83 வயதில் உயிரை மாய்த்துக்கொண்ட எம்.ஜி.ஆர் பட நடிகை! திரையுலகினர் அதிர்ச்சி..
தாய்லாந்து நாட்டை சேர்ந்த, மேட்டா ரூங்ராட் எனும் நடிகை எம்.ஜி.ஆருடன் சில படங்களில் நடித்திருக்கிறார். இவர், தற்போது தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுட்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.
தாய்லாந்தை சேர்ந்த மேட்டா ரூங்ராட் எனும் நடிகை, கிழக்காசிய நாடுகளில் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். இவர், தமிழில் மட்டுமன்றி ஒரு சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். சீன மற்றும் கொரிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சுமார் 200 படங்களுக்கும் மேல் நடித்து புகழ்பெற்ற் இவர், தன் 80களை தொட்ட நிலையில் விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
எம்.ஜி.ஆருடன் நடித்தவர்..!
1973ஆம் ஆண்டில் வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்தை எம்.ஜி.ஆரே இயக்கி நடித்திருந்தார். இப்படம், ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படத்தில் நடிகை மேட்டா ரூங்ராட் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். இவர், ஹீரோயின்களில் இவரும் ஒருவர். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பச்சைக்கிளி முத்துச்சரம் பாடல் மிகவும் பிரபலம். இவர், அந்த பாடலில் வருவார்.
உயிரை மாய்த்துக்கொண்டார்..!
மேட்டாவிற்கு, 83 வயதாகிறது. வயது முதிர்வு மற்றும் அல்சைமர் அதாவது ஞாபக மறதி நோய் காரணமாகவும், பிற உடல் நலக்குறைபாடுகள் காரணமாகவும் இவர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர், பேங்காங்க் நகரில் இருக்கும் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அவருடைய வீட்டின் கதவு சில நாட்களாக திறக்கப்படாததால், நேற்று போலீசார் வந்து கதவை உடைத்து திறந்து பார்த்துள்ளனர். அப்போது அவர், துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மேட்டாவின் மறைவையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.