் பொய் செய்திகளை பரப்பி வந்துள்ளனர். இதைக்கேட்டு சில ஊடகவியலாளர்கள், வடிவுக்கரசிக்கே போன் போட்டு அவர் குறித்து விசாரித்திருக்கின்றனர். அவர்களிடம் தான் நன்றாக இருப்பதாகவும், தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்றும், இப்படி பல பேர் தன் மீது அக்கறை செலுத்தும் போது தனக்கு என்ன ஆகிவிடப்போகிறது என்றும் கூறியிருந்தார்.
சில யூடியூப் சேனல்களும், சினிமா செய்திகளை வெளியிடும் சமூக வலைதள பக்கங்களும் தங்களுக்கு வியூசும் ஃபாலோவர்ஸும் வரவேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட பொய் செய்திகளை பரப்பி, பிரபலம் தேடிக்கொள்கின்றனர். சொல்லப்போனால், இயக்குநர் பாரதிராஜா இறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் இறந்து விட்டதாக அடிக்கடி பொய் செய்திகள் பரவி வந்தது. இவர்களின் இந்த நடவடிக்கைகளினால் மக்கள் பலர் எது உண்மை, எது பொய் என்பதையே தெரியாமல் விழிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை தடுக்க, கண்டிப்பாக வீண் வதந்திகளை பரப்புவர்கள் அதை நிறுத்த வேண்டும். அதாேடு, அதை பார்ப்பவர்களும் எது உண்மை செய்தி என்பதை விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | "என் மாமனார் எனக்கு உதட்டில்தான் முத்தம் கொடுப்பார்..” கருணாஸ் கொடுத்த பேட்டி!