SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பிக்பாஸ் 10: எதிர்பாராத டபுள் எவிக்ஷன்! ரசிகர்கள் அதிர்ச்சி..யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வாரம் 2 பேர் டபுள் எவிக்ஷனில் வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 22, 2026, 11:32 IST | Updated: Nov 22, 2026, 11:41 IST
Image Credit: Bigg Boss 10 Tamil | X Page
Join

தமிழ் நிகழ்ச்சிகளில் அதிக கவனம் பெற்ற நிகழ்ச்சியாக இருக்கிறது, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 10வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சமயத்தில், ஃபைனல்ஸிற்கான போட்டிகள் மட்டும் டாஸ்குகளும் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

பிக்பாஸ் 10 :

ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் காமன் மேனாக சிலரும் உள் நுழைந்துள்ளனர். அதில் முனியம்மா மற்றும் ஜேசன் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அனைத்து சீசன்களை போலவும், இந்த சீசனிலும் பல்வேறு டாஸ்குகள், பிக்பாஸின் வித்தியாசமான அணுகுமுறை உள்ளிட்டவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த சமயத்தில், இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பது குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.

டோஸ் வாங்கிய முனியாம்மா..!

பிக்பாஸின் இந்த வார இறுதியில் எப்போதும் விஜய் சேதுபதியால் பாராட்டப்படும் முனியம்மா செம்ம டொஸ் வாங்கினார். அவருக்கும் அன்சருக்கும் இடையே நடந்த உணவு சண்டை பற்றிய விவாதம் பேசுபொருளாக மாறியிருந்தது.

அதில், முனியம்மாவிடம்  உங்களுக்கு ஆதரவாக இருந்தால் நல்லவர்கள், இல்லையென்றால் கெட்டவர்களா..? என விஜய் சேதுபதி கேட்க அதற்கு முனியம்மா வாயடைத்து நின்றார். பின்னர், லட்சுமி பிரியா பற்றி “அவர் என்னிடம் பாகுபாடுடன் பழகுகிறார்..” என்று முனியம்மா சொல்ல, அதற்கு விஜய் சேதுபதில், “நீங்களும்தான் அவர்கள் பொம்பளையே இல்லை என்றீர்கள்..” என கேட்டார். மொத்தத்தில், இந்த வாரம், முனியம்மாவிற்கு சாதமான வாரமாக இல்லை என்பது தெரிகிறது.

மேலும் படிக்க | தொட்டு பேசிய மிஷ்கின்..Uncomfortable ஆன கீர்த்தி சுரேஷ்? அவரே கொடுத்த பதில்..!

எதிர்பாராத எவிக்‌ஷன்கள்!

இந்த சீசன் பிக்பாஸ், இன்னும் ஓரிரு வாரங்களில் முடிய இருக்கிறது. இதனால், எப்படியாவது தாங்கள் இதில் வெற்றி பெற்று விட வேண்டும் என்கிற முனைப்போடு, இதில் பலரும் முன்னேறி போராடி வருகின்றனர். அதிலும் ஜேசன், டிடிஎஃப் வாசன், லக்‌ஷ்மி பிரியா, முனியம்மா உள்ளிட்ட பலரும் தனித்துவமாக தெரிகின்றனர்.

இவர்களை தாண்டி, சாத்விகா, முகேஷ் உள்ளிட்ட போட்டியாளர்களும் நன்றாகவே விளையாடி வருகின்றனர். இதில், இந்த வார எவிக்‌ஷனுக்காக போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர்களில் இருந்து இருவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர்.

இந்த வாரம், சாத்விகா மற்றும் முகேஷ் இருவரும் பிக்பாஸ் வீட்டிலிருந்து எவிக்ட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக இருவரும் பேசுபொருளாக இருந்ததை அடுத்து, தற்போது இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் எனும் தகவல் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

அடுத்த வாரங்களில் நடக்கப்போவது என்ன?

பிக்பாஸில் தற்போது Finaleக்கான பில்ட் அப் வாரம் நிகழ்ந்து வருகிறது. இதற்கடுத்து இன்னும் சில நாட்களில் யார் டிக்கெட் டு ஃபினாலே வாங்கப்போகிறார் என்பது தெரிய வந்து விடும். இதற்கு முன்னர், பிக்பாஸின் குரலே ஒலிக்காமல், போட்டியாளர்கள் தங்களுக்குள்ளேயே யார் பிக்பாஸ் என்பதை தேர்ந்தெடுத்து நடத்திக்கொள்ளும் டாஸ்கும் கொடுக்கப்பட்டது. இதில் அடாவடி மற்றும் வினோத் பாபு உள்ளிட்டோர் நன்றாக விளையாடியதாக ஹவுஸ் மேட்ஸ் தெரிவித்திருந்தனர்.

மேலும் படிக்க | அனிருத்-காவ்யா மாறன் ரிசப்ஷன்..! தனுஷ்-SK எங்கே? ஆளையே காணுமே..காரணம் என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES