SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பிக்பாஸ் 10 : ஒரே நாளில் 2 பேர் எவிக்‌ஷன்! ரசிகர்களுக்கு அதிர்ச்சி..யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதையடுத்து, இந்த சீசனில் இருந்து ஒரே நாளில் 2 பேர் எவிக்ட் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 15, 2026, 13:35 IST | Updated: Nov 15, 2026, 13:50 IST
Image Credit: Bigg Boss Tamil 10 Eviction | X Page
Join

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இந்த வாரம் வீக் எண்ட் எபிசோட் என்பதால் இன்று ஒரே நாளில் இருவர் எவிக்ட் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் யார் யார் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

பிக்பாஸ் 10 தமிழ்:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் ஆரம்பித்த 60 நாட்களுக்கும் மேல் ஆகி விட்டது. இதில் எப்போதும் போல அல்லாமல் சற்று வித்தியாசமாக காமன் மேனில் இருந்தும் சிலர் உள் நுழைந்தனர். தற்போது அதில் ஜேசன், முனியம்மா மட்டும் இன்னும் வீட்டிற்குள் இருக்கின்றனர். இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும், அவர்களின் பர்ஃபாமன்ஸ் ஆங்காங்கே ஆடிவாங்கி வருகிறது.

வாரா வாரம், விஜய் சேதுபதியிடம் போட்டியாளர்கள் பாரபட்சமே இல்லாமல் வாங்கிக்கட்டிக்கொண்டு வருகின்றனர் என்பதை அனைவருக்கும் தெரியும். அப்படி இந்த வாரம் ஜேசன் தன்னுடைய கேம் ப்ளே மற்றும் பேசிய விதத்திற்காக நன்றாக திட்டு வாங்கினார். கூடவே, சீரியல் நடிகையான சாத்திகாவிற்கும் திட்டு விழுந்தது.

மேலும் படிக்க | 82 வயது மூதாட்டியுடன் 28 வயது நடிகர் ஜேடன் ஸ்மித்திற்கு காதலா? உண்மை என்ன?

இருவர் எவிக்‌ஷன்..?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீக் எண்ட் எபிசோட் நடக்கிறது. இந்த எபிசோடில்தான் இருவர் எவிக்ட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்‌ஷ்னில், அஸ்மிதா மற்றும் அக்‌ஷிதா ஆகியோர் வெளியேறினார். இதையடுத்து இந்த வாரம், அவினாஷ் அஷோக் மற்றும் முத்தழகி உள்ளிட்ட இருவர் வெளியேறுவதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே பலம் வாய்ந்த போட்டியாளர்களாக இருந்தனர். இவர்களில் அவினாஷின் கேம் ப்ளே பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானாலும், இது நாள் வரை வீட்டில் இருந்தார். முத்தழகியும் ஸ்மார்ட் ஆக விளையாடி வந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக இன்விசிபிளாக இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மக்கள் ஆதரவு அதிகம் இருப்பது யாருக்கு?

பிக்பாஸ் ரசிகர்களுக்கு இந்த சீசனில் அதிகமாக என்டர்டெயின் செய்தவர்களாக ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர். முதலில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நாளில் இருந்து முனியம்மா தன்னுடைய இன்னொசெண்ட் பேச்சால் பலரையும் ஈர்த்துள்ளார். அது கூடவே, ஜேசனும் நல்ல ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். வைல்ட் கார்ட் மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த டிடிெஎப் வாசன், தன்னுடைய ஹீஸ்ட் கேம் ப்ளேவால் பலரையும் ஈர்த்தார். இவருக்கு அடுத்த நிலையில் லக்ஷ்மி பிரியா இருக்கிறார்.

மேலும் படிக்க | மூத்த தெலுங்கு நடிகர் கிரிபாபு காலமானார்! சோகத்தில் தென்னிந்திய திரையுலகம்..

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES