இந்திய திரையுலகின் ஸ்டார் ஜோடிகளாக இருப்பவர்கள்தான், சூர்யாவும் ஜோதிகாவும். 5 வருட காதலுக்கு பின்னர், திருமணம் செய்து கொண்ட இவர்கள் சமீபத்தில் தங்களின் 20வது வருட திருமண நாளை கொண்டாட வித்தியாசமான வழியை தேர்வு செய்தனர். இருவரும் அந்த நாளில், இன்னொரு முறை திருமணம் செய்து கொண்டனர்.
சூர்யாவும் ஜோதிகாவும் 2006ஆம் ஆண்டு தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். கிட்டத்தட்ட 5 வருடம் காதலித்த இவர்கள், ஒரு வழியாக இரு வீட்டாரையும் சம்மதிக்க வைத்த பிறகு திருமணம் செய்தனர். இவர்களின் திருமணம் இப்போது வரை ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்படுவதற்கு காரணம், இவர்களின் எண்ணிலடங்கா காதலும், அது குறித்து இவர்கள் ப்ரைவேட்டாக இருப்பதும்தான்.
சூர்யாவிற்கும் ஜோதிகாவிற்கும் தற்போது தியா-தேவ் என இரு பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்த சமயத்தில் இவர்கள் இருவரும் தங்களின் 20வது திருமண நாளையொட்டி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இந்த வீடியோவை அவர்கள் இருவரும் தங்களின் இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டனர். இதை பார்த்த ரசிகர்கள், “வாழ்ந்தா, இந்த மாதிரி காதலிச்சு வாழனும்” என்று கூறி வருகின்றனர்.
இந்த திருமணம் நடந்திருக்கும் சமயத்தில், சிவகுமார் இவர்களின் காதல் குறித்து எப்போதோ பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
ஒரு பிரபல தனியார் ஊடக நிறுவனத்திற்கு சில மாதங்களுக்கு முன்பாக ராதிகாவும் சிவகுமாரும் ஒன்றாக நேர்காணல் கொடுத்திருந்தனர். அதில், ராதிகா சூர்யா-ஜோதிகாவுடன் அவர்களின் பணி வாழ்க்கையின் ஆரம்பத்தில் அவர்களுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசியிருந்தார். அப்போது, ஷூட்டிங் நடக்கும் போது ஜோதிகா ஒரு புறம் அமைதியாகவும், சூர்யா ஒரு புறமும் அமைதியாக இருப்பார்கள், நான்தான் சூர்யாவிடம் சென்று ஜோதிகாவிட்ம பேச சொன்னேன் என்று கூறியிருந்தார். இதை கேட்ட சிவகுமார், அவர்கள் இருவரை சேர்த்து வைத்த அய்யோக்கிய பெண்ணே இவர்தான் என்று கூறினார்.
தொடர்ந்து, சூரியாவின் காதலுக்கு தான் ஒப்புக்கொண்டது எப்படி என்றும் அவர் பேசியிருந்தார். ஜோதிகா மீதான காதல் குறித்து சிவகுமார் தன்னிடம் பேசும் போது “எங்களுக்கு நீங்கள் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால், நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று சூர்யா கூறினாராம். இதையடுத்து, சரி என அவர்களின் காதலுக்கு தான் சல்யூட் அடித்து விட்டதாக சிவகுமார் கூறியிருந்தார்.
குழந்தைகள் வளர்ந்த பின்பு, அவர்கள், அவர்களுடைய வாழ்க்கை குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சூர்யாவும் ஜோதிகாவும், பூவெல்லாம் கேட்டுப்பார், மாயாவி, பேரழகன், உயிரிலே, காக்க காக்க, சில்லுன்னு ஒரு காதல் என பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். இதுதான், அவர்கள் காதல் வளரவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், திருமணத்திற்கு பிறகு ஒன்றாக நடித்த இவர்கள் இருவரும் அதற்கு பின்பு எந்த படத்திலும் ஒன்றாக நடிக்கவே இல்லை. இருவருக்கும் ஒன்றாக சேர்ந்து நடிக்க விருப்பம் இருந்தாலும் யாருமே அவர்களுக்கான கதையை கொண்டு வரவில்லை என்கின்றனர்.