SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

வரலாற்று சாதனை படத்தை ஜெயிலர் 2! ரூ.1000 கோடியை கடந்துடுமோ? மாஸ் காட்டும் ரஜினி..

ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் செய்திருக்கும் சாதனை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க.

Written By Yuvashree M
Published: Oct 26, 2026, 10:54 AM IST | Updated: Oct 26, 2026, 11:02 AM IST
Join

ரஜினிகாந்த் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் ஜெயிலர் 2. பட்டித்தொட்டியெங்கும் பரபரப்பாக இந்த படம் குறித்துதான் பேசி வருகின்றனர். இந்த சமயத்தில், இப்படம் செய்திருக்கும் சாதனை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

ஜெயிலர் 2:

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம்தான், ஜெயிலர் 2. இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, சுராஜ், எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். முதல் பாகத்திலும் பல கேமியோ ரோல்கள் இருந்தது போலவே இந்த பாகத்திலும் இருக்கிறது. இந்த சமயத்தில், இரண்டாம் பாகத்தில் அந்த கேமியோக்களை சரியாக உபயோகித்திருந்தனர்.

வசூல் சாதனை!

ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம், வெளியான 11 நாட்களில், பிரம்மாண்டமான தொகையை வசூலித்திருக்கிறது. அது மட்டுமல்லாமல், இப்படம் ரஜினியின் திரைவாழ்க்கையில் இன்னொரு புதிய மைல்கலையும் பதித்துள்ளது.

தமிழில் மட்டும் ஜெயிலர் 2 திரைப்படம் சுமார் 5683 காட்சிகளுக்கு மேல் ஓடி வருகிறது. தெலுங்கில் 1860 காட்சிகளும், இந்தியில் 4,195 காட்சிகளும், கன்னடத்தில் 216 காட்சிகளும் ஓடி வருகிறது.

இதன் மூலம், இந்திய அளவில் மொத்தம் 11 நாளில் மட்டும் இந்த படம் மொத்தம் ரூ.10 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. மொத்தமாக உலகளவில் ஜெயிலர் 2 திரைப்படம், சுமார் ரூ.710.35 கோடி அளவில் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

அதிக வசூல் செய்த திரைப்படம்..

ஜெயிலர் 2 திரைப்படம், வெளியான 11 நாளில் சுமார் 700 கோடியை கடந்துள்ளது, சாதனை படைத்துள்ளது. அதாவது, உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலில் ஜெயிலர் 2 படம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முந்தைய ரஜினிகாந்தின் திரைப்படமான 2.0 திரைப்படம்தான், உலகளவில் சுமார் ரூ.691 கோடியை கடந்திருந்தது. இதனால், தற்போது ரஜினிகாந்த் தன் படத்தின் சாதனையை தானே இன்னொரு படம் மூலம் முறியடித்திருக்கிறார்.

உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்:

ஜெயிலர் 1 - 710.35 கோடி (தமிழ்நாடு வசூல் மட்டும்)
2.0 - ரூ.691 கோடி
லியோ - ரூ.605.09 கோடி
ஜெயிலர் 1 - ரூ.604.75 கோடி
கூலி - ரூ.510 கோடி

ரூ.1000 கோடி அடிக்குமா?

இந்திய அளவில் வெளியாகி இருக்கும் படங்களில், பெரும்பாலான இந்தி படங்கள் ரூ.1000 கோடி வசூலை கடந்துள்ளன. தங்கல், பாகுபலி, புஷ்பா 2, துரந்தர், RRR, கேஜிஎஃப், ஜவான், பதான், கல்கி என இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மும்மொழி திரைப்படங்கள் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளன. தமிழில் இதுவரை ஒரு படம் கூட அப்படி ரூ.1000 கோடி வசூலை அடித்ததில்லை. தற்போது, ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி 11 நாட்கள் ஆகியிருக்கும் போதும் அதற்கு தியேட்டரில் வரும் வசூல் குறையவில்லை. இந்த சமயத்தில், ஜெயிலர் 2 திரைப்படம் செல்லும் வேகத்தை பார்த்தால் கண்டிப்பாக ரூ.1000 கோடி அடிக்கும் என திரை வட்டாரங்களில் இருந்து கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் அந்த ரூ.1000 கோடி வசூலை அந்த படம் அடிக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES