• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /“CM ஆக இருக்கும் என் தந்தைக்கு நன்றி” ஜேசன் சஞ்சய் ‘சிக்மா’ விழாவில் பேச்சு!

“CM ஆக இருக்கும் என் தந்தைக்கு நன்றி” ஜேசன் சஞ்சய் ‘சிக்மா’ விழாவில் பேச்சு!

இயக்குநர் ஜேசன் சஞ்சயின் முதல் படமான சிக்மா, ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. இதில், அவர் பேசிய க்ளிப்பிங்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Written ByYuvashree M
Published: Sep 20, 2026, 05:46 PM IST|Updated: Sep 20, 2026, 05:55 PM IST
joinshare
“CM ஆக இருக்கும் என் தந்தைக்கு நன்றி” ஜேசன் சஞ்சய் ‘சிக்மா’ விழாவில் பேச்சு!
Image Credit: Sigma Sanjay | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது.

நடிகர் சூரி, "அன்பு தம்பி சஞ்சய்க்கு பின்னால் அனைவரும் அன்பால் ஒன்று கூடியிருப்பதை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் அவர் ஜெயிக்க வேண்டும். லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் அண்ணன், தமிழ்குமரன் அண்ணன் இருவருக்கும் நன்றி. தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்து செல்லக்கூடியவர்கள். நடிகர் சந்தீப், ஃபரியா இருவரும் திறமையானவர்கள். சஞ்சய்க்கு என்னுடைய வாழ்த்து மட்டுமல்லாது கோடிக்கணக்கானவர்களின் அன்பும் வாழ்த்தும் இருக்கிறது. அவருடைய தன்மையான பண்பு அவரை பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும். எல்லோருடைய ஆசைக்காக சஞ்சய் ஹீரோவாக நடிக்கவும் வேண்டும். நன்றி".

இயக்குநர் ஜேசன் சஞ்சய், "நம் எல்லோர் வாழ்விலும் ஒரு சிக்மா மொமண்ட் கண்டிப்பாக இருக்கும். 'சிக்மா' படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒரு தேவை, சிக்கல் இருக்கும். அப்போது அவர்கள் எடுக்கும் ஒரு முடிவால் அவர்கள் வாழ்க்கையே மாறுவதுதான் 'சிக்மா'. இது என்னுடைய முதல் படம் என்பதால் எப்போதுமே ஸ்பெஷல். இந்த படத்தின் கதையை லைகா புரொடக்க்ஷன்ஸ் சுபாஸ்கரன் சாரிடம் சொன்னபோது எனக்கு 22 வயது. அந்த வயதில் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. அடுத்ததாக, தயாரிப்பாளராக தமிழ்குமரன் சாரிடம் கதை சொன்னதும், இந்த படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு ரிலீஸ் வரைக்கும் கொண்டு வந்து ஆதரவு கொடுத்ததற்கு நன்றி. சந்தீப் என்னுடைய முதல் பட ஹீரோ. திறமையானவர். 

மேலும் படிக்க | வடிவுக்கரசிக்கு என்ன ஆச்சு? உடல்நிலை குறித்து பரவிய வதந்தி..அவரே கொடுத்த விளக்கம்

இந்த படம் அவருடைய கரியரில் நிச்சயம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன். ஃபரியாவுக்கு தமிழில் இதுதான் முதல் படம். இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கும் இவருடைய நிஜ கேரக்டருக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. அந்த அளவுக்கு நேர்மையானவர், சுதந்திரமானவர். அவருக்கு தமிழில் இந்த படம் நிச்சயம் நல்ல வரவேற்பு கொடுக்கும் என உறுதியாக நம்புகிறேன். நடிகர்கள் ராஜூ சுந்தரம் மாஸ்டர் சம்பத் மற்றும் என்னுடைய தொழில்நுட்ப குழுவினர் எடிட்டர் பிரவீன் சார், டான்ஸ் மாஸ்டர் கல்யாண் சார், அனுஷா, இசையமைப்பாளர் தமன், என்னுடைய சித்தப்பா சஞ்சீவ் சார் என சிறப்பாக பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. தமன் இசையில் யுவன் சங்கர் ராஜா சார், சந்தோஷ் நாராயணன் சார், ஷான் ரோல்டன் பாடல் பாடியிருப்பது எனக்கு மகிழ்ச்சி. துல்கர் சல்மான் சார், ராஜமெளலி சார், பலருக்கும் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் சூரி சார் எல்லோருக்கும் நன்றி. என்னுடைய அம்மா, அப்பா, தங்கை திவ்யா எல்லோருக்கும் நன்றி. படம் அக்டோபர் 2 திரையரங்குகளில் வெளியாகிறது" என்றார். மேலும், முதல்வராக இருக்கும் தன்னுடைய தந்தைக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க | சிவாஜியின் மகள் சாந்தி காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema