• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /"என் மாமனார் எனக்கு உதட்டில்தான் முத்தம் கொடுப்பார்..” கருணாஸ் கொடுத்த பேட்டி!

"என் மாமனார் எனக்கு உதட்டில்தான் முத்தம் கொடுப்பார்..” கருணாஸ் கொடுத்த பேட்டி!

சமீபத்தில், நடிகர் கருணாஸ் தன் அரசியல் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேட்டியளித்துள்ளார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 18, 2026, 13:41 IST|Updated: Sep 18, 2026, 13:54 IST
joinshare
"என் மாமனார் எனக்கு உதட்டில்தான் முத்தம் கொடுப்பார்..” கருணாஸ் கொடுத்த பேட்டி!
Image Credit: Karunas | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ் திரையுலகின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர், கருணாஸ். இவர், சமீபத்தில் தான் நடித்த படங்களின் ப்ரமோஷனுக்காக சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய அரசியல் வாழ்க்கை குறித்து பேசியதோடு, தன்னுடைய வாழ்க்கை குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

கூவத்தூர் குற்றச்சாட்டுகள்…

நடிகர் கருணாஸ், தன் மீதிருந்த ஆதாரமற்ற குற்றாச்சாட்டுகளுக்கு பதிலளித்திருக்கிறார். குறிப்பாக கூவத்தூர் குற்றுச்சாட்டுகளை பேசியிருக்கிறார்.

“அங்கிருந்த ஒரே முகம் கருணாஸ்தான் என்றவுடன் பலர் செய்திகளை எழுதி, பொய்யாக பரப்பினர். இதை சொன்னவுடன் மக்கள் நம்பிவிட்டார்கள். இதனால், ’நம் மக்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து விட்டனரா?’ என்று எனக்குள் தோன்றியது. அப்போது என் குடும்பத்தினர் அதனால் பாதிக்கப்பட்டனர். இதனால் எனக்கு வேதனையாக இருந்தது.

25 வருட சினிமா வாழ்க்கையில், நான் குடிப்பேன், வம்பு வளர்ப்பேன் என்பதை தாண்டி என்னை பற்றி ஏதாவது எழுதியிருக்கிறார்களா? ஏன் என்றால் நான் அடிப்படையில் பெண்கள் விஷயத்தில் ரொம்ப ஒழுக்கமானவன்” என்று கூறியிருக்கிறார்.

அந்த சமயத்தில், கருணாஸ் ஜூனியர் ஆர்டிஸ்ட் பெண்களை அழைத்து கூவத்தூரில் விட்டதாக சிலர் செய்திகளை எழுதினர். இது குறித்து பேசிய போதுதான் அவர் அந்த பொய் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பியது குறித்து வேதனை தெரிவித்தார்.

தான் பணக்கஷ்டத்தில் இருந்த போது “இவன் இப்படியே குடிச்சு குடிச்சு போயிடுவான், பைத்தியம் ஆயிடுவான்” என்று கூறினார்கள் என்று கூறிய அவர், அத்துடன் நான் அந்த கடனை முடிக்கும் வரை தண்ணி அடிக்கவே இல்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | அஜித்தின் ‘டேர் டெவில்’ ஷூட்டிங் ஆரம்பிப்பது எப்போது? வெளியான அப்டேட்!

“மாமனார் உதட்டில் முத்தம் கொடுப்பார்..”

தன் மனைவி கிரேஸ் குறித்து, கருணாஸ் பேசிய விஷயங்கள் நெகிழ வைக்கும் வகையில் இருக்கிறது. தன் மீது அனைவரும் நம்பிக்கை இழந்த நேரத்தில், தன்னுடன் நின்ற ஒரே ஆள் கிரேஸ்தான் என்று கூறினார். தன் மனைவி, தன் பிள்ளைகள், தன் மனைவியின் தாய்-தந்தை, மனைவியின் தங்கைகள் என அனைவரையும் ஒரே குடும்பமாக பார்ப்பதாக தெரிவித்தார்.

தன் மாமனார் குறித்து பேசிய கருணாஸ், அவருக்கு 84 வயதாவதாகவும், அவர் பெயர் பென்ஜமின் என்றும்  கூறினார். தான் அவரிடம் ஆசீர்வாதம் வாங்க அவரது கால்களை தொட்டு வணங்கி எந்திருக்கும் போது, அவர் தன் உதட்டில்தான் முத்தம் கொடுப்பார் என தெரிவித்தார். “என் மாமனார் எனக்கு உதட்டில்தான் முத்தம் கொடுப்பார். ரொம்ப அருமையான மனிதர் அவர். ஒரு சில பேருக்கு ஒரு ஆணும் ஆணும் உதட்டில் முத்தம் கொடுத்துக்கொண்டால் அது பார்ப்பவர்களுக்கு எவ்வளவு அருவருப்பாக இருக்கும்? ஆனால் எனக்கு அப்படி எதுவும் இருக்காது. அவர் எனக்கு கொடுக்கும் அந்த முத்தம் அன்பின் மிகுதி மட்டுமேயன்றி வேறு எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.

தன் குடும்பமே அன்பால் நிறைந்தது என்று கூறிய அவர், தன்னுடன் பழகுபவர்களுக்கு மட்டுமே தன்னை பிடிக்கும் என்று கூறியிருந்தார். தான், யாருக்கும் பிடிக்க வேண்டும், பிடிக்க கூடாது என்பதற்காகவெல்லாம் தான் எதையும் செய்ய மாட்டேன் என்பதையும் கூறினார்.

மேலும் படிக்க | சூர்யா சாென்ன ஒரே வார்த்தை..உடனே காதலுக்கு ஓகே சொன்ன சிவகுமார்! Flashback

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema