• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /பிக்பாஸ் ராஜு இயக்கி, நடிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படம்! ஷூட்டிங் ஸ்டார்ட்

பிக்பாஸ் ராஜு இயக்கி, நடிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படம்! ஷூட்டிங் ஸ்டார்ட்

பிக்பாஸ் ராஜு ஜெயமோகனின் இயக்கி, நடிக்கும் டார்க் ஹியூமர் கதையான ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியது.

Written ByYuvashree M
Published: Sep 21, 2026, 06:12 PM IST|Updated: Sep 21, 2026, 06:22 PM IST
joinshare
பிக்பாஸ் ராஜு இயக்கி, நடிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படம்! ஷூட்டிங் ஸ்டார்ட்
Image Credit: BB Raju Jeyamohan | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஆஸ்பயர் உபுண்டு பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியது. பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளரும் நடிகருமான ராஜு ஜெயமோகன் இப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார். சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது படக்குழு தென்காசியின் அழகிய இயற்கைச் சூழலில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மொட்டை மற்றும் இடிந்த கரை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘ஆல்மோஸ்ட் நல்லவன்'

‘ஆல்மோஸ்ட் நல்லவன்' திரைப்படம் டார்க் ஹியூமர் ஜானரை சேர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமான அரங்குகள் மற்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட செட்டில் நடைபெறாமல் கதையின் உண்மைத்தன்மையை வலுப்படுத்தும் வகையில் மலை, காடுகள் என இயற்கைச் சூழலில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. மேலும், படப்பிடிப்பு நடைபெறும் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த உள்ளூர் மக்களையும் படத்தில் நடிக்க வைத்து, கதைக்கு கூடுதல் இயல்புத்தன்மையைச் சேர்த்து வருகிறது படக்குழு.

இது குறித்து இயக்குநரும் நடிகருமான ராஜு ஜெயமோகன் பகிர்ந்து கொண்டதாவது, “‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தில் இயற்கையை முக்கியமான ஒரு பகுதியாகக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பினோம். செட்டிற்குள் படப்பிடிப்பு நடத்துவதற்கு பதிலாக, ரியல் லொகேஷனில் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். இதனால் மழை, காடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் இவை அனைத்தும் கதையின் ஒரு பகுதியாக உள்ளன. நாங்கள் படப்பிடிப்பிற்காக எந்தப் பகுதிக்குச் சென்றாலும், அந்தந்த இடங்களைச் சேர்ந்த மக்களையும் படத்தில் நடிக்க வைக்கிறோம். தற்போது தென்காசியில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது அனைத்து வயதினரையும் கவரும் டார்க் ஹியூமர் திரைப்படம். எங்கள் தயாரிப்பாளர்களான சுதன் சுந்தரம் சார் மற்றும் ஹெச். வினோத் சார் இருவரின் ஆதரவால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்து வருவது மகிழ்ச்சி” என்றார்.

’ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தில் திறமையான நடிகர்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். துஷாரா விஜயன், தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல், சத்யராஜ் இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யராஜ் இதுவரை நடித்துள்ள 250-க்கும் மேற்பட்ட வித்தியாசமான தோற்றங்களுக்குப் பிறகும், இப்படத்திற்காக இதுவரை பார்த்திராத புதிய, சவாலான தோற்றத்தை ஏற்று நடித்துள்ளார்.

ராஜு ஜெயமோகன்:

இயக்குநர்கள் பாக்யராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜு ஜெயமோகன், ’ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அதேசமயம், இப்படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஆஸ்பயர் உபுண்டு பிலிம்ஸ் சார்பில் ஹெச். வினோத் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

மேலும் படிக்க | உள்ளாடையுடன் நடிக்க..ராதிகா ஆப்தேவை கட்டாயப்படுத்திய படக்குழு! பகீர் சம்பவம்..

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema