பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முத்துக்குமரன் கடந்த சில வாரங்களாகவே கடும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்த சமயத்தில் இவருக்கு திருமணம் ஆகி விட்டதாக புதிதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முத்துக்குமரன், ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து, பின்னர் ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ என்கிற நிகழ்ச்சியில் பேச்சாளராக அறிமுகமாகி மக்களின் கவனம் ஈர்த்தார். பின்பு, அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் போட்டியாளராக களமிறக்கினர். ஆரம்பத்தில் இருந்தே பலம் வாய்ந்த போட்டியாளராக இருந்த இவர், இறுதியில் டைட்டிலும் வென்று விட்டார்.
அனைத்தும் முத்துக்குமரனுக்கு சரியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் அவர் மீது பெரிய குற்றச்சாட்டை முன்வைத்து, பெண் ஒருவர் வீடியோக்கள் பலவற்றை வெளியிட்டார். முத்துக்குமரனும் தானும் கடந்த சில நாட்களாக நெருங்கி பழகி வருவதாக கூறிய அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி தன்னுடன் உறவு வைத்துக்கொண்டதாக குற்றம் சாட்டினார்.
அந்த பெண், தான் முத்துக்குமரனால் ஏமாற்றப்பட்டதாக கூறி வீடியோ வெளியிட்டு விட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதற்குள்ளாக அவர் காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில், முத்துக்குமரனுக்கு எதிரான இந்த போரை நிறுத்த மாட்டேன் எனவும், தனக்கு நியாயம் கிடைக்க போராடுவேன் என்றும் தெரிவித்திருக்கும் அவர், தொடர்ந்து அவருடன் பேசிய மெசஜ்களையும் ஆடியோக்களையும் ஸ்கிரீன் ஷாட்டாக வெளியிட்டு வருகிறார்.
முத்துக்குமரன், தன்னை சுற்றி வரும் இந்த சர்ச்சைகள் குறித்து இதுவரை வாய் திறக்காமல் இருக்கிறார். ஒரு தனியார் சேனலிடம் இது குறித்து உரையாடிய போது, தானும் அந்த பெண்ணும் வெறும் நண்பர்கள்தான் என்றும், அந்த பெண் ஏன் இப்படி செய்கிறார் என்பது தனக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த சமயத்தில், முத்துக்குமரன் குறித்த ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Muthukumaran Got Married ❤️😂 4 இட்லி சாப்டு வீடியோ போட்டதுக்கே Wahidha இவன வெச்சு செஞ்சுருச்சு, கல்யாணம் பண்ணிக்க போற மாதிரி promo Release பண்ணிருக்கான் இனி நம்ம பாயம்மா என்னென்ன பண்ணுமோ https://t.co/Pe4GiOB7kw
— Sneakyy (@Sneakyy4u) November 15, 2026
முத்துக்குமரன், யாரோ ஒரு பெண்ணிற்கு தாலி கட்டுவது போன்ற வீடியோதான் அது. இதை பார்த்து அனைவரும் முத்துக்குமரனுக்கு திருமணம் ஆகி விட்டதாக கூறி வருகின்றனர். ஆனால் உண்மை அது கிடையாது.
உண்மையில் முத்துக்குமரனுக்கு திருமணம் எல்லாம் நடக்கவில்லை. அவர் எப்போதோ யாருக்கோ தாலி கட்டுவது போன்று ஒரு தொடரில் நடித்திருக்கிறார். அதில் பார்க்க, இப்போது இருப்பது போல இல்லாமல் தாடியை ட்ரிம் செய்து, முடியை சிரிதாக வைத்துள்ளார். இப்போது நிறைய முடி வைத்துள்ளார். எனவேதான், இது சமீபத்திய வீடியோ இல்லை என்பது புலப்பட்டது. இப்படி சீரியல் ஷூட்டிங் வீடியாேவை அவருடைய கல்யாண வீடியோ என்று கூறி பலரும் அதனை வைரலாக்கி வருகின்றனர். உண்மையில் முத்துக்குமரன் சென்னையில் கூட இல்லாமல், தன் சொந்த ஊரில் இருப்பதாக கூறப்படுகிறது.
முத்துக்குமரன் மீது, அவருடைய சொந்த ஊரான காரைக்குடியில் உள்ள கல்லல் காவல் நிலையத்தில் வஹிதா புகார் அளித்திருக்கிறார். இது குறித்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டிருந்த அவர், தற்பாேது இன்னொரு சர்ப்ரைஸ் இருப்பதாக கூறி ஒரு பதிவையும் போட்டுள்ளார்.