கில்லி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்த நடிகைக்கு திருமணம் முடிந்துள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
சூப்பர் ஹிட் படமான ‘கில்லி’ திரைப்படத்தில், விஜய்க்கு தங்கையாக நடித்தவர் நான்ஸி ஜெனிஃபர். இவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
கில்லி விஜய் தங்கை
விஜய்யின் கெரியரில் மிகப்பெறிய ஹிட் அடித்த படமாக இருக்கிறது கில்லி. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நான்சி ஜெனிஃபர் எனும் நடிகை நடித்திருப்பார்.
2/5
நான்சி ஜெனிஃபர்
நான்சி ஜெனிஃபருக்கு 36 வயது ஆகிறது. இவர், கில்லி படத்தில் டீன் ஏஜ் பெண்ணாக புவனா எனும் கேரக்டரில் நடித்திருப்பார். இவரை விஜய் கில்லி படத்தில் அரிசிமூட்டை என செல்லமாக கலாய்ப்பார்.
3/5
36 வயதில் திருமணம்
பல அண்டுகள் சிங்கிளாக இருந்த ஜெனிஃபர், தற்போது இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார். இவர், கார்த்திக் என்பவரை திருமணம் செய்துள்ளார். சிம்பிளாக நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
4/5
நான்சி தொழிலதிபராக இருக்கிறார்
நான்சி ஜெனிஃபர், ஆரம்பத்தில்தான் சினி துறையில் இருந்தார். பின்னர் போக போக அவரே தனியாக தொழிலதிபராகவும் மாறிவிட்டார். ஆர்கானிக் சோப் உள்ளிட்ட அழகு சாதன பொருட்களை தயாரித்து வருகிறார்.
5/5
திருமண வரவேற்பு
முந்தைய நாள், இந்து முறைப்படி திருமணம் நடக்க, மறுநாள் திருமண வரவேற்பு நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.