SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பிக்பாஸ் 10 : ஜேசனுடன் நெருக்கம்..என்னை குறை சொல்ல நீங்கள் யார்? சாந்தினி அதிரடி!

பிக்பாஸ் ஜேசனுடன் சாந்தினி நெருக்கமாக இருந்ததாக சர்ச்சை உருவானதை அடுத்து, அதற்கு அவரே விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Written By Yuvashree M
Published: Oct 24, 2026, 01:41 PM IST | Updated: Oct 24, 2026, 01:48 PM IST
Join

பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில், நடிகை சாந்தினி போட்டியாளர்களுள் ஒருவராக இருந்தார். ஆனால், சமீபத்தில்தான் அவருக்கு வாக்குகள் குறைவாக இருந்த காரணத்திற்காக, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இந்த சமயத்தில், அவர் வீட்டிற்குள் இருந்த போது ஜேசனிடம் நடந்து கொண்ட விதம் பற்றி பலரும் பேசி வந்தனர். இது குறித்து அவர் பதிலளித்திருக்கிறார்.

பிக்பாஸ் 10:

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்றாக இருக்கிறது, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 10வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில், மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு போட்டியாளர்தான் சாந்தினி.

தமிழில் சித்து பிளஸ் 2, நான் ராஜாவாக போகிறேன் போன்ற சில படங்களில் மட்டுமே நடித்திருக்கும் அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த போது, இவர் கேம் எப்படியிருக்கும் எனும் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் அவரது கேம் ப்ளேவை பார்த்த ரசிகர்களுக்கு வீணானது.

ஜேசனுடன் நெருக்கம்..?

பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளரான ஜேசன், நாமினேஷன் பாஸ்-ஐ வென்றிருந்தாலும் அவர் சாந்தினிக்கு ஆதரவாக செயல்பட்டிருந்ததால் இருவருக்குள் நெருக்கம் அதிகமானதாக ரசிகர்கள் கூறி வந்தனர். இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பது, வெளியில் தவறாக பேசப்பட்டது. இருவரும் திருமணமானவர்கள் என்பதால், மக்கள் இருவரையும் வைத்து கொச்சையான வகையில் மீம்ஸ் பதிவிட்டு வந்தனர்.

சாந்தினி பேட்டி!

நடிகை சாந்தினி, தன்னையும் ஜேசனையும் வைத்து தவறாக வந்த மீம்ஸ்களுக்கு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பதிலடி கொடுத்திருக்கிறார். சமீபத்தில் நாமினேஷனில் சிக்கி, வாக்குகள் குறைவாக பெற்றதால் அவர் வீட்டை விட்டு எவிக்ட் செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் வரிசையாக பேட்டி கொடுத்திருப்பதை அடுத்து அதில் அவரிடம், ஜேசனுடனான நெருக்கம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும் படிக்க | வசூலில் அடிச்சுத்தூக்கிய ஜெயிலர் 2 படம்! மொத்தம் எத்தனை கோடி தெரியுமா?

இதற்கு பதிலளித்த சாந்தினி, “திருமணமான பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு சட்டம் ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார். மேலும், திருமணமான பெண்கள், சிரிக்க கூடாதா? மற்றவர்களை பார்த்து பேசக்கூடாதா? ஏன் பெண்களுக்கு மட்டும் இந்த சமூகத்தில் இத்தனை கட்டுப்பாடுகள்? ஜேசனும் என்னுடன் தானே பேசிக்கொண்டிருந்தார், ஆனால் அவரைப்பற்றி எந்த விமர்சனமும் எழவில்லையே? அவரும் திருமணம் ஆனவர் தானே? என்று கேட்டிருக்கிறார். தொடர்ந்து, தான் அவரை பார்த்து பேசும்போது அவரை பற்றி யாரும் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று கேட்டு, ஒரு பெண்ணை பற்றி தவறாக பேச நீங்கள் யார்? என்று கேட்டிருக்கிறார்.

ஜேசனிடம் பிடித்தது..

நடிகை சாந்தினி, தன்னிடம் ஜேசன் முதன் முதலில் வந்து பேசிய போதே தன் மனைவியை பற்றி பெருமையாக பேசியதாகவும், அவர் மீது நல்ல அபிப்ராயத்தை அது ஏற்படுத்தியதாகவும் அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார். மேலும், எப்போதும் தன்னிடம் அவர் அவருடைய மனைவியை பற்றி பேசியதாகவும், தங்களுக்குள் இருப்பது ஒரு தூய்மையான நட்பு மட்டுமே எறும் தெரிவித்திருந்தார். மேலும் இருவருக்குள்ளும் இருப்பது Bro Codeதான் என்றும் தெரிவித்திருந்தார்.

சாந்தினியின் கணவர் யார்?

நடிகை சாந்தினி, பிரபல நடன இயக்குநரும் சீரியல் நடிகருமான நந்தாவை காதலித்து 2018ல் திருமணமும் செய்து கொண்டார்.  இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன் 8 வருடங்கள் வரை காதலித்து வந்தனர். இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | திருமணத்திற்காக கெஞ்சிய ராஷ்மிகா? விஜய் தேவரகொண்டாவை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்..

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES